Friday , November 22 2024
Home / Tag Archives: யாழ்ப்பாணம்

Tag Archives: யாழ்ப்பாணம்

மீண்டும் அமுலாகியுள்ள ஊரடங்கு உத்தரவு

மீண்டும் அமுலாகியுள்ள ஊரடங்கு உத்தரவு

மீண்டும் அமுலாகியுள்ள ஊரடங்கு உத்தரவு இன்று காலை 6 மணிக்கு காவல் துறை ஊரடங்கு உத்தரவு  தளர்த்தப்பட்ட வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கும் மற்றும் புத்தளம் மாவட்டத்திற்கும் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று பிற்பகல் 2 மணி முதல் இந்த ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இன்று பிற்பகல் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு உத்தரவானது எதிர்வரும் திங்கட்கிழமை 30 ஆம் திகதி காலை 6 …

Read More »

யாழில் இரு குழந்தைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை!

யாழில் இரு குழந்தைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை!

யாழில் இரு குழந்தைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை! யாழ்ப்பாணம் – ஓட்டுமடம், வயல்கரை வீதி பகுதியை சேர்ந்த சிறி சிவகுமார் சிவிதரன் (25) என்ற இரண்டு குழந்தைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தூக்கில் தொங்கிய நிலையில் அவர் உறவினர்களால் மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அவர் உயிரிழந்துள்ளார். இதன்போது போதனா வைத்தியசாலையில் குவிந்த உறவினர்களால் வைத்தியசாலை வளாகத்தில் சிறிது நேரம் பதட்டமான நிலை காணப்பட்டது. …

Read More »

யாழில் குழியில் விழுந்து இளைஞன் ஒருவர் பலி!

யாழில் குழியில் விழுந்து இளைஞன் ஒருவர் பலி!

யாழில் குழியில் விழுந்து இளைஞன் ஒருவர் பலி! யாழ்ப்பாணம்- அராலி வீதியில் மதகு கட்டுவதற்காக வெட்டப்பட்டிருந்த குழியில் விழுந்து 25 வயதான இளைஞன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ்.நகரில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்யும் குறித்த இளைஞன் பணி முடித்து வீடு திரும்பும்போதே விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அராலியை சேர்த்த சூரியகுமார் கீர்த்தனன் (வயது-25) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளான். சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை …

Read More »

யாழ் சர்வதேச விமான நிலையம் மூடல்!

யாழ் சர்வதேச விமான நிலையம் மூடல்!

யாழ் சர்வதேச விமான நிலையம் மூடல்! யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மூடப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார். இலங்கையிலும் கொரோனா தொற்று அச்சுறுத்தல் நிலவும் நிலையில் இன்றிலிருந்து யாழ். சர்வதேச விமான நிலையத்திலிருந்து எதிர்வரும் இரு வாரங்களுக்கு விமான சேவைகள் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தற்காலிகமாக விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. மேலும் செய்திகள் …

Read More »

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் வெடிப்பு சம்பவம்!

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் மற்றுமொரு குண்டுவெடிப்புச் சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள தேவாலயமொன்றின் உள்ளே பொதுமக்கள் வழிபாடுகளில் ஈடுபட்டுகொண்டிருந்த வேளையில் குண்டுவெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. எனினும் டைனமைட் என்ற வெடிபொருள்களாக இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. எனினும் உறுதியான தகவல் வெளியாக வில்லை. சம்பவ இடத்தில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் பல பகுதிகளில் அடுத்து அடுத்து இடம்பெற்றுள்ள குண்டு வெடிப்பு சம்பவத்தால் மக்கள் …

Read More »

மதங்களுக்கு இடையில் முறுகல்…யாழில் பதற்றமான சூழ்நிலை

நல்லூர் – செம்மணிச் சந்தியில் யாழ்ப்பாணம் வரவேற்பு பலகைக்கு அருகாமை மற்றும் செம்மணி இந்து மயானத்துக்கு அண்மையில் என இரு இடங்களில் கிருஸ்தவ மதத்தினரால் நடப்பட்ட பதாகைகளால் நேற்று இரவு பரபரப்பு ஏற்பட்டது. அந்த பதாகைகள் நடப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதால் பொலிஸார் இரவு 11 மணிக்கு அங்கு வந்து சம்பவம் தொடர்பில் ஆராய்ந்தனர். அத்துடன் அந்தப் பகுதியில் நீண்ட நேரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றின் சாரதியிடன் …

Read More »

அதிகரித்த வெப்பத்தால் பற்றி எரிந்த வயல்!!

யாழ்ப்பாணம், காரைநகர்ப் பகுதியில் அறுவடையின் பின்னர் விடப்பட்டிருந்த வைக்கோல்கள் தீப்பற்றி எரிந்துள்ளது. சுட்டெரிக்கும் கடும் வெப்பமான காலநிலை நிலவுவதால் தீ ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. சூடு அடிப்பட்டு வயல்களில் போடப்பட்ட வைக்கோல்களில் தீ பற்றியது. அது அங்குள்ள வயல்களில் மெல்ல மெல்ல பரவ ஆரம்பித்தது. தீ வீடுகளுக்குள் பரவாதிருக்க ஈரமான சாக்குகளைப் போட்டு தடுக்கப்பட்டது என்று மக்கள் தெரிவித்தனர்.

Read More »

இணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம்

யாழ்ப்பாணம் – இணுவில் பிரதேசத்தின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மௌனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இணுவில் கந்தசுவாமி கோவில் முன்றலில் இருந்து இன்று (திங்கட்கிழமை) காலை ஆரம்பிக்கப்பட்ட மௌன ஊர்வலம், உடுவில் பிரதேச செயலக அலுவலகத்தை சென்றடைந்து, உடுவில் பிரதேச செயலாளரிடம் மனு ஒன்றினை கையளித்தலுடன் நிறைவு பெற்றது. இதன்போது அரசியல் சுயநலன்களுக்காக எல்லை மீள் நிர்ணயத்தின்போது, இணுவில் கிராமத்தின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் …

Read More »

யாழில் தொடரும் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம்

யாழ்ப்பாணம், மேற்கு உப்புமடம் சந்தியிலுள்ள வர்த்தக நிலையம் மற்றும் அங்கு தரித்துநின்ற முச்சக்கரவண்டி ஆகியவற்றின் மீது வாள்வெட்டு குழு தாக்குதல் நடத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த பகுதிக்கு இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஐந்து பேர் கொண்ட குழுவினர் இத்தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை …

Read More »

சிரியா இனப்படுகொலையை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்

சிரியாவில் அரச படைகள் நடத்திவரும் கொடூரத் தாக்குதல்கைளக் கண்டித்தும் அதனை நிறுத்துமாறு வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் இன்று (வியாழக்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்திற்கு எதிரில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கில் வாழும்இ தமிழ்இ முஸ்லிம் மக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதன்போதுஇ சிரியாவின் கிழக்கு ஹௌட்டாவில் இடம்பெற்று வரும் மனித படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும்இ அங்கு உடனடியாக யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட …

Read More »