ஐக்கிய தேசிய கட்சியும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும சர்வாதிகார ஆட்சியை முன்னெடுத்து செல்கின்றனர் என எதிர்க்கட்சி உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள் குடியேற்றம், கூட்டுறவு அமைச்சு மற்றும் வெகுஜன ஊடகத்துறை பற்றிய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர், மகிந்த ராஜபக்ச சர்வாதிகாரி அல்ல, அவர் சர்வாதிகாரி […]
Tag: ரணில்
பழையதை மறப்போம்! ரணில் நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை
நடந்த உண்மைகளை மறந்து, மன்னித்து புதிய வழியில் செல்வோமென மீண்டும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த ரணில், பழையதை மறப்போம் மன்னிப்போம் என கூறியிருந்தார். இக்கருத்து, பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கொழும்பிலுள்ள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலும் இக்கருத்தை மீண்டும் ரணில் வலியுறுத்தியுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்ப வேண்டுமென்றால், பழைய விடயங்களை மறந்து புதிய பாதையை […]
யாழ் போதன வைத்தியசாலையில் ரணில் செய்த செயல்!
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு நவீன முறையில் கட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதனை திறப்பதற்காக ரணில் விக்கிரமசிங் இன்று யாழ் வைத்தியசாலையில் சிறப்பு விருந்தினராக வந்து திறந்து வைத்துள்ளார்.
பலாலி விமானநிலையத்தில் ரணில் தலைமையில் கூடிய குழு
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி தொடர்பாகக் கலந்துரையாடுவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவினர் தற்போது விமா நிலையத்தில் கூடியுள்ளனர்.
மைத்திரி ரணில் தலைமையில் விஸ்வரூபம் எடுக்கவுள்ள புதிய கூட்டணி!
மைத்திரியின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் மகிந்தவின் சிறிலங்கா பொதுஜன முன்னணியும் இணைந்து பாரிய கூட்டணி உருவாக்க இரு கட்சிகளிடையே பேச்சு வார்த்தை நடைபெற்றுவருகிறது. நேற்று முன்தினம் இரவு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றன.சுமார் 2 மணித்தியாலங்கள் நடந்த இந்தப் பேச்சுக்களில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாசிறி ஜெயசேகர, […]
மின்சார லிப்டில் சிக்கி உயிருக்கு போராடிய ரணில்? அதிர்ச்சி தகவல்
நாடாளுமன்றத்தில் உள்ள மின்சார லிப்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிக்கித் தவித்ததாக நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற மின்சார லிப்டில் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிக்கிக் கொள்வதற்கு முன்னரே பிரதமரும் சிக்கியதாக அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த லிப்டில் இடையில் நின்றமை தொடர்பான அனைத்து காணொளிகளும் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும், சம்பவத்திற்கு முகம் கொடுத்த உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளவுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதுவொரு சூழ்ச்சி […]
நாளை தமிழ் முற்போக்கு கூட்டணியை சந்திக்கின்றார் ரணில்
தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் பிரதமருக்கும் இடையிலான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை இன்று அல்லது நாளை இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்தான விதம் தொடர்பாக, தமிழ் முற்போக்கு கூட்டணி அதிருப்தி வெளியிட்டிருந்தது. இதுதொடர்பாக கடந்த வாரம் பிரதமர் மற்றும் அமைச்சர்களான நவீன் திஸாநாயக்க, ரவி சமரவீர ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் அரசாங்கத்துக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற […]
சம்பந்தனின் சிறையில் ரணில்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் ரீதியில் சிறைப்பிடித்துள்ளது. அதன் காரணமாகவே பிரதமர் புதிய அரசியலமைப்பு உட்பட பல்வேறு விடயங்களுக்கு கூட்டமைப்பினருக்கு ஆதரவு வழங்கி வருகின்றார் என கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். பொதுஜன பெரமுன முன்னணியின் வெற்றி கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலிலே உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. 2020 ஆம் ஆண்டு ஒன்றிணைந்த எதிரணியினரே ஆட்சி பொறுப்பினை ஏற்பார்கள். ஐக்கிய தேசிய […]
ரணில் தலைமையில் கடுமையான தீர்மானம்
சிறிலங்கா அரசாங்கம் சார்ந்த விளம்பரங்கள் தொடர்பில் இறுக்கமான ஒரு நடைமுறையைப் பின்பற்றுவதற்கான யோசனையொன்றுக்கு நேற்றைய தினம் முடிவு எட்டப்பட்டுள்ளது. இதன்படி இலங்கையிலுள்ள தனியார் தொலைக்காட்சிகளுக்கு அரச விளம்பரங்களை வழங்குவதை குறைக்க திர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் இதனை ஒரு யோசனையாக இன்று நடைபெறவுள்ள வருடத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன. […]
சுமந்திரனுக்கு மிகப்பெரிய பரிசு கொடுத்து இன்பத்தில் ஆழ்த்திய ரணில்!
சமகால அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி பிரபலத்தினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வடக்கு அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு பதவியை பொறுப்பேற்குமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும் அந்தக் கோரிக்கையை நிராகரித்த சுமந்திரன் தனது ஆலோசனைக்கமைய தனது செயலாளர் மூலம் அமைச்சின் வேலைகளை செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். […]





