ஆர்.கே.நகரில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற டிடிவி தினகரனுக்கு ஆளும் தரப்பு அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் வாழ்த்து கூறியதாகவும், இதனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சமி அதிர்ச்சியானதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. சென்னை ஆர்.கே.நகரில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன், அதிமுக வேட்பாளர் மதுசூதனனை விட 40,707 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இது, எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் தரப்பினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதேபோல், இந்த தோல்வியை அடுத்து, நிர்வாகிகளின் ஆதரவும், …
Read More »எங்களை கட்சியில் நீக்குவதற்கு யாருக்கும் உரிமை இல்லை
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததை அடுத்து நேற்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் தினகரனுக்கு ஆதரவாக உள்ள தங்கத்தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், ரங்கசாமி, பார்த்திபன், முத்தையா, வி.பி.கலைராஜன், ஆகியோரை நீக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி தங்கத்தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், ரங்கசாமி, பார்த்திபன் அகியோர் மாவட்ட செயலாளர்கள் பதிவியில் இருந்து நீக்கப்பட்டனர். முத்தையா, …
Read More »