Tag: வித்தியா படுகொலை

சர்வதேசத்துக்கு ஆபாச காணொளி விற்பனை செய்யும் நோக்கிலேயே வித்தியா படுகொலை

சர்வதேசத்துக்கு ஆபாச காணொளி விற்பனை செய்யும் நோக்கிலேயே யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்கொடுமையின் பின்னர் கொல்லப்பட்டார் என்று பதில் சட்டமா அதிபர் டப்புள்ள டி லிவேரா தெரிவித்தார். இந்தப் படுகொலை விசாரணைகளை 7 நாட்களுக்குள் முடிவுறுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். வித்தியா கூட்டு வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கின் சாட்சியப் பதிவு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் நேற்று ஆரம்பமானது. ட்ரயல் அட் பார் […]

வித்தியா படுகொலை வழக்கு: சிறப்பு அமர்விற்கான நீதிபதிகள் நியமனம்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு மூவர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணை செய்யப்படவுள்ள நிலையில், அதற்கான விசேட நீதிபதிகள் பிரதம நீதியரசர் பிரியசாத் டிப்பினால் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, வழக்கு விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலசிங்கம் சசி மகேந்திரன் தலைமையில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் ஆகியோரினால் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, வழக்கு […]

வித்தியா படுகொலை: பத்தாவது சந்தேக நபர் தொடர்ந்தும் விசாரணை

வித்தியா படுகொலை: பத்தாவது சந்தேக நபர் தொடர்ந்தும் விசாரணை   யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை தொடர்பான வழக்கில் பத்தாவது சந்தேக நபரை தொடர்ந்தும் விசாரணை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு வருட காலத்திற்கு பத்தாவது சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு யாழ். மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான வழக்கு இன்று யாழ். மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, அரச […]