முன்னாள் ஈபிடிபி உறுப்பினர் உட்பட ஐவர் மட்டக்களப்பில் கைது! மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற கொள்ளைச்சம்பங்களுடன் தொடர்புபட்ட ஐந்து பேர் கொண்ட கொள்ளைக்குழுவினர் ஆயுதங்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பிரிவுக்குட்பட்ட பார் வீதியில் முச்சக்கர வண்டியொன்றை சோதனையிட்டபோது மூவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதன்பின்னர் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே குறித்த கொள்ளையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கள்ளியங்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து துப்பாக்கியும் பத்து […]
Tag: Politics
வவுனியாவிலிருந்து புறப்பட்ட தியாக தீபம் திலீபனின் ஊர்தி
வவுனியாவிலிருந்து புறப்பட்ட தியாக தீபம் திலீபனின் ஊர்தி வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தியாக தீபம் திலீபனின் ஊர்தியுடனான நடைபயணம் இன்று ஆரம்பித்துள்ளது. குறித்த நடைபஅணம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியினால் இன்று காலை முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, சிங்கள குடியேற்றங்களை நிறுத்து, அரசியல் கைதிகளை விடுதலை செய், இன அழிப்பு மற்றும் காணாமல் ஆக்கபட்டவர்களை கண்டறிய சர்வதேச விசாரணையை மேற்கோள் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து […]
ரணில் ஒரு துரோகி என்பதை சத்தம்போட்டு சொல்லுவேன் !
ரணில் ஒரு துரோகி என்பதை சத்தம்போட்டு சொல்லுவேன் ! பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒரு துரோகி என நாடு முழுவதும் இடம்பெறும் ஒவ்வொரு கூட்டங்களிலும் தான் பகிரங்கமாகவே கூறுவேன், என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி […]
வெள்ளை வாகனத்தில் வர்த்தகர் கடத்தல்
வெள்ளை வாகனத்தில் வர்த்தகர் கடத்தல் உருபொக்க பிரதேசத்தில் வெள்ளை வாகனத்தில் வந்தவர்களால் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். இன்று காலை 6.30 மணியளவில் கடத்தல் இடம்பெற்றது. பெரலபநாதர பகுதியை சேர்ந்த சுரங்கா லக்மல் எதிரிசிங்க என்பவரே கடத்தப்பட்டுள்ளார். இலக்கத்தகடுகள் இல்லாத இரண்டு வெள்ளை வான்களில் வந்த ஒரு குழுவினரால் தொழிலதிபர் கடத்தப்பட்டார்.
நெதர்லாந்து பிரதான வீதி கோர விபத்தில் சிக்கிய தமிழர்கள் இருவர் பலி!
நெதர்லாந்து பிரதான வீதி கோர விபத்தில் சிக்கிய தமிழர்கள் இருவர் பலி! நெதர்லாந்தில் சாலை விபத்தில் சிக்கி தமிழர்கள் இருவர் பலியானதுடன் மூவர் படுகாயத்துடன் மீட்கபட்டுள்ளனர். நெதர்லாந்தின் லிம்பர்க் பகுதியில் உள்ள A73 நெடுஞ்சாலையில் இந்த கோர விபத்து நடந்துள்ளது. பிரான்ஸ் உரிமம் பெற்ற வான் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பின்னர் கம்பம் ஒன்றில் மோதி நின்றுள்ளது. இந்த விபத்தில் சிக்கி தமிழர்கள் இருவர் மரணமடைந்ததுடன் மூவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். […]
எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து யாழில் ஹர்த்தால்!
எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து யாழில் ஹர்த்தால்! தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை வலியுறுத்தியும், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தும் வகையிலும்,யாழ்ப்பாணத்தில் எழுக தமிழ் பேரணி இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து யாழில் வர்த்தக நிலையங்களை பூட்டியும், வாகன போக்குவத்துக்களை நிறுத்தியும் மக்கள் பேராதரவு வழங்கியுள்ளனர். அத்துடன் எழு தமிழை முன்னிட்டு வடக்கு கிழக்கு மாகாணத்திலும் பூரண ஹர்த்தாலை முன்னெடுக்குமாறு கோரிக்கை […]
யாழில் உலகிற்கு செய்தி சொல்லும் ‘எழுக தமிழ்’ பேரணி ஆரம்பம்!
யாழில் உலகிற்கு செய்தி சொல்லும் ‘எழுக தமிழ்’ பேரணி ஆரம்பம்! தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை வலியுறுத்தியும், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தும் வகையிலும், வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரனை இணைத் தலைவராக க்கொண்ட, தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எழுக தமிழ் பேரணி யாழில் நடைபெறுகின்றது. இந்நிலையில் தமிழ் மக்களின் பல்வேறு அரசியல் காரணங்களை முன்வைத்து, யாழில் இடம்பெறும் “எழுக தமிழ்” பேரணிக்கு மக்கள் […]
கனிமொழி உட்பட பல்வேறு அரசியல் முக்கியஸ்தர்கள் இலங்கைக்கு வருகை – வெடித்தது சர்ச்சை
கனிமொழி உட்பட பல்வேறு அரசியல் முக்கியஸ்தர்கள் இலங்கைக்கு வருகை – வெடித்தது சர்ச்சை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் புதல்வியின் திருமண நிகழ்வில் கலந்து கொள்ள தமிழகத்தின் தி.மு. க எம் .பி கனிமொழி உட்பட பல்வேறு அரசியல் முக்கியஸ்தர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அந்தவகையில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொஹிதீன், திராவிட முன்னேற்ற கழகத்தின் துணைத் தலைவரும் […]
படம் மட்டும் பெற்றோர் பணத்தில் பார்க்க வேண்டுமா?
மாணவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்லும் ரஜினி, பெற்றோர் கொடுக்கும் பணத்தில் படம் பார்க்க வேண்டாம் என்று சொல்ல வேண்டியதுதானே என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். பெற்றோர் கஷ்டப்பட்டு பணம் கொடுத்து படிக்க வைக்கிறார்கள். படிக்கும் வயதில் மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டாம் என்று ரஜினிகாந்த் கூறினார். செய்தியாளர்களை சந்தித்த சீமான் இதுகுறித்து கூறியதாவது:- ரஜினி சொல்வது போல் தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை. ரஜினியின் […]
நான் அரசிலுக்கு வருவது எப்போது
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு, திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலமின்மை ஆகிய இரண்டும் பல நடிகர்களை அரசியலுக்கு இழுத்துள்ளது. நடிகர்களில் பலர் கட்சி ஆரம்பிக்கவும், முதல்வர் கனவில் மிதக்கவும் ஆரம்பித்துவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்துவிட்டார்., ரஜினியும் அரசியல் கட்சியை விரைவில் ஆரம்பிகக்வுள்ளார். இவர்கள் மட்டுமின்றி விஜய், விஷால், பாக்யராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் அரசியலில் எப்போது வேண்டுமானாலும் குதிக்க வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் வரும் […]




