வவுனியா நகரப்பகுதியை அண்டியுள்ள மக்கள் குடியிருப்புக்களில் நுழையும் குரங்குகளால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிா்நோக்குவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். வவுனியா நகரை அண்மித்துள்ள கற்குழி, குட்செட்வீதி, வைரவபுளியங்குளம், உள்வட்ட வீதி, வவுனியா நகரம், குருமன்காடு உள்ளிட்ட பகுதிகளே குரங்குகளின் தொல்லைகளுக்கு ஆளாகியுள்ளன. குறித்த பகுதிகளுக்கு நாளாந்தம் வந்து செல்லும் குரங்குகள் அப்பகுதியில் உள்ள மக்களது வசிப்பிடங்களில் புகுந்து அவர்களது ஆடைகள், வீட்டு வளவில் உள்ள பொருட்கள், பயன்தரு மரங்களில் உள்ள […]
Tag: வவுனியா
தமிழரசுக் கட்சியை புறந்தள்ளி இடம்பெற்ற ரகசிய சந்திப்பு!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சியான தமிழரசுக் கட்சியை தவிர்த்து, ஏனைய பங்காளிக் கட்சிகள் ரகசிய சந்திப்பொன்றை நடத்தியுள்ளன. வவுனியா புகையிரத நிலையத்திற்கு அண்மையில் உள்ள விருந்தினர் விடுதியொன்றில், நேற்று (புதன்கிழமை) இரவு இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. எனினும், இச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. வடக்கு மாகாண சபையின் சுழற்சி முறையிலான ஆசனம், இம்முறை தமிழரசுக் கட்சிக்கு வழங்கப்பட்ட நிலையில் ஏனைய கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இவ்வாறான […]
வவுனியாவில் வாள்வெட்டு: ஒருவர் படுகாயம்
வவுனியா, சமனங்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் வசிக்கும் சுப்பிரமணியம் சத்தியசீலன் (வயது – 27) என்பவருக்கும் அப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கும் இடையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகிய சத்தியசீலன், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த […]
சொந்த இடத்தில் அகதி வாழ்க்கை: வவுனியாவில் ஆர்ப்பாட்டம்
வவுனியா தாலிக்குள மக்கள் தமக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட வேண்டும் எனக் கோரி இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த பிரதேசத்தில் கடந்த பத்து வருடங்களாக வசித்து வருகின்ற போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த சுமார் முப்பது குடும்பங்களுக்கும், உப குடும்பங்களுக்கும் இதுவரை வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டப்படத்தக்கது. இதேவேளை, போரினால் பாதிக்கப்பட்டு உடைமைகள் அனைத்தையும் இழந்து அகதி வாழ்வு வாழ்ந்த பின்னர் இங்கு குடியேறியிருந்த நிலையில் கூட, தற்போது வரை எமக்கு […]
வவுனியாவில் சற்று பற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது
முதலமைச்சர் மற்றும் சத்தியலிங்கத்தின் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல் : வவுனியாவில் பதற்றம்
வவுனியாவில் தீர்வின்றி தொடர்கிறது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டம்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 75ஆவது நாளாக இன்றும் (செவ்வாய்க்கிழமை) தொடர்கிறது. வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் தீர்வு எதுவும் எட்டப்படாத நிலையில் முன்னெடுக்கப்படுகின்றது. அவசரகாலச் சட்டத்தினை இரத்துச் செய்யுமாறும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் விபரங்கள் விரைவில் அரசாங்கத்தினால் வெளியிட வேண்டுமெனவும் கோரி வடக்கு கிழக்கின் ஐந்து மாவட்டங்களில் மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து […]
வவுனியாவில் அதிக பணம் செலுத்தும் மின் பாவனையாளர்கள்
வவுனியாவில் மின்சார சபையின் ஊழியர்கள் சீரான முறையில் மின்பட்டியலை வழங்காமையினால் மின் பாவனையாளர்கள் அதிகளவு பணத்தினை மின்சார சபைக்கு செலுத்தவேண்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக மின் பாவனையாளர் கருத்து தெரிவிக்கையில், மின்சார பாவனைக்கான பட்டியலில் அளவீட்டு முறையில் பணம் அறவிடப்படுகின்றது. குறிப்பாக முதலாவது யூனிட்டில் இருந்து 156 ஆவது யூனிட் வரையான ஒவ்வொரு 39 யூனிட்டுக்கும் அறவீட்டு தொகை மாற்றம் அடைந்து செல்லும். இதன்போது 79 ஆவது யூனிட்டில் இருந்து […]
வவுனியாவில் இடம்பெற்ற நடமாடும் சேவை தொடர்பில் மக்கள் விசனம்
வவுனியாவில் மாவட்ட செயலகத்தின் வழிகாட்டலுடன் வவுனியா பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட ‘நில மெகவர’ ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் நடமாடும் சேவை ஒன்று பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக நடத்தப்பட்டது. இந்த நடமாடும் சேவையில் வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களைச் சேர்ந்த பெருமளவான பொது மக்கள் காணி பிணக்குகளுக்கு தீர்வு காண்பதற்காக வருகை தந்துள்ளனர். வவுனியா தமிழ் […]
வவுனியாவில் “சமுர்த்தி அபிமானி “
உள்ளுர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக வவுனியாவில் “சமுர்த்தி அபிமானி” நிகழ்ச்சித்திட்டத்தினை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோகண புஸ்பகுமார ஆரம்பித்து வைத்தார். மாவட்டசெயலக வளாகத்தில் நேற்று ஆரம்பமான இந்த நிகழ்வினை சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சின் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில் உள்ளுர் உற்பத்தியாளர்கள் பெருமளவில் கலந்துகொண்டு தமது பொருட்களை காட்சிப்படுத்தியதுடன் விற்பனையிலும் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் மார்ச் மாதத்தில் மாத்திரம் 100 டெங்கு நோயாளர்கள்
வவுனியாவில் மார்ச் மாதத்தில் மாத்திரம் 100 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் பொலிஸ், சிவில் பாதுகாப்பு பிரிவு மற்றும் சுகாதார திணைக்களம் ஆகியன இணைந்து டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளன. வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று காலை இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வு கூட்டத்தினை அடுத்து வீதியோரங்களில் டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்களை துப்பரவு செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு பிரிவுடன் நகரசபை ஊழியர்கள் […]





