ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை கொலை செய்வதற்கான கொலை சதி விசாரணை முடிவடையும் வரை பொலிஸ் அதிகாரத்தை தன்வசம் வைத்திருக்க தீர்மானித்துள்ளார் சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ராஜிதசேனாரட்ண இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தன்னை கொலை செய்வதற்கான சதி குறித்த விசாரணைகள் முடிவடையும் வரை பொலிஸ் அதிகாரத்தை தன்னிடம் வைத்திருக்க தீர்மானித்துள்ளார் என அமைச்சர் தெரிவித்துள்ளார். தன்னை கொலை செய்வதற்கான சதி முயற்சிகள் குறித்து நேர்மையான விசாரணைகளை முன்னெடுக்காததன் காரணமாகவே ரணில் […]
Tag: பொலிஸ்
பொலிஸ் பாதுகாப்பை கோரும் முதலமைச்சர்
பதவிக்காலம் நிறைவடைந்த பின்னரும் தமக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென வட.மாகாண முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட மூவர் விண்ணப்பித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் நாளை மறுதினம் புதன்கிழமை நள்ளிரவுடன் முடிவுக்கு வருகின்றது. இந்நிலையில் பொலிஸ் பாதுகாப்பினை பெற்றுக்கொண்டுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், எதிர்க்கட்சி உறுப்பினர் சி.தவராசா உட்பட மூவர், தமக்கு பதவி காலம் முடிவடைந்த பின்னரும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென விண்ணப்பித்து […]
மணல் ஏற்றிய உழவியந்திரம் கைப்பற்றப்பட்டது!!
அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றிய உழவியந்திரம் கைப்பற்றப்பட்டுள்ளதென்று பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன கிளிநொச்சி மாவட்டத்தின் பளைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இத்தாவில் பகுதியில் நேற்றுமுன்தினம் அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றிய உழவியந்திரம் கைப்பற்றப்பட்டது. சாரதியும் கைது செய்யப்பட்டார். சாரதியிடம் மேலதிக விசாரணை நடத்தப்பட்டு பொலிஸ் பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில் அவரை கிளிநொச்சி நிதிமன்றில் முற்படுத்ததுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனப் பளை பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன
தேர்தல் தொடர்பாக முதல் முறைப்பாடு!!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பிலான முதலாவது தேர்தல் முறைப்பாடு பொலிஸாருக்கு நேற்றுப் பதிவாகியுள்ளது. ஆரச்சிகட்டுவ பொலிஸ் பிரிவில் இந்த முறைப்பாடு பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி ருவன் குணசேகர தெரிவித்தார். பெயர் பதாகை ஒன்றுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பிலேயே அந்த முறைப்பாடு கிடைக்கப் பெற்றதாகவும், சம்பவம் தொடர்பில் ஆரச்சிகட்டுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்





