Tag: Seeman

ஊடகங்கள் தான் எங்களை குற்றவாளியாக சித்தரித்துவிட்டனர்

நாங்கள் கலவரத்தில் ஈடுபடவில்லை எனவும், ஊடகங்கள் தான் எங்களை குற்றவாளி போல் சித்தரித்து விட்டது எனவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் மற்றும் மக்கள் போராடி வருகின்றனர். தமிழ் சினிமா துறையினர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற […]

சீமான் கைதா? சுற்றி வளைத்த அதிரடிப்படை

நேற்று முன் தினம் நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தின் இடையே திடீரென போலீசார் தடியடி நடத்தியதும், சீருடை அணிந்த போலீசார்களை நாம் தமிழர் கட்சியினர்கள் தாக்கிய சம்பவங்களும் நடைபெற்றது. இதனையடுத்து சீமான் மீது கொலை முயற்சி உள்பட 10 பிரிவுகளின்கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதனால் எந்த நேரமும் […]

சீமானின் முகத்திரையை நார் நாராய் கிழித்த வைகோ

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் சீமான் எடுத்து கொண்ட புகைப்படம் கிராபிக்ஸ் என்றும், அவருடன் புகைப்படம் எடுத்து கொள்ள பிரபாகரன் விரும்பவில்லை என்றும் கூறிய வைகோ, சீமான் தான் விடுதலைப்புலிகளின் பிரதிநிதி என்று கூறி கோடிக்கணக்கில் வெளிநாட்டு தமிழர்களிடம் பணம் பெற்றதாகவும் வைகோ கூறியுள்ளார். மேலும் பிரபாகரன் – சீமான் சந்திப்பு வெறும் 8 நிமிடங்கள் மட்டுமே நடந்தது என்றும், விடுதலைப்புலிகளின் சீருடை அணிய கூட சீமானை பிரபாகரன் அனுமதிக்கவில்லை என்றும் […]

படம் மட்டும் பெற்றோர் பணத்தில் பார்க்க வேண்டுமா?

மாணவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்லும் ரஜினி, பெற்றோர் கொடுக்கும் பணத்தில் படம் பார்க்க வேண்டாம் என்று சொல்ல வேண்டியதுதானே என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். பெற்றோர் கஷ்டப்பட்டு பணம் கொடுத்து படிக்க வைக்கிறார்கள். படிக்கும் வயதில் மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டாம் என்று ரஜினிகாந்த் கூறினார். செய்தியாளர்களை சந்தித்த சீமான் இதுகுறித்து கூறியதாவது:- ரஜினி சொல்வது போல் தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை. ரஜினியின் […]

நடிகை ஸ்ரீதேவி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

மாரடைப்பால் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரபல தமிழ், தெலுங்கு, இந்தி நடிகையான ஸ்ரீதேவி திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 54 துபாயில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக கணவர் மற்றும் மகளுடன் சென்றிருந்த ஸ்ரீதேவிக்கு நேற்றிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. அவரது உயிர் பிரியும்போது கணவர் போனிகபூர் மற்றும் மகள் குஷிகபூர் உடனிருந்தனர் குழந்தை […]

கமலின் கட்சிப் பெயர் பைத்தியக்காரத்தனத்தை குறிக்கிறது

கமலின் கட்சிப் பெயரின் விளக்கமானது சுத்த பைத்தியக்காரத்தனத்தை குறிக்கிறது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளரான சீமான் தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை கடந்த 21-ந் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்திலிருந்து துவங்கி, தனது கட்சி பெயரையும் கொடியையும் அறிமுகம் செய்தார். மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சி பெயரையும், சிவப்பு, வெள்ளை, கருப்பு ஆகிய நிறங்களுடன் ஒன்றிணைந்த […]

பிரச்சனைகள் வந்தபோது எங்க போனார்?

ரஜினி அரசியலுக்கு வந்தால் கடுமையாக எதிர்ப்போம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று ரசிகர்களிடம் மத்தியில் தனது அரசியல் நிலைபாடு குறித்து அறிவித்தார். அதைத்தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:- தமிழ் நாட்டில் மட்டும்தான் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் […]

அதிமுக அணிகள் இணைந்தால் என்ன? இணையாவிட்டால் என்ன?

தமிழகம் பல்வேறு முக்கிய பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் உள்ளபோது, அதிமுக இணைப்பு விவகாரத்தை தாம் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இரு அணிகள் இணைப்பு ஒரு பிரச்னையே இல்லை. இது நாட்டின் பெரிய பிரச்னையா? மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டக்கூடாது என போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் கர்நாடக அரசு மேகதாதுவில் அணைகட்ட […]