ஆவா குழு வவுனியாவில் பெற்றோல் குண்டு தாக்குதல்! வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் முன் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், வீட்டின் சுவரில் ஆவா குழு என பெயர் பதிக்கப்பட்டுள்ளது. இரவு 9 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பண்டாரிக்குளம், கூமாங்குளம் வீதியில் உள்ள வீடு ஒன்றின் முன்னால் மோட்டார் சைக்கிள்களில் வந்த இளைஞர்கள் அவ்விடத்தில் நின்றுவிட்டு வீட்டு முன்பாக பெற்றோல் குண்டுத் …
Read More »வவுனியா நகரத்தில் இடம்பெற்ற சுற்றிவளைப்பில் பத்து பேர் கைது
வவுனியா நகர பள்ளிவாசலை சூழவுள்ள பகுதியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது பத்து பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் வவுனியா நகரப் பள்ளிவாசலை சூழவுள்ள பகுதியில் இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து கடும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதன்போதே சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் வான் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, சுற்றிவளைப்பு பகுதியிலிருந்து …
Read More »வவுனியா முஸ்லிம் பகுதிகள் சுற்றிவளைப்பு
வவுனியாவில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இரர்ணுவமும் பொலிஸாரும் இணைந்து இன்று காலை சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொண்டனர். வவுனியா பட்டானிச்சூர் மற்றும் சாளம்பைக்குளம் பகுதிகளிலேயே இவ்வாறு அதிகளவான பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டுள்ளதுடன் வீதியால் செல்லும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களும் நிறுத்தி சோதனை செய்யப்பட்டிருந்தது. கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வவுனியாவில் முக்கிய இடங்களான வைத்தியசாலை, பேருந்து …
Read More »வவுனியா வைத்தியசாலையில் தீவிரமாகும் ராணுவத்தினரின் சோதனை!
வவுனியா வைத்தியசாலைக்கு செல்லும் மக்கள் உள்ளே செல்லும் போது தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பாதுகாப்பு அமைச்சிடமிருந்து வந்த தகவலின் அடிப்படியிலே இவ்வாறான சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது வைத்தியசாலை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும் வைத்தியசாலை வளாகத்தில் இருந்து பொலிஸாரால் அப்புறப்படுத்தப்பட்டதுடன் வைத்திசாலைக்கு வரும் நோயாளர்கள் முதல் பார்வையிட வருபவர்களது பொதிகள், ஆடைக்கு மேலாக அங்கிகள், தலை கவசங்கள் …
Read More »நாளை மற்றும் நாளை மறுநாள் வடமாகாணம் முழுவதும் மின் வெட்டு
அனுராதபுரம், வவுனியா ஊடான பிரதான மின் விநியோக மார்க்கங்களில் அவசர திருத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் வடமாகாணம் முழுவதிலும் எதிர்வரும் (14.07.2018, 15.07.2018 சனி, ஞாயிறு) ஆகிய இரு தினங்களிலும் காலை 8 மணி தொடக்கம் மாலை 05 மணி வரை மின் விநியோகம் முற்றாக துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. வட மாகாணத்திலுள்ள முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி, மற்றும் யாழ்ப்பாணம், ஆகிய மாவட்டங்களிலேயே மின் …
Read More »சிங்களமயமாகும் கிளிநொச்சி வைத்தியசாலை : தமிழர்கள் அதிர்ச்சி
கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் உயிர்காக்கும் மருத்துவ சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் தமிழ் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கிவருவதாக மக்கள் தமது ஆதங்கத்தை தெரிவித்தனர். கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு நாளாந்தம் ஆயிரக்கணக்கான பொது மக்கள் மருத்துவச் சேவையை நாடிவருகின்றனர். ஆனால், இந்த வைத்தியசாலையின் அண்மைக்கால போக்குகள் மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முல்லைத்தீவுக்கு அடுத்தபடியாக கிளிநொச்சி மாவட்டமே காணப்படுகிறது. யுத்தம் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டு 9 ஆண்டுகள் கடந்துவிட்டன. …
Read More »வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் விமானப்படை வீரர் படுகாயம்
வவுனியாவில் இன்று மாலை கண்டி வீதியில் இடம்பெற்ற விபத்தில் வன்னி விமானப்படைத்தளத்தில் பணியாற்றும் விமானப்படை வீரர் படுகாயமடைந்த நிலையில் வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று மாலை 4 மணியளவில் வன்னி விமானப்படை தளத்திற்கு அருகில் துவிச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்த விமானப்படை வீரரை நுவரெலியாவிலிருந்து வந்த மோட்டார் கார் மேதியதில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த வன்னி விமானப்படை வீரர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். …
Read More »வவுனியாவில் வித்தியாவின் வீட்டுக்குச் சென்றார் ஜனாதிபதி! – நன்றி தெரிவித்தார் தாய் (படங்கள் இணைப்பு)
வவுனியாவில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ‘உத்தியோகபூர்வ பணி’ ஜனாதிபதி சேவை நிகழ்ச்சித்திட்டத்தின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிகழ்ச்சியின் முடிவில் யாழ்.புங்குடுதீவில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் தாயாருடன் கலந்துரையாடினார். கூட்டு வன்புணர்வின் பின் கொடூரமான முறையில் வித்தியா படுகொலைசெய்யப்பட்ட நிலையில், அவரின் கொலைக்கு சட்ட ரீதியான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்காக ஜனாதிபதி வழங்கிய உதவி குறித்து அவரின் தாயார் ஜனாதிபதிக்கு இதன்போது நன்றி தெரிவித்தார். …
Read More »ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட குழு வவுனியாவில்
ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட குழுவானது பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வவுனியாவை சென்றடைந்துள்ளது ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பொலன்னறுவை மற்றும் காலி ஆகிய பகுதிகளில் நடமாடும் சேவை முடிவடைந்த நிலையில், இந்த ஆண்டிற்கான இறுதி நடமாடும் சேவை வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இன்று நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சில …
Read More »13 வயது மகளை கர்ப்பிணியாக்கிய தந்தைக்கு 14 நாட்கள் விளக்கமறியல்
வவுனியா, ஈச்சங்குளம் பகுதியில் 13 வயதுச் சிறுமி ஒருவரைத் துஷ்பிரயோகம் செய்தார் எனத் தெரிவித்து அச்சிறுமியின் தந்தைஈச்சங்குளம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருபவை வருமாறு:- வவுனியா, ஈச்சங்குளம் பகுதியில் வசித்துவந்த குடும்பமொன்றின் 13 வயதுச் சிறுமியின் நடத்தையில் சந்தேகமடைந்த தாயார் மூன்று தடவைகள் தனியார் வைத்தியசாலையில் ஆலோசனை பெற்றிருந்தார். சிறுமி உடல் பலவீனமாகவுள்ளார் எனத் தெரி விக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அதில் திருப்தியடையாத தாயார் வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்று …
Read More »