யாழின் இருவேறு இடங்களில் வாள்களுடன் சென்ற குழு தாக்குதல் யாழ்ப்பாணத்தில் இரு வேறு இடங்களில் மர்மக்குழுவின் தாக்குதல்களினால் ஐந்து பேர் படுகாயமடைந்த நிலயில் சொத்துக்களுக்கும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்குள் முகங்களை மூடியவாறு சென்ற ஆறுபேர் கொண்ட கும்பல் வீட்டிலிருந்து பொருட்களை அடித்து நொருக்கியதோடு வீட்டிலிருந்த வயோதிபத் தம்பதியினர் மீதும் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்நிலையில் படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா […]
Tag: Tamil news
எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து யாழில் ஹர்த்தால்!
எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து யாழில் ஹர்த்தால்! தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை வலியுறுத்தியும், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தும் வகையிலும்,யாழ்ப்பாணத்தில் எழுக தமிழ் பேரணி இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து யாழில் வர்த்தக நிலையங்களை பூட்டியும், வாகன போக்குவத்துக்களை நிறுத்தியும் மக்கள் பேராதரவு வழங்கியுள்ளனர். அத்துடன் எழு தமிழை முன்னிட்டு வடக்கு கிழக்கு மாகாணத்திலும் பூரண ஹர்த்தாலை முன்னெடுக்குமாறு கோரிக்கை […]
யாழில் உலகிற்கு செய்தி சொல்லும் ‘எழுக தமிழ்’ பேரணி ஆரம்பம்!
யாழில் உலகிற்கு செய்தி சொல்லும் ‘எழுக தமிழ்’ பேரணி ஆரம்பம்! தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை வலியுறுத்தியும், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தும் வகையிலும், வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரனை இணைத் தலைவராக க்கொண்ட, தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எழுக தமிழ் பேரணி யாழில் நடைபெறுகின்றது. இந்நிலையில் தமிழ் மக்களின் பல்வேறு அரசியல் காரணங்களை முன்வைத்து, யாழில் இடம்பெறும் “எழுக தமிழ்” பேரணிக்கு மக்கள் […]
ஜனாதிபதி வேட்பாளராக இவரே களமிறங்கலாம்? ரணில்!
ஜனாதிபதி வேட்பாளராக இவரே களமிறங்கலாம்? ரணில்! எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலகுவில் வெற்றிகொள்ள கூடியவரும் ஐக்கிய தேசிய முன்னணியின் பெரும்பாலான கட்சிகளின் ஆதரவை பெற்றவருமான சஜித் பிரேமதாசவை இவ்வாரத்துக்குள் ஜனாதிபதி வேட்பாளராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பார் என்றும் சஜித்தை களமிறக்குவதற்கு பிரதமர் மறைமுகமான இணக்கத்தை தெரிவித்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் […]
கனிமொழி உட்பட பல்வேறு அரசியல் முக்கியஸ்தர்கள் இலங்கைக்கு வருகை – வெடித்தது சர்ச்சை
கனிமொழி உட்பட பல்வேறு அரசியல் முக்கியஸ்தர்கள் இலங்கைக்கு வருகை – வெடித்தது சர்ச்சை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் புதல்வியின் திருமண நிகழ்வில் கலந்து கொள்ள தமிழகத்தின் தி.மு. க எம் .பி கனிமொழி உட்பட பல்வேறு அரசியல் முக்கியஸ்தர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அந்தவகையில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொஹிதீன், திராவிட முன்னேற்ற கழகத்தின் துணைத் தலைவரும் […]
எனது வெற்றிக்கு தமிழ் மக்கள் தேவை : கோத்தபாய
எனது வெற்றிக்கு தமிழ் மக்களது வாக்கு அவசியம் இல்லை என்று தாம் கூறியதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சில அரசியல்வாதிகளுடன் சேர்ந்து போலியான செய்திகளை பரப்பும் ஊடகங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், கோத்தபாய ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் அவரை சந்தித்திருந்தார். இதன்போது தமிழ் மக்களின் வாக்குகள் […]
இலங்கை வரலாற்றில் ரணிலால் நடுநடுங்கும் ஊடங்கள்
அரசியல் வரலாற்றிலே ஊடகத்துறைக்கு பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுத்த ஒரே பிரதமர் ரணில் விக்ரமசிங்க , ஐக்கிய தேசிய கட்சியிலான அரசாங்கத்திலே தொடர்ச்சியாக ஊடகத்துறைக்கு எதிரான செயற்பாடுகள் இடம் பெற்று வருகின்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க பெயர் குறிப்பிட்டு ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை முறையற்ற செயற்பாடாகும். என பொதுஜன பெரமுன முன்னணியின் சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. பொதுஜன பெரமுன முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு […]
ஆபத்து வந்து விட்டது.. பதறுகிறார் மஹிந்த
புதிய அரசியல்மைப்பினைத் தயாரிக்கும் செயற்பாடு நாட்டைப் பிரிக்கும் முயற்சி என, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொலனறுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த அரசியலமைப்பு திருத்தம் நாட்டைப் பிரிக்கும் முயற்சியாகும். ஒரு சிலர் இதனைத் திருத்தம் என்கிறனர். ஒருசிலர் சட்டமூல வரைவு என்கிறனர். ஒரு சிலர் அப்படி […]
மைத்திரியின் உத்தரவால் மற்றுமொரு ஜனாதிபதி ஆணைக்குழு
நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 ஜனவரி 15 முதல் 2018 டிசம்பர் 31 வரை நாட்டில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்து விசாரிக்க இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரியின் உத்தரவின் பிரகாரம் இந்த ஆணைக்குழு இன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த ஆணைக்குழுவிற்கு தலைவராக ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். அத்தோடு சரோஜினி வீரவர்தன, […]
இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!
அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது ரூபாயின் பெறுமதி 184.3 ரூபாயாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் கொள்வனவு விலை 180.6 ரூபாயாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் டொலருக்கான கேள்வி அதிகரித்துள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக துறைசார் அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.




