Tag: மலையக மக்களுக்கு

வடக்கு, கிழக்கு வாழ் மலையகத்தவர்களுக்கு தமிழரசுக் கட்சியில் பிரதிநிதித்துவம் வேண்டும்!

வடக்கு – கிழக்கில் உள்ள மலையக மக்களுக்கு தேர்தலின்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று மலையக மக்கள் ஒன்றியத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில், அந்தக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் ஆகியோரை நேற்று மாலை சந்தித்துக் கலந்துரையாடியபோதே மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கில் உள்ள மலையக மக்கள் […]

மலையக மக்களுக்கு மேலும் 10,000 வீடுகள்! – பிரதமர் மோடி உறுதி

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் மலையக மக்களுக்கு மேலும் 10,000 வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். ஹட்டன் – நோர்வூட் மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் சிறப்புரை நிகழ்த்துகையில், ஆயிரக்கணக்கான மலையக மக்களுக்கு முன்னிலையில் இந்திய பிரதமர் இவ் வாக்குறுதியை வழங்கியுள்ளார். இதன்போது பிரதமர் தொடர்ந்து உரையாற்றுகையில்- ”மலையக மக்களை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமை எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது. முதல் தடவையாக […]