Tag: வடக்கு மாகாண சபை

வடக்கு மாகாண சபையில் புதிய அமைச்சரவை! – ஆளுநர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் 

வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினர்களைக்கொண்ட அமைச்சரவை இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற சத்தியப்பிரமாண வைபவத்துடன் பொறுப்பேற்றது. ஏற்கனவே அமைச்சராக இருக்கும்  கந்தையா சர்வேஸ்வரனுக்கு மேலதிகமாக முதல்வர் விக்னேஸ்வரனும், அமைச்சர் அனந்தி சசிதரனும் புதிய அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றனர். அதனால் அவர்கள் இருவரும், அத்துடன் புதிதாக அமைச்சர் பதவிகளை ஏற்ற ரெலோவின் ஞானசீலன் குணசீலன், புளொட்டின் கந்தையா சிவநேசன் ஆகியோரும் இன்று  தத்தமது பொறுப்புகளை ஏற்று […]

வடக்கு முதலமைச்சர் விடாப்பிடி! அமைச்சரவை விரைவில் மாறும்!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையின் அமைச்சரவையை விரைவில் முழுமையாக மாற்றியமைப்பதில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உறுதியாக இருக்கின்றார். அமைச்சரவையைப் பற்றிய முடிவுகளில் எவரது தலையீடுமின்றி முடிவெடுக்கும் உரிமை தனக்கு மட்டுமே வழங்கப்படவேண்டும் என்று கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களது கூட்டத்தில் ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளார். “அமைச்சரவை மாற்றம் விரைவில் இடம்பெறும். அது பகுதியாகவா, முழுமையாகவா என்பது குறித்து இன்னும் முடிவுசெய்யப்படவில்லை” என்று ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்  வடக்கு முதலமைச்சர் […]

முல்லைத்தீவில் வெளிச்ச வீடு அமைக்க பிரேரணை நிறைவேற்றம்

மாவட்ட மீனவர்களுக்கான வெளிச்ச வீட்டை உடன் அமைக்குமாறு கோரும் பிரேரணை, வடக்கு மாகாண சபையில் இன்று (வியாழக்கிழமை) நிறைவேற்றப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 100ஆவது அமர்வு இன்று (வியாழக்கிழமை) நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், மேற்படி வெளிச்ச வீட்டை அமைக்குமாறு கோரி கடந்த 8 வருடங்களாக கோரிக்கை விடுக்கப்பட்டபோதும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எவையும் எடுக்கப்படாத நிலையில் இன்றைய தினம் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனால் முன்வைக்கப்பட்ட குறித்த […]

ஐந்து அமைச்சுக்களின் செயற்பாடுகளை ஆராய வடக்கு மாகாண சபையின் சிறப்பு அமர்வு 21 இல்!

வடக்கு மாகாண சபையின் ஐந்து அமைச்சுக்களினதும் கடந்த மூன்றரை வருடகால செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்கான சிறப்பு அமர்வு எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறும் என அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அறிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா விடுத்த கோரிக்கைக்கு அமையவே இந்தச் சிறப்பு அமர்வு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 98 ஆவது அமர்வு கடந்த வியாழக்கிழமை மாகாண சபையின் பேரவைச் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது, எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா […]

முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அமைச்சு மீதும் விசாரணை வேண்டும் : பிரேரணை சமர்ப்பிப்பு

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் அமைச்சு உள்ளிட்ட 5 அமைச்சுக்கள், திணைக்களங்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பில் தெரிவுக் குழுவை அமைத்து விசாரித்து, விசாரணை அறிக்கையை மாகாண சபைக்குச் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கோரும் பிரேரணை அடுத்த அமர்வில் எடுத்துக்கொள்வதற்காகப் பேரவைச் செயலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மீன்பிடி மற்றும் சுகாதார அமைச்சுகள் மீது மாத்திரம் விசாரணை நடத்துவதற்கு 4 பேரைக் கொண்ட […]

வடக்கு மாகாண சபை முரண்பாடுகளுக்கு விரைவில் தீர்வு: சம்பந்தன்

வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மொறட்டுவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினை ஒரு பெரிய பிரச்சினை அல்ல எனவும் இதற்கு தீர்வு காண்பது என்பது சிறிய விடயம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். அத்தோடு, […]

பெரும்பான்மையை நிரூபிக்குமாறு சி.வி.க்கு அறிவுறுத்தல்

வடக்கு மாகாண சபையில் தமது பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே அறிவுறுத்தல் விடுத்துள்ளார். வடக்கு முதல்வருக்கு எதிராக 22 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு ஆளுநரிடம் கடிதமொன்று கையளிக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சரிடம் வடக்கு ஆளுநர் இவ் அறிவுறுத்தலை முன்வைத்துள்ளார். வடக்கின் அமைச்சர்கள் நால்வருக்கு எதிராக ஊழல் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், இருவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ள […]

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு போக்குவரத்து ஏற்பாடுகள்! – வடக்கு மாகாண சபை மேற்கொண்டுள்ளது

வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில், முள்ளிவாய்க்காலில் நாளைமறுதினம் வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வுக்கான பஸ் ஒழுங்குகள் மாவட்ட ரீதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று நினைவேந்தல் குழு சார்பில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- முல்லைத்தீவு மாவட்டம் பஸ் ஒழுங்குகள் – துணுக்காய் பிரதேச செயலகம் முன்பாக காலை 7.30, மாந்தை கிழக்கு […]

சிவாஜிலிங்கத்தின் செயற்பாடு கவலையளிக்கின்றது: பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துடன் இணைந்து சிலர் விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவதும், இராணுவத்தினரை விமர்சிப்பதும் கவலையளிப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். அரநாயக்க பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த அமைச்சர், இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளின் நினைவாக முள்ளிவாய்க்கால் வாரம் அனுஷ்டிக்கப்படுகின்றமை தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார். இவ்வாறு விளக்கேற்றி படையினரை அசௌகரியத்திற்கு உள்ளாக்க இடமளிக்கப்பட மாட்டாதென தெரிவித்த […]

வடக்கு சுற்றுலா நியதிச்சட்டத்திற்கு நாடாளுமன்றத்திடம் அனுமதி!

வடக்கு மாகாணத்திற்குரிய சுற்றுலா நியதிச்சட்டம் தொடர்பான நாடாளுமன்றத்தின் நிலைப்பாட்டை வடக்கு மாகாண சபை கோரியுள்ளது. இது தொடர்பான அறிவித்தல் தமக்குக் கிடைத்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற நிலையியல் கட்டளையின் 46(அ)3(அ) பிரிவின் கீழ்தான் இந்த அறிவிப்பை நாடாளுமன்றத்திற்கு விடுப்பதாக குறிப்பிட்ட சபாநாயகர், இந்த அறிவித்தல் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டார். அத்தோடு, நியதிச்சட்ட வரைபின் பிரதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் […]