Tag: மைத்திரி

மைத்திரி- மோடியை சந்தித்தார்

இந்தியாவின் புதுடெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகியுள்ள அனைத்துலக சூரியசக்தி மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார். இன்று காலை புதுடெல்லியில் ஆரம்பமான குறித்த மாநாட்டில், 45 நாடுகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி மைத்திரியும் கலந்துகொண்டுள்ளார். மாநாட்டிற்கு வருகை தந்தவர்களை பிரதமர் மோடி வரவேற்றுள்ளார். இம்மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரி உரையாற்றியதோடு, அதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

மைத்திரி மஹிந்த

மைத்திரி, மகிந்த ஆதரவு அணிகள் மீளவும் சந்திப்பு!

மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆத­ரவு அணி­யும், மகிந்த ராஜ­பக்ச ஆத­ரவு அணி­யும் இன்னு­மொரு தடவை பேச்சு நடத்­த­வுள்­ளன என்று அறிய முடி­கின்­றது. இரு அணி­க­ளும் முன்­னர் நடத்­திய பேச்சு தோல்­வி­யில் முடிந்­தது. சில பௌத்த பிக்­கு­கள் மேற்­கொண்ட முயற்­சி­யின் பய­னாக இரு அணி­க­ளும் இன்று சந்­தித்­துப் பேச­வுள்­ளன என்று தெரி­ய­வ­ரு­கின்­றது. இந்­தச் சந்­திப்பு வெற்­றி­ய­ளிக்­கும் சாத்­தி­யக் கூறு­கள் மிகக் குறைவு என்று கட்­சித் தக­வல்­கள் தெரி­வித்­தன.

ஜனாதிபதி

மைத்திரியின் செயல் அரசியல் கைதிகளின் சிக்கலை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சி!

“அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 35 இற்கும் மேற்பட்ட பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து பெரிய போராட்டங்களை முன்னெடுத்திருந்தும்கூட, அவர்கள் சார்ந்த பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கு மாறாக ஏனைய சிலரை அழைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேசியதானது அரசியல் கைதிகளின் பிரச்சினையைத் திசை திருப்பும் மற்றும் நீர்த்துப்போகச் செய்யும் முயற்சியேயாகும்.” – இவ்வாறு பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து விடுத்துள்ள ஊடக […]

உண்ணாவிரதக் கைதிகளின் உடல்நிலை மிகவும் மோசம்!

வவுனியா மேல்நீதிமன்றத்தில் 4 வருடங்களாக இடம்பெற்ற வழக்கை சட்டமா அதிபர் அநுராதபுரம் மேல்நீதிமன்றத்துக்கு மாற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தமது வழக்கை மீளவும் வவுனியா மேல்நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு வலியுறுத்தியும் அநுராதபுரம் சிறைச்சாலையில் இராஜதுரை திருவருள், மதியழகன் சுலக்ஷன், கணேசன் தர்ஷன் ஆகிய மூன்று தமிழ் அரசியல் கைதிகளும் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் உடல்நிலை மீண்டும் மோசமடைந்ததையடுத்து சிறைச்சாலை வைத்தியசாலையில் நேற்றுமுன்தினம் இரவு சேர்க்கப்பட்டுள்ளபோதிலும் அங்கிருந்தவாறு உண்ணாவிரதப் போராட்டத்தைத் […]

கொழும்பு அரசியலில் அதிரடி திருப்பம்! அமைச்சர் விஜயதாசவை பதவியிலிருந்து தூக்கிய மைத்திரி

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவை பதவி நீக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி அளித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைய அவரது பதவி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பில் அமைச்சர் விஜயதாசவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறி செயற்பட்டதாக விஜயதாச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனால் அவர் அமைச்சரவைப் பொறுப்புக்களை வகிக்கத் தகுதியற்றவர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு […]

ரணிலுடன் இணைந்திருப்பதால் மைத்திரியை வெறுக்கின்றோம்! – மஹிந்த அணி விளக்கம்

“நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 106 ஆசனங்களைப் பெற்றதும் அந்தக் கட்சி தனித்து ஆட்சியமைப்பதற்கு ஜனாதிபதி அனுமதித்திருக்கவேண்டும். அதனுடன் இணைந்து கூட்டாட்சி அமைத்திருக்கக்கூடாது. அவ்வாறு செய்ததால் நன்மை ஐக்கிய தேசியக் கட்சிக்குத்தான். இதனால்தான் எம்மால் மைத்திரியின் தலைமைத்துவத்தை ஏற்று அவருடன் இணைந்து செயலாற்றமுடியாமல் உள்ளது.” – இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் […]

நல்லிணக்கம், சகவாழ்வுக்கான தேசிய கொள்கையை ஏற்றது அமைச்சரவை! – மைத்திரி, மனோ கூட்டாக சமர்ப்பிப்பு

நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தொடர்பான தேசிய கொள்கை பத்திரத்தை தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் என்ற முறையில் அமைச்சர் மனோ கணேசனும் கூட்டாக கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்பித்துள்ளனர். இந்த அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவை ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளது. அமைச்சரவை சம்பிரதாயத்தின்படி எதிர்வரும் 9ஆம் திகதி செவ்வாய்கிழமை நடைபெறவுள்ள அடுத்த அமைச்சரவை […]

மைத்திரி, ரணில், சம்பந்தன் திருமலையில் பத்திரகாளி அம்பாள் தரிசனம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் இன்று சனிக்கிழமை திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்துக்குச் சென்றனர். அவர்கள் அங்கு வழிபாட்டில் ஈடுபட்டதுடன் ஆலயத்தையும் சுற்றிப் பார்த்தனர்.

இந்தோனேசியாவுக்கு பறந்த மைத்திரி

இந்தோனேசியாவுக்கு பறந்த மைத்திரி

இந்தோனேசியாவுக்கு பறந்த மைத்திரி இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் ஆரம்பமாகியுள்ள இந்து சமுத்திர பிராந்திய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரி இன்று (திங்கட்கிழமை) காலை 7.30 மணியளவில் அந்நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். அரச தலைவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெறும் இம் மாநாட்டில், ஜனாதிபதி மைத்திரி நாளைய தினம் பங்கேற்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளின் அரச தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். அத்தோடு, இந்தோனேசிய ஜனாதிபதியையும் சந்திக்கவுள்ளார். இதேவேளை, […]