மத்திய அரசு நிரந்தர தொழிலாளர்கள் சட்டத்தில் மேற்கொண்ட திருத்தத்தை கண்டித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு நிரந்தர தொழிலாளர்கள் சட்டத்தில் மேற்கொண்ட திருத்தத்தில், தனியார் துறைகளில் வேலைபுரியும் தொழிலாளர்களை எப்போது வேண்டுமானாலும் நிர்வாகம் பணிநீக்கம் செய்ய முடியும் என்றும் தொழிலாளர்கள் நிரந்தரமாக வேலை செய்யமுடியாது என்றும் சட்டதிருத்தம் கொண்டு வந்தது. நாடு முழுவதும் இதற்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு […]
Tag: protest
இஸ்ரேல் போராட்டத்தில் துப்பாக்கி சூடு- 16 பேர் பலி
இஸ்ரேல் நாட்டில் எல்லையில் உள்ள காசா பகுதியில் போராட்டம் நடத்தி வந்த ஹமாஸ் அமைப்பினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதால் 16 பேர் பலியாகியுள்ளனர். காசா பகுதி இஸ்ரேல்- பாலஸ்தீன எல்லையில் உள்ளது. நேற்று, இங்கு பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் இஸ்ரேல் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை அடக்க இஸ்ரேல் படையினர் முயற்சித்து வந்தனர். ஆனால், அவர்களால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. […]
மீண்டும் ஒரு மெரினா போராட்டமா?
சென்னை மெரீனாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் ஹைலைட்டே அங்கு கூடியிருந்தவர்கள் செல்போன்கள் மூலம் லைட் அடித்து தங்களது உணர்வை வெளிப்படுத்தியதுதான். இந்த நிகழ்ச்சியை மையமாக வைத்துதான் ‘வேலைக்காரன்’ படத்தில் கூட இதே போன்ற ஒரு காட்சி வைக்கப்பட்டிருந்தது இந்த நிலையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே உள்ள ஆலையின் ஒப்பந்தம் முடிந்துவிட்டதால் அந்த ஆலையை […]
ஸ்டாலின் தலைமையில் மீண்டும் கண்டனக் கூட்டம்!
தமிழக அரசு அறிவித்த பேருந்து கட்டணத்தை எதிர்த்து, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில். வரும் 13-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மீண்டும் அனைத்து கட்சி கண்டன பொதுகூட்டம் நடைபெறுகிறது. அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற அனைத்து கட்சி பொது கூட்டத்தில் திமுக ,காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்றனர். ஏற்கனவே ஜனவரி 27 மற்றும் 29-ம் தேதிகளில், தமிழக அரசு அறிவித்த […]
வைரமுத்துவுக்கு எதிரான போராட்டத்திற்கு விஜயகாந்த் ஆதரவு
சமீபத்தில் ஆண்டாள் குறித்து வைரமுத்து பேசிய ஒரு கருத்து பெரும் சர்ச்சையாகி இந்த விவகாரம் சென்னை ஐகோர்ட் வரை சென்றுள்ள நிலையில் வைரமுத்துவுக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் வைரமுத்து மன்னிப்பு கேட்க கோரி சடகோப ராமானுஜ ஜீயர் போராட்டம் நடத்தி வருகிறார். இந்த போராட்டத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆதவு கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘ஆண்டாளை பற்றி இழிவாக […]
கனிமொழியின் தாயாருக்காக களத்தில் இறங்கி போராடுவேன்
சமீபத்தில் கனிமொழி நாத்திக மாநாடு ஒன்றில் பேசும்போது திமுகவில் கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்கள் அதிகம் உள்ளதாக கூறினார். ஆனால் கனிமொழியின் தாயாரே சமீபத்தில் கோவிலுக்கு சென்று அர்ச்சகரிடம் ஆசி வாங்குவது போன்ற புகைப்படம் சமீபத்தில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் காரைக்குடியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதாவது: ‘கனிமொழியின் தாயார் கோவிலுக்குப் போவதை யாரேனும் தடுப்பார்களேயானால், நானே களத்தில் […]
தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம்
தமிழக அரசு பேருந்து விலையை குறைக்காவிட்டால் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தமிழக அரசு பேருந்து கட்டணத்தை நேற்று நள்ளிரவு முதல் திடீரென உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது. இதனால், சென்னை போன்ற பெரிய நகரங்கள் மட்டுமின்றி, சிறு கிராமங்கள் மற்றும் நகரங்களில் பேருந்துகளை பயன்படுத்தும் சாதாரண பொதுமக்கள், இதற்கு முன் செலுத்தியதை விட இரண்டு மடங்கு தொகை கொடுக்க வேண்டியுள்ளது. […]
தமிழகத்தில் தடையின்றி 66% பேருந்துகள் இயக்கம்.
தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகங்களில் சுமார் 1 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். போக்குவரத்து ஊழியர்களின் நிலுவைத்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மூன்றாவது நாளாக தொடரும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தின் அடுத்தக்கட்ட நகர்வு குறித்த ஆலோசனை இன்று நடைபெற்றது. இதற்கிடையே அரசு போக்குவரத்து கழகங்களில் தற்காலிகமாக தினக்கூலி அடிப்படையில் ஓட்டுநர், நடத்துநர் நியமிகப்பட்டு அரசு பேருந்துகளை […]





