ஹக்கர்களால் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது தனது கணக்கு பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் இன்று டுவிட்டர் பதிவினூடாக தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்காமல் இருந்த கருணா, புதிய அரசாங்கம் மாற்றப்பட்டதில் இருந்து பல்வேறு கருத்துக்களை கூறிவந்தார். குறிப்பாக அவர் சமூக வலைத்தளங்களில் (டுவிட்டர், முகநூல்) தனது கருத்துக்களை பதிவிட்டு […]





