முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலமின்மை ஆகியவை காரணமாக தமிழகத்தில் ஆளுமையுள்ள தலைவர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வந்த நிலையில் பலருக்கு முதல்வர் கனவு வந்து, கட்சி ஆரம்பித்து வருகின்றனர். கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஷால், விஜய், பாக்யராஜ் உள்ளிட்ட பலர் அரசியல் களத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் ஏற்கனவே அரசியலில் அவ்வப்போது தலைகாட்டி வரும் டி.ராஜேந்தரும் தற்போது மீண்டும் …
Read More »அரசியலில் யாருக்கு சப்போர்ட் – கவுதமி பதில்
அரசியலில் ரஜினிக்கு சப்போர்ட் செய்வீர்களா அல்லது கமலுக்கு சப்போர்ட் செய்வீர்களா? என்ற கேள்விக்குப் பதில் அளித்துள்ளார் கவுதமி. கமல்ஹாசனுடன் பல ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துவந்த கவுதமி, சில காலங்களாகப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்தக் காலகட்டத்தில், பல விஷயங்கள் பற்றியும் மனம் திறந்து தன்னுடைய கருத்துகளைக் கூறிவருகிறார். இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலுக்கு வந்த அவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், ‘ரஜினி, கமல்… அரசியலில் யாரை சப்போர்ட் செய்வீர்கள்?’ என்ற …
Read More »சரியில்லாத சிஸ்டம்
நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் இறங்கிவிட்டார். உறுப்பினர் சேர்க்கை நடந்துகொண்டிருக்கிறது. கட்சிக்கான பெயர் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. ஆன்மீக அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறியுள்ளார். ஆதரவும், எதிர்ப்பும் கலந்துகட்டி தமிழக அரசியலை கலக்கி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து சிஸ்டம் சிரியில்லை என்று கூறிவருகிறார். அவர் குறித்தான தொலைக்காட்சி விவாதங்களில் இது முக்கிய கருத்தாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து சிஸ்டம் சரில்லை என கூறிவரும் ரஜினி குறித்து அதிரடியான கருத்து ஒன்றை கூறியுள்ளார் மூத்த …
Read More »ரஜினியின் ஆன்மீக அரசியலும், தமிழ் இலக்கணமும்
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்துவிட்டார். கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்த ரஜினி, தான் ஆன்மீக அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறினார். ஆன்மீக அரசியல் என ரஜினி கூறியது பல்வேறு எதிர்ப்புகளை அவருக்கு உருவாகி வருகிறது. பலரும் அவரது ஆன்மீக அரசியலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ரஜினியின் அரசியல் கொள்கை என்ன என்பதும் குழப்பமாக உள்ளது. நிரூபர் ஒருவர் உங்கள் …
Read More »ரஜினியின் அரசியல் வருகைக்கு இலங்கை முதல்வர் ஆதரவு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்த ஒருசில நிமிடங்களில் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகனும் இலங்கை பாராளுமன்ற எம்பியுமான நமல்ராஜபக்சே தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார் இந்த நிலையில் இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ‘ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு எப்போதும் என்னுடைய ஆதரவு உண்டு என்று …
Read More »நடிகர்கள் அரசியலுக்கு வருவது தற்கொலைக்கு சமம்
நடிகர்கள் அரசியலுக்கு வருவது தற்கொலைக்கு சமமானது என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார். கமல்ஹாசனை தொடர்ந்து ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று கடந்த மாதம் 31ஆம் தேதி அறிவித்தார். அதைத்தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் வாரப்பத்திரிகை ஒன்றில் எழுதும் தொடரில் ஆர்.கே.நகர் குறித்து விமர்சித்தது பெரும் பரபப்பை ஏற்படுத்தியது. இதற்கு டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். …
Read More »ஒரே நாளில் 50 லட்சம் உறுப்பினர்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 31ஆம் தேதி அரசியல் அறிவிப்பை அறிவித்துவிட்டு, பின்னர் அடுத்த நாளே இணையதளம் மற்றும் செயலி மூலம் மன்றத்தின் உறுப்பினர் ஆக்கும் வசதியை கொண்டு வந்தார். இந்த மன்றம் தான் விரைவில் கட்சியாக மாற போகிறது. இந்த நிலையில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட மன்ற உறுப்பினர்களின் சேர்க்கையில் ஒரே நாளில் ஐம்பது லட்சம் உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர். இன்னும் பலர் பதிவு செய்து கொண்டே வருவதால் …
Read More »ரஜினியின் முடிவு தவறாகத்தான் முடியும்
சென்னை ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற டிடிவி தினகரன் வரும் சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் புத்துணர்ச்சியுடன் களமிறங்குவார். அதிமுகவை தோற்கடித்து, திமுகவை டெபாசிட் இழக்க செய்த தினகரனுக்கு இந்த இரு கட்சிகளையும் தமிழக அளவில் அனைத்து தொகுதிகளிலும் எதிர்ப்பதில் பெரிய பிரச்சனை இருக்காது. இந்த நிலையில் திடீரென ரஜினி களத்தில் இறங்கியுள்ளதால் அவருக்கு இன்னொரு போட்டியாளர் உருவாகியுள்ளார். தற்போது அவரையும் சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்போதிருந்தே ரஜினியை …
Read More »அனைவரையும் ஒருங்கிணைக்கும்வரை அரசியல் பேச வேண்டாம்
மக்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும்வரை அரசியல் பேச வேண்டாம் என நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் பேசினார் நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் கடந்த 26ந்தேதி முதல் தன் ரசிகர்களை சந்தித்து வருகிறார். முதல் நாளில், காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி மாவட்ட ரசிகர்களை சந்தித்து, புகைப்படம் எடுத்து கொண்டார். இந்த சந்திப்பின்போது மேடையில் ரஜினியுடன் இயக்குநர் மகேந்திரன், தயாரிப்பாளர் கலைஞானம் ஆகியோர் இருந்தனர். கடந்த முறை …
Read More »நான் அரசியலுக்கு வருவது உறுதி
சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று தென்சென்னை மாவட்ட ரசிகர்களை சந்திக்கிறார். அவர்களுடன் புகைப்படமும் எடுத்து கொள்கிறார். இந்த நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் இருந்து புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம், இன்னும் 10 நிமிடங்கள் பொறுங்கள். மண்டபத்தில் அறிவிப்பினை பாருங்கள் என கூறி சென்றார். இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் விழா மேடைக்கு வந்ததும் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அதனை அடுத்து …
Read More »