கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி இந்த நல்லாட்சி அரசாங்கம் கொண்டிருந்த இலட்சியங்களில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விலகிவிட்டார் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இருப்பினும் தாம் இன்னும் அந்த இலட்சியங்களுடனேயே செயற்பட்டு வருவதாகவும் அரசியல் அமைப்புக்கு ஏற்ப தேர்தலை நடத்தினால் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கின்றோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் ஐக்கிய தேசியக்கட்சியினர் …
Read More »மிரட்டும் மைத்திரியால் பதறும் உறுப்பினர்கள்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான முறுகல் நிலை தீவிரம் அடைந்துள்ளது. இலங்கையின் சமகால பிரதமர் யார் என்பது தொடர்பான அதிகார போட்டியால் கொழும்பு அரசியல் பெரும் பதற்ற நிலையை அடைத்துள்ளது. ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்திற்கு அமைய எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவுகளும் பலரை பீதியில் ஆழ்த்தியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்பிற்கு பிரதமர் பதவி கிடைக்கும் என்பது பலரின் …
Read More »தாம் அதிகாரத்தில் இருக்கும் வரை சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை
தாம் அதிகாரத்தில் இருக்கும் வரை சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நண்பகல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். மேலும் இதுகுறித்த சந்திப்பின் போதே அவர் சமஷ்டி என்ற பேச்சுக்கு இடமில்லை என தெரிவித்துள்ளதாகவும், தான் இருக்கும் வரை அந்த கனவு நிறைவேறாது என்றும் கூறியதாக அதில் …
Read More »ரணிலுக்கு ஆதரவாகக் களமிறங்கினார் சந்திரிகா!!
கொழும்பு அரசியல் நாளுக்கு நாள் பரபரப்படைந்துவரும் நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரும் களமிறங்கியுள்ளார். மைத்திரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராகக் களமிறக்கி ஜனாதிபதியாக்கிய சமரில் முக்கிய வகிபாகத்தை வகித்த சந்திரிகா, தற்போது மீண்டும் களமிறங்கியிருப்பது முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகின்றது. நாடாளுமன்றத்தில் 113 எம்.பிக்களின் ஆதரவைப் பெறுவோர் பிரதமர் என்ற நிலை இருக்கும்போது, மைத்திரி பக்கமுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடன் சந்திரிகா இரகசியப் …
Read More »ரணிலை அவசரமாக சந்தித்தார் சிறிசேன!
இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது தனது இந்திய விஜயம் குறித்து பிரதமர் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தியுள்ளார். இந்தியாவின் நிதியுதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்தே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் முன்னெடுக்கப்படும் இந்தியாவின் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து இந்திய பிரதமர் வெளியிட்டுள்ள …
Read More »ஜப்பானிய பேரரசரை சந்தித்தார் மைத்திரி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஜப்பானிய பேரரசர் அக்கிஹிட்டோ ஆகியோர் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. ஜனாதிபதிக்கு ஐந்து நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாபிதி இன்று காலை ஜப்பானிய பேரரசரை சந்தித்தார். இதன்போது ஜப்பானிய பேரரசர் ஜனாதிபதிக்கு சிறப்பு வரவேற்பளித்தார். நாளை ஜப்பானிய பிரதமரை ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்.
Read More »இன்று மாலை ஜனாதிபதியுடன் பலதரப்பு பேச்சு
ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் விசேட சந்திப்பொன்றை நடத்தவுள்ளனர். இதன் பிரகாரம் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மனோகணேசன் உட்பட பலர் இன்று மாலை 6 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து தனி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று …
Read More »ஐ.நா. உரை குறித்து அமைச்சரவையில் மைத்திரி விளக்கம்!
அமைச்சரவையின் அடுத்த கூட்டத்தை எதிர்வரும் 26ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 17ஆம் திகதி அமெரிக்கா செல்லவிருப்பதால் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தாமல் ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் மேற்படிக் கூட்டத்தை நடத்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்துக்குச் செல்வது மற்றும் அந்த விஜயம் குறித்து ஜனாதிபதி நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின்போது சிறிய விளக்கமொன்றை அமைச்சர்களுக்கு வழங்கியுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
Read More »எந்த இராணுவத் தளபதியின் மீதும் கைவைக்க இடமளியேன்! – சு.க.மாநாட்டில் மைத்திரி சூளுரை
போர்க்குற்றச்சாட்டு என்ற போர்வையில் ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் மீதோ அல்லது எந்தவொரு இராணுவத் தளபதியின் மீதோ அல்லது நாட்டின் எந்தவொரு இராணுவச் சிப்பாய் மீதோ கைவைக்க எவருக்கும் இடமளிக்கப்போவதில்லை என்று சூளுரைத்திருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. அத்துடன், புலிச்சார்பு அமைப்புகளிடம் பணம் வாங்கிக்கொண்டு அதன் நிழலாகச் செயற்படும் அரசசார்பற்ற அமைப்புகளின் தாளத்திற்கேற்ப தான் ஆடமாட்டார் எனவும் அவர் இடித்துரைத்தார். கொழும்பு கெம்பல் மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் …
Read More »மைத்திரியின் சகோதரர் படுகொலை வழக்கு விசாரணை ஜூரிகள் சபை முன்னிலையில்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான பிரியந்த சிறிசேன கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணை ஜூரிமார் சபையின் முன்னிலையில் நவம்பர் 20 தொடக்கம் 30 வரை நடைபெறுமென பொலநறுவை மேல்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இவ்வழக்கின் சந்தேகநபரான டொன் இஷார லக்மால் சப்பு தந்திரி (வயது – 34) பொலநறுவை மேல்நீதிமன்ற நீதியரசர் நிமால் ரணவீரவின் முன்னிலையில் தான் நிரபராதி எனத் தெரிவித்ததையடுத்து வழக்கு மேற்குறிப்பிட்ட கால எல்லையில் ஜூரிகள் சபை முன்னால் தொடர்ந்து …
Read More »