இன்று யாழில் வீடு புகுந்து வாள்வெட்டுக்குழு அட்டகாசம் தென்மராட்சி மட்டுவில் சந்திரபுரம் பகுதியிலுள்ள வீடொன்றில் நுழைந்து வாள்வெட்டுக் குழு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. இன்று அதிகாலை நுழைந்த நான்கு பேரடங்கிய குழு வீட்டின் கேற் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேட்டார் சைக்கிள் உட்பட வீட்டின் ஐன்னல் கண்ணாடிகளையும் அடித்து நொருக்கியுள்ளது. இதனையடுத்து வீட்டில் இருந்தவர்கள் கூக்குரல் எழுப்பியதையடுத்து குறித்த ஆயுதக் கும்பல் தப்பித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச் சம்பவம் தொடர்பில் […]
Tag: யாழில்
யாழில் வீடொன்றிற்குள் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்ட வாள்வெட்டுகுழு!
யாழ்ப்பாணம், கோண்டாவில், அன்னுங்கை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளது. இந்த சம்பவம் இன்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், கோண்டாவில் அன்னுங்கை பகுதியைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவரின் வீட்டிற்கு இரு மோட்டார் சைக்கிகளில் நான்கு பேர் கொண்ட குழுவினர் முகங்களை மூடியவாறு சென்றுள்ளனர். அவர்கள் வீட்டின் யன்னல்களை அடித்து நொறுக்கியதுடன் […]
யாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டு
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை- ஊாிக்காடு பகுதியில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழு ஒன்று வாள்வெட்டு தாக்குதல் நடாத்தியுள்ளது. நேற்றய தினம் இரவு 9 மணியளவில் ஊாிக்காடு பகுதியில் உள்ள இராணுவத்தின் கடை ஒன்றில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இதனையடுத்து குறித்த பகுதியில் சுற்றிவளைப்பினை மேற்கொண்ட இராணுவத்தினர் 3 இளைஞா்களை கைது செய்துள்ளதோடு இரண்டு வாள்களையும் மீட்டுள்ளனா். இந்நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் வல்வெட்டித்துறை பொலிஸாாிடம் ஒப்படைக்கபப்ட்டுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழில் முஸ்லிம் குடும்பங்களுக்கு தானம் வழங்கிய படையினர்
யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரப் பகுதியில் வசிக்கும் 20 முஸ்லிம் குடும்பங்களுக்கு படையினரால் அத்தியாவசிய உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளது. பொசன் பண்டிகையை முன்னிட்டு படையினர் குறித்த பொருட்களை வழங்கியுள்ளனர். யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சியின் ஏற்பாட்டில் படை அதிகாரிகள் கலந்து கொண்டு இந்த உலர் உணவுப் பொருள்களை வழங்கிவைத்துள்ளனர்.
யாழில் வீதியிலிருந்து மீட்கப்பட்ட சின்னஞ்சிறு சிசு…
யாழ். வடமராட்சியில் பிறந்து சில மணி நேரமேயான சிசுவை வீதியில் எறிந்த கொடூர சம்பவமொன்று பதிவாகியுள்ளது. வடமராட்சி துன்னாலை மத்தி ஞானாசாரியார் சுடலைக்கு அண்மையில், நேற்று உரப்பை ஒன்றை நாய் கடித்து குதறிக்கொண்டிருந்ததை அவதானித்த பாதசாரிகள், உடனடியாக நெல்லியடி பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த நெல்லியடி பொலிஸார், குறித்த உரப்பையினை சோதனையிட்டபோது, அதனுள் சிசு ஒன்று உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளது. அத்தோடு சிசுவின் கை காயங்களுக்கு உள்ளாகியிருந்துள்ளது. […]
யாழில் வைத்தியசாலையில் பொலிஸார் அட்டகாசம்!!
மதுபோதையில் உந்துருளியைச் செலுத்திய பலாலிப் பொலிஸார் வீதியில் வீழ்ந்து படுகாயமடைந்து தெல்லிப்பழை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர், மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களுடனும் பொலிஸார் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்று மருத்துவமனை வட்டாரத்தால் தெரிவிக்கப்பட்டது. சுன்னாகம் பகுதிநோக்கி உந்துருளியில் பயணித்த இரு பொலிசாரும் மதுபோதையில் உந்துருளியைச் செலுத்திச் சென்றதோடு வீதியால் பயணித்த பெண் ஆசிரியர் ஒருவரையும் மோதித்தள்ளினர். இதன்போது வீழ்ந்த இரு பொலிசாரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சமயம் இருவரும் போதையின் […]
யாழில் பொலிஸ் மீது தாக்குதல்
அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் குடும்ப தகராறை விசாரிக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கணவன் மனைவிக்கு இடையில் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு குறித்து, மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸ் உத்தியோகத்தர் முறைப்பாட்டாளரான பெண்ணின் வீட்டுக்குச் […]
யாழில் வெங்காய விலைகளில் பெரும் வீழ்ச்சி
யாழ்ப்பாணத்தில் பெரும்போக வெங்காய அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இம்முறை யாழ். மாவட்டத்தில் பல பகுதிகளில் பரவலாக சின்ன வெங்காயச் செய்கையில் விவசாயிகள் ஈடுபட்டதால் தற்போது வெங்காய விலையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நீர்வேலி, கோப்பாய், சிறுப்பிட்டி, புத்தூர், இடைக்காடு, நவக்கிரி, உரும்பிராய், ஊரெழு, அச்சுவேலி, மற்றும் பத்தைமேனி போன்ற பிரதேசங்களில் ஆயிரத்து 500 வரையிலான ஹெக்ரேயர் நிலப்பரப்பில் சின்ன வெங்காயச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காலநிலைக்கு ஏற்றவாறு அதிக விளைச்சலை இம்முறை காலபோகத்தின்போது விவசாயிகள் […]
யாழில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்
யாழ்.கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற பெற்றோல் குண்டு தாக்குதல் தொடர்பாக செய்திகளை சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் செய்தி சேகரிப்பதற்காக தான் சென்றிருந்தபோது, தனக்கு அருகில் வந்த கோப்பாய் பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரி, தன்னை அங்கிருந்து செல்லுமாறு கூறியதாகவும் அங்கிருந்து செல்ல தான் மறுப்பு தெரிவித்தமையால் தன்னை தாக்கியதாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். மேலும் குறித்த சம்பவத்தை காணொளியாக பதிவு செய்ய […]
யாழில் தொடரும் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம்
யாழ்ப்பாணம், மேற்கு உப்புமடம் சந்தியிலுள்ள வர்த்தக நிலையம் மற்றும் அங்கு தரித்துநின்ற முச்சக்கரவண்டி ஆகியவற்றின் மீது வாள்வெட்டு குழு தாக்குதல் நடத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த பகுதிக்கு இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஐந்து பேர் கொண்ட குழுவினர் இத்தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை […]





