நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்து உறுப்பினர் சேர்க்கையையும் தொடங்கிவிட்டார். இந்நிலையில் அவரது அரசியல் எண்ட்ரி குறித்து பலரும் விமர்சிக்கின்றனர். கர்நாடகாவை சேர்ந்த நடிகர் ரஜினிக்கு காவிரி விவகாரத்தில் நிலைப்பாடு என்ன என பலரும் கேள்விகளை எழுப்புகின்றனர். சமீபத்தில் காவிரி பிரச்சனை வந்தபோது நடிகர் ரஜினி எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்தது விமர்சிக்கப்பட்டது. தற்போது அரசியலில் இறங்கியுள்ள ரஜினிக்கு காவிரி விவகாரத்தில் என்ன நிலைப்பாடு என கேள்வி […]
Tag: Rajini
ரஜினியின் ஆன்மீக அரசியலும், தமிழ் இலக்கணமும்
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்துவிட்டார். கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்த ரஜினி, தான் ஆன்மீக அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறினார். ஆன்மீக அரசியல் என ரஜினி கூறியது பல்வேறு எதிர்ப்புகளை அவருக்கு உருவாகி வருகிறது. பலரும் அவரது ஆன்மீக அரசியலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ரஜினியின் அரசியல் கொள்கை என்ன என்பதும் குழப்பமாக உள்ளது. நிரூபர் ஒருவர் உங்கள் […]
அரங்கத்தையே அதிர வைத்த அந்த வார்த்தை!
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பிற்கு பின்னர் ஊடகங்களில் ரஜினி குறித்தான செய்திகள் அதிகம் இடம்பெறுகின்றன. இந்நிலையில் அவர் கூறிய ஒரு வார்த்தை அரங்கத்தை அதிர வைத்தது. நடிகர் ரஜினிகாந்த் தமிழ் திரை நட்சத்திரங்கள் இணைந்து நடத்தும் நட்சத்திர விழாவில் கலந்துகொள்ள மலேசியா சென்றுள்ளார். மலேசிய சென்றுள்ள அவர் நடிகர்கள் விளையாட உள்ள நட்சத்திர கிரிக்கெட்டையும் கண்டுகளிக்க உள்ளார். இந்நிலையில் மேடை ஏறிய நடிகர் ரஜினியிடம் கிரிக்கெட் தொடர்பான பல கேள்விகளை […]
ரஜினியை பளார் பளார் என விளாசிய பிரேமலதா
கடலூரில் நேற்று தேமுதிக சார்பில் தனியார் சர்க்கரை ஆலை முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் தலைமை தாங்கிய விஜயகாந்தின் மனைவி பிரேமலதா அரசியலில் குதித்துள்ள நடிகர் ரஜினியை கடுமையாக விளாசி பேசினார். முற்றுகை போராட்டத்தின் போது பேசிய பிரேமலதா விஜயகாந்த், யாரெல்லாமோ இன்றைக்கு அரசியலுக்கு வருகிறார்கள். இதுவரை தூங்கிக்கொண்டு இருந்தவர்கள் எல்லாம் கட்சி ஆரம்பிக்கிறோம் என்கிறார்கள். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வாருங்கள். அதுபற்றி எங்களுக்கு பிரச்சினை இல்லை. ஆனால் […]
யாராலும் திராவிடத்தை அழிக்க முடியாது
நடிகர் ரஜினிகாந்த அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்த பின்னர், திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுர இல்லத்தில் சந்தித்தார். ரஜினியை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வரவேற்றார். இந்த சந்திப்பு குறித்து ரஜினி பேட்டியளித்ததாவது, திமுக தலைவர் கருணாநிதி என்னுடைய நண்பர். அவருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துவிட்டு அவரது உடல் நிலை குறித்து விசாரித்தேன். மேலும், எனது அரசியல் பிரவேசத்தை குறித்து அவரிடம் தெரிவித்து ஆசி பெற்றேன் என […]
பிரச்சனைகள் வந்தபோது எங்க போனார்?
ரஜினி அரசியலுக்கு வந்தால் கடுமையாக எதிர்ப்போம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று ரசிகர்களிடம் மத்தியில் தனது அரசியல் நிலைபாடு குறித்து அறிவித்தார். அதைத்தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:- தமிழ் நாட்டில் மட்டும்தான் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் […]
ரஜினியுடன் கூட்டணி வைத்தால் அவ்வளவுதான்
எனது எதிர்ப்பையும் மீறி ரஜினியுடன் கூட்டணி வைத்தால் வேறு மாநிலத்துக்கு சென்றுவிடுவேன் என சுப்பிரமணியன் சுவாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று இன்று காலை அறிவித்தார். தனி கட்சி தொடங்க உள்ளதாகவும், 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்றும் கூறியுள்ளார். ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். இந்நிலையில் இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி […]
ரஜினியின் அதிரடி முடிவு?
டிசம்பர் 31-ஆம் தேதி தான் அரசியலில் என்ன முடிவு எடுக்கப்போகிறேன் என்பதை அறிவிக்க உள்ளதாக ரஜினி கூறியதை அடுத்து அவரது ரசிகர்கள் 31-ஆம் தேதியை எதிர்நோக்கியுள்ளனர். இந்த முறை ஏமாற்றாமல் அவர் அரசியல் கட்சி குறித்து அறிவிக்க வேண்டும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் இந்தமுறையும் அவர்களுக்கு ஏம்மாற்றம் தான் என்கிறது ரஜினி வட்டார தகவல்கள். அரசியல் கட்சி தொடங்குவது அவ்வளவு சாதாரண விஷயமல்ல என்பதை இவ்வளவு நான் ஆராய்ந்து […]





