விநாயகரின் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய பஞ்ச கிருத்தியங்களையும் அவர் தனது ஐந்து கரங்களால் இயற்றுகின்றார் எனப்படுகின்றது. ஐந்து கருமங்கட்கும் அவரே அதிபதி என்பதனால் அவருக்கு “ஐங்கரன்” என்ற நாமம் விளங்குகின்றது. அவரை “பஞ்சகிருத்திகள்” என்றும் கூறுவர். அவரது முற்றறிந்த ஞானத்தை முறம் (சுளகு) போன்று பரந்து விரிந்த இருசெவிகளும் விளக்குகின்றன. வலது பக்கமுள்ள ஒடிந்த கொம்பு “பாசஞானத்தையும்” இடது பக்கமுள்ள கொம்பு “பதிஞானத்தையும்” உணர்த்துவதாக உள்ளன. […]
Tag: spirituality
வீட்டில் செல்வம் பெருக இதை செய்தாலே போதும்…!
மகாலக்ஷ்மி படத்திற்கு தினமும் காலை, மாலை நெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் ஏதாவதொன்றில் இரண்டு திரி போட்டு விளக்கு ஏற்றி வீடு, கடை முழுவதும் சாம்பிராணி புகை காட்டிவருவது பண விஷயத்தில் மிகசிறந்த வசியமாகும். வடகிழக்கு மூலையில் குடிக்கும் நீரைவைத்து அதில் எலுமிச்சை ஒன்றை போட்டு வைக்கவும், தொடர்ந்து இரண்டு மாதங்கள் செய்து வந்தால் பற்றாக்குறை நீங்கி செல்வம் கொழிக்கும். மாதச்சம்பளம், சுயத்தொழில், வியாபாரம் செய்பவர்கள் யாராகினும் வருவாயில் முதல் […]
ஸ்ரீ சனீஸ்வரரைப்போல் சர்வ வல்லமை பெற்றவரா மாந்தி?
தன் தவ வலிமையால் சிவனிடம் வரம் பெற்ற ராவணன், கிரகங்களையே தன்னிடத்திற்கு அழைக்கும் பேறுபெற்று விளங்கினான். தன் மகன் இந்திரஜித் பிறக்க இருந்த சமயத்தில் சனியை வரவழைத்த ராவணன், என்னுடைய மகனின் ஜாதகத்தில் நீ பதினொன்றாம் இடத்தில்தான் இருக்க வேண்டும் என்று பணித்தானாம். ஜாதகத்தில் சனிக்கு 11 ஆம் வீடு சிறந்த இடம், 12ஆம் வீடுதான் மிகவும் மோசமான இடம் ஆகும். வேறு வழி இல்லாமல் சரி என்று ஒப்புக்கொண்ட […]
கோயிலுக்கு செல்பவர்கள் எவ்வாறு வழிபட வேண்டும் தெரியுமா!
கோயிலுக்கு செல்பவர்கள் வழிபாட்டிற்கான அடிப்படை விஷயங்களைப் பின்பற்றி வழிபடுவது அவசியம். இதோ அதற்கான வழிமுறை! தொலைவில் இருந்தே கோபுரத்தை தரிசனம் செய்ய வேண்டும். கோபுரவாசலைக் கடந்ததும், கொடிமரத்தை வணங்கியபடியே கோயிலுக்குள் நடக்க வேண்டும். ஆண்டவனைச் சரணடைகிறேன் என்பதே கொடிமர வழிபாட்டின் நோக்கம். பலிபீடத்தின் முன்னால் தலை தாழ்த்தி வணங்க வேண்டும். இறைவா! என்னிடம் உள்ள ஆணவம் முதலிய தீயகுணங்களை இங்கேயே பலியிடுகிறேன், அதற்கு அருள்செய், என்பதே பலிபீடத் தத்துவம். இப்போது […]
ஒரு குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது?
ஒரு குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள கருடப் புராணம் மிக எளிமையான வழிமுறைகளை தெளிவாக எடித்துரைத்துள்ளது. ஒருவர் இறந்த பின்பு அவருக்குரிய பித்ரு கடன்களை முறைப்படி செய்யாதவர்கள் குடும்பத்தில் மனக் கஷ்டம், பணக்கஷ்டம் போன்றவை இருந்து கொண்டே இருக்கும். இறந்தவர்கள் ஆன்மா சாந்தியடைய நமது முன்னோர்கள் பல்வேறு வழிமுறைகளை கையாண்டனர். இறந்தவுடன் இறந்தவருக்கு செய்ய வேண்டிய பிண்டம் இடுதல், இறந்தவரின் திதி தோறும் அவருக்குரிய கடமைகளை […]
கருங்கல்லில் சிலைகள் வடிக்கப்படுவதன் காரணம் என்ன தெரியுமா!
பொதுவாக தெய்வ சிலைகள் எல்லாம் கருங்கல் கொண்டு செதுக்கப்படுகின்றது. பெரும்பாலும் கர்ப்பகிரகங்களில் உள்ள தெய்வச் சிலைகள் கருங்கற்களை கொண்டுதான் வடிக்கப்பட்டிருக்கும். பொதுவாக உலோகத்தின் ஆற்றலை விட கருங்கல்லின் ஆற்றல் பல மடங்கு அதிகமாக இருப்பதால், கருங்கல் எந்த சக்தியையும் தன் வசம் இழுத்துக் கொள்ளும் தன்மை உடையது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கருங்கல்லானது நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் ஐந்து வகை பஞ்சபூதங்களினுடைய தன்மைகளையும் தன்வசம் கொண்டுள்ளது. […]
காளியை வீட்டில் வைத்து வணக்குவது நல்லதா?
காளி மிக உக்ர தெய்வம் என்பதால் நம்மில் பலர் காளியை எப்படி வணங்குவது என யோசிப்போம். ஆனால் புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூலிலும், கலிங்கத்துப் பரணியிலும் காளி வழிபாடு குறித்தும், அவளை வணங்குவதால் உண்டாகும் நன்மைகள் குறித்தும் பல தகவல்கள் உள்ளன. காளியின் படத்தை பலர் வீட்டில் வைக்கவும் தயங்குவதுண்டு. ஆனால் உண்மையில் உக்ர வடிவில் உள்ள காளியின் படத்தைதான் வீட்டில் வைக்கக்கூடாது. சாந்த வடிவில் இருக்கும் காளியின் படத்தை […]





