தமிழகத்தை அதிர வைத்த இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான நாதுராம் கைது செய்யப்பட்டார். சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடை ஒன்றில் கொள்ளையடித்த கொள்ளையர்களை பிடிக்க சென்ற பெரியபாண்டியன் என்ற ஆய்வாளர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜஸ்தானில் சுட்டு கொல்லப்பட்டார். பெரியபாண்டியன் முதலில் கொள்ளையர்களால் சுடப்பட்டதாக செய்திகள் பரவிய நிலையில், முனிசேகர் என்ற காவலர் சுட்ட போது தவறி பெரியபாண்டியன் மீது பட்டதால் அவர் மரணமடைந்தது தெரிய …
Read More »ஆண்டின் தொடக்கத்திலே தொடங்கிய பன்றிக்காய்ச்சல்
ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான மக்கள் பன்றிக் காய்ச்சல் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் சமீபகாலமாக H1N1 எனும் வைரசால் ஏற்படும் பன்றிக்காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2017 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் பன்றிக்காய்ச்சலால் 3500 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி 280 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து 2018 ஆண்டின் தொடக்கத்திலே, பன்றி காய்ச்சல் பரவி வருவதனால் பொதுமக்கள் நடுக்கத்தில் உள்ளனர். பொதுமக்கள் …
Read More »பெரியபாண்டியன் கொலை வழக்கில் சக ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு
ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட பெரியபாண்டியன் வழக்கை தீவிரமாக ராஜஸ்தான் போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில் பாலி மாவட்ட காவல்துறை அதிகாரி பார்கவி, ‘பெரியபாண்டியனின் உடலை துளைத்தது சக ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கியில் இருந்து வெளிவந்த குண்டு’ என்று கூறி அதிர்ச்சி அளித்தார். இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி, ‘பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் சென்னை கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் மீது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்த்ரன் போலீசார் …
Read More »பெரியபாண்டி உடலில் பாய்ந்தது சக காவலரின் குண்டா?
காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் ராஜஸ்தான் மாநிலத்தில் கொள்ளையர்களால் சுட்டு கொல்லப்பட்ட நிலையில் அவரது உடல் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு நேற்று மதுரை வழியாக அவரது சொந்த ஊரான மூவிருந்தாளி சாலைப்புதூர் வந்தடைந்தது. கிராம மக்களும் உறவினர்களும் பெரியபாண்டியனுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் அவரது மரணத்தில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. சென்னை நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்புடைய வடமாநில கொள்ளையர்களை பிடிக்க மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் …
Read More »கிருஷ்ணர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் டுவிட் செய்த ஆம் ஆத்மி முன்னாள் தலைவர் பிரசாந்த் பூஷன் மீது ராஜஸ்தான் காவல்துறையிடம் புகார்
கிருஷ்ணர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் டுவிட் செய்த ஆம் ஆத்மி முன்னாள் தலைவர் பிரசாந்த் பூஷன் மீது ராஜஸ்தான் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் பெண்களை கிண்டல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ரோமியோ எதிர்பு படையை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார். இந்த அறிவிப்பை கிண்டல் செய்யும் வகையில் முன்னாள் ஆம் ஆத்மி தலைவரும், சமூக ஆர்வலருமான பிரசாந்த் பூஷன் டுவிட் செய்திருந்தார். அதில், “ரோமியோ ஒரே ஒரு …
Read More »