Tag: tamil nadu

ஆளுநரை சந்தித்த பூரிப்பில் முதல்வர்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆளுநரை சந்தித்தனர். இந்த சந்திப்பின் பிறகு முதல்வர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கொடுத்த காலக்கெடு முடிவடைந்த நிலையில் மத்திய அரசு காவிரி மேலாண்மை அமைக்காமல் இருப்பதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் […]

தமிழகத்தில் தடையின்றி 66% பேருந்துகள் இயக்கம்.

தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகங்களில் சுமார் 1 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். போக்குவரத்து ஊழியர்களின் நிலுவைத்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மூன்றாவது நாளாக தொடரும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தின் அடுத்தக்கட்ட நகர்வு குறித்த ஆலோசனை இன்று நடைபெற்றது. இதற்கிடையே அரசு போக்குவரத்து கழகங்களில் தற்காலிகமாக தினக்கூலி அடிப்படையில் ஓட்டுநர், நடத்துநர் நியமிகப்பட்டு அரசு பேருந்துகளை […]

நெடுவாசல் மக்கள் சுதந்திர தினத்தில் உண்ணாவிரதம் ?

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நெடுவாசல் பகுதி மக்கள் 126வது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட டெல்டா பகுதியில் எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, வாணக்கன்காடு, கோட்டைக்காடு உள்ளிட்ட கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சுதந்திர தினமான […]

தினகரன் நிதானத்தை இழந்து கருத்து தெரிவிக்க கூடாது

தமிழக அரசை கவிழ்க்க நினைப்பது பெரும் துரோகம் எனக் கூறியுள்ள அமைச்சர் ஜெயக்குமார், தினகரன் எப்போதும் நிதானத்தை இழந்து கருத்து தெரிவிக்க கூடாது என தெரிவித்துள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “அரசை கவிழ்க்க நினைப்பது பெரும் துரோகம் அதை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். நிதானத்தை இழந்து கருத்து தெரிவிக்கக் கூடாது. எந்த சூழ்நிலையிலும் டிடிவி தினகரன் நிதானத்தை இழந்துவிடக்கூடாது. தினகரனின் குடும்ப […]

சசிகலா நினைத்திருந்தால் டிசம்பர் 5ம் தேதியே முதல்வராகி இருப்பார்

மதுரை மாவட்டம் மேலூரில் அதிமுக ‌அம்மா அணி சார்பில் டிடிவி தினகரன் தலைமையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தங்க தமிழ்ச்செல்வன், செந்தில்பாலாஜி உள்ளிட்ட 14 எம்எல்ஏக்களும், நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட 5 எம்பிகளும் பங்கேற்றனர். இந்த விழாவில் பேசிய டிடிவி தி‌னகரன், 1977ஆம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டால் கருணாநிதியால் எம்ஜிஆர் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார். ஆனால் அதன்பிறகு மக்கள் கருணாநிதியை ஒதுக்கி வைத்தனர். ஏழை எளிய […]

ரஜினி, கமல் செய்தது என்ன?

மக்கள் துன்பப்படும்போது ரஜினி, கமல் ஆகியோர் என்ன உதவி செய்தார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பினார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை அமைச்சர் செல்லூர் ராஜு குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றும் ஆனால் மக்களுக்கு அவர்கள் மீது நம்பிக்கை இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், எம்.ஜி.ஆரை […]

​மதிப்பிழந்து வருகிறதா பொறியியல் படிப்பு?

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு நிறைவு பெற்றதாக அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 523 பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு, அண்ணா பல்கலைகழகத்தில் கடந்த மாதம் 23ம் தேதி துவங்கியது. பொறியியல் பல்கலைக்கழகங்களில் மொத்தம் உள்ள 1 லட்சத்து 70 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில், ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் மட்டுமே அழைக்கப்பட்டனர். இவர்கள் தரவரிசை பட்டியலில் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். இதில் 86ஆயிரத்து 355 இடங்கள் மட்டுமே நிரம்பின. கலந்தாய்வில் […]

அதிமுகவில் உச்சக்கட்ட உட்கட்சிப் பூசல்

அதிமுகவில் உட்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்தில் நடைபெற்றுவருவது குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “டிடிவி தினகரனுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது அதிமுகவின் உட்கட்சி பூசல். அவரை நீக்குவதும், சேர்ப்பதும் அவர்கள் உரிமை” என்று தெரிவித்தார். இதுதொடர்பாக பேசிய விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், “அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது” என்றார். தினகரனின் நியமனம் செல்லாது என இபிஎஸ் அணியினர் […]

முதல்வருக்கு அமோக வரவேற்பு: தினகரன் அணி அதிர்ச்சி

விழுப்புரம் சென்ற, முதல்வர் பழனிசாமிக்கு, வழிநெடுகிலும், கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தது, தினகரன் அணியினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு

தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு செய்திகள் உண்மை இல்லை – ஆர்.காமராஜ்

தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு செய்திகள் உண்மை இல்லை – ஆர்.காமராஜ் தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு என்று வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் இன்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பல ரேஷன் கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் நிறுத்தப்பட்டுள்ளதாக சில நாட்களாக செய்திகள் வெளியான நிலையில், இது தொடர்பாக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது […]