புதிய அரசமைப்பு தொடர்பில் அடுத்த ஆண்டு ஜனவரியில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதே அரசின் திட்டமாக இருப்பதால் அந்த முயற்சியை தோற்கடிப்பதற்காக தேசிய கூட்டணியொன்றை அமைக்கவேண்டும் என்ற தீர்மானம் கூட்டு எதிரணியின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பொது எதிரணி உறுப்பினர்கள் நேற்று முன்தினம் இரவு கொழும்பில் விசேட கூட்டமொன்றை ஏற்பாடுசெய்திருந்தனர். பங்காளிக்கட்சிகளின் தலைவர்களும் இதில் பங்கேற்றிருந்தனர். மாலை 5.30 மணிமுதல் இரவு 7.30 மணிவரை நடைபெற்ற […]





