தைவான் தலைநகர் தைபேயில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் குடியிருப்புகள் இடிந்து விழுந்து 2 பேர் பலியாகினர் மேலும் 114 பேர் காயமடைந்துள்ளனர். தைவான் நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த சில நாட்களாகவே தைவானில் லேசான நில நடுக்கம் உணரப்பட்ட நிலையில், தற்பொழுது 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீட்டிலிருந்து வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். […]





