பிரபல நடிகை குஷ்பு, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் என்பது தெரிந்ததே. அவர் தனது டுவிட்டரில் அவ்வப்போது பரபரப்பான டுவீட்டுகளை பதிவு செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் சற்றுமுன்னர் அவர் தனது டுவிட்டரில், ‘நாய் குரைச்சாலும் சூரியன் மறையப்போறதில்லை. புரிஞ்சுக்கிறவங்களுக்கு, சாரி, குலைக்குறவங்களுக்கு புரிஞ்சா சரி’ என்று பதிவு செய்துள்ளார். குஷ்புவுக்கு காங்கிரஸ் கட்சியிலேயே பல எதிரிகள் உள்ளனர். அவரை எப்போது கவிழ்க்கலாம் என்று […]
Tag: காங்கிரஸ்
காங்கிரஸ் வீழ்வதை பார்க்க முடியாது
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தனது பிரமதர் ஆசை குறித்தும், தலைவர் பதவியில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து, வரும் நாட்களில் கட்சியின் நிலை குறித்தும் பேசியுள்ளார். அவை பின்வருமாறு… காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து சோனியா காத்து விளக்கினார். மேலும் அந்த பதவியில் அவரது மகன் ராகுல் காந்தியை அமர்ந்தார். மேலும் கட்சியின் சில அடுத்த நகர்வுகளை பற்றி அவர் கூறியதாவது, நான் பிரதமர் ஆவது […]
மோடியின் சொந்த ஊரில் தோல்வியடைந்த பாஜக
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த ஊரான ஊஞ்சா சட்டசபைத் தொகுதியில் பாஜக அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளது. குஜராத், இமாச்சல பிரதேஷ் தேர்தல்களின் முடிவுகள் நேற்று வெளியானது. குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில் 99 இடங்களைப் பிடித்து பாஜக வெற்றி பெற்றது, 77 இடங்களைப் பிடித்து காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது. 68 தொகுதிகளைக் கொண்ட இமாச்சலில் பாஜக 44 இடங்களைப் பிடித்து வெற்றி […]
வடநாட்டு வைகோ
குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளதையடுத்து நாடு முழுவதும் பாஜகவின் வெற்றிக்களிப்பில் உள்ளனர். அதிலும் தமிழக பாஜகவினர் கொண்டாட்டத்தில் உள்ளனர். பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா காலை முதலே படு சுறுசுறுப்பாக சமூக வலைதளங்களில் இயங்கி வருகிறார். குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர்ந்தார் பட்டேல் சமூகத்தை சேர்ந்த ஹர்திக் பட்டேல். இவரது அதிரடியான விமர்சனங்கள், பிரச்சாரங்களை பார்த்து பாஜகவே நடுங்கியது. காங்கிரஸ் […]
அதிக இடங்களை கைப்பற்றி பாரதீய ஜனதா ஆட்சியை தக்க வைக்கும்
குஜராத் சட்டசபைக்கு 2 கட்டங்களாக கடந்த 9 மற்றும் 14-ந்தேதிகளில் தேர்தல் நடந்தது. 182 சட்டசபை உறுப்பினர்களைக் கொண்ட குஜராத்தில் ஆட்சி அமைக்க 92 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. இந்த நிலையில், குஜராத் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாரதீய ஜனதா அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்திடும் என தேர்தலுக்கு பின் நடந்த கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதுபற்றி டுடேஸ் சாணக்யாவின் […]
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி போட்டியின்றி தேர்வு 16-ந் தேதி பதவி ஏற்கிறார்
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி கடந்த 19 ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார். உடல் நிலையை கருத்தில் கொண்டு அவர் காங்கிரஸ் தலைவர் பதவியை விட்டு விலக முடிவு செய்தார். இதனால், புதிய தலைவரை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் வருகிற 16-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 1-ந் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய 4-ந் தேதி […]
நீட் நுழைவுத்தேர்வு எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் – திருநாவுக்கரசர்
நீட் நுழைவுத்தேர்வு எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் – திருநாவுக்கரசர் நீட் நுழைவுத்தேர்வு திணிப்பை எதிர்த்து மார்ச் 10-ம் தேதி காலை 10 மணியளவில் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”நாடு முழுவதும் உள்ள மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவு (நீட்) […]
தனது திருமணத்திற்கு இனி காத்திருக்கத் தேவையில்லை – காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி
தனது திருமணத்திற்கு இனி காத்திருக்கத் தேவையில்லை – காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தனது திருமணத்திற்கு இனி அதிகம் காத்திருக்கத் தேவையில்லை என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். இதை அவர் உத்தரப் பிரதேசத்தின் பைரைச்சில் கலந்து கொண்ட சட்டப் பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் எழுந்த கேள்விக்கு பதிலாக அளித்தார். உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் 7 கட்டமாக நடைபெற்று வருகிறது. இங்கு ஆளும் சமாஜ்வாதி – காங்கிரஸ் […]
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்காது – ஈவிகேஎஸ். இளங்கோவன்
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்காது – ஈவிகேஎஸ். இளங்கோவன் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்காது என ஈவிகேஎஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவருக்கும் காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்காது என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு […]
பஞ்சாப், கோவா சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது
பஞ்சாப், கோவா சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது பஞ்சாப், கோவா சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. அந்த மாநிலங்களில் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் சிரோமணி அகாலிதளம்-பாஜக கூட்டணி, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. ஆளும் கூட்டணி வேட்பாளர் களுக்காக பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய […]




