தேவிபுரத்தில் 11 வயதுடைய சிறுவன் கிணற்றில் விழுந்து பலி முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவு, தேவிபுரம் பகுதியில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் இன்று (11) மாலை இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் வள்ளிபுனம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் தேவிபுரம் (அ) பகுதியை சேந்த 11 வயதுடைய வடிவேல் வினுஜன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான். இன்று வீட்டில் உணவை அருந்திவிட்டு விளையாடிக்கொண்ட சிறுவனை …
Read More »புலுதிப்புயலுக்குள் சிக்கியது முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்ட செயலகம் மற்றும் நகர்பகுதி இன்று புலுதிப்புயலுக்குள் சிக்கியுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பான மீளாய்வு கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க வருகை தந்த உலங்குவாணூர்தி ஒன்று தரை இறக்கம் செய்யப்படும் போதே இவ்வாறு புலுதிப்புயல் ஏற்பட்டுள்ளது. முல்லைத்தீவு பிரதேச சபை மைதானத்தில் இன்று காலை 10.30 மணியளவில் குறித்த உலங்குவாணூர்தி தரை இறக்கம் செய்யப்பட்டது. இதன்போது குறித்த மைதானத்தில் காணப்பட்ட கிரவல் தூசிகள் உள்ளிட்டவை புயல்போல் …
Read More »நீரில் மூழ்கிய முல்லைத்தீவு மாங்குளம் பகுதி!
முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் மழை வெள்ள அனர்த்தம் மாங்குளம் நகர் துணுக்காய் வீதி, கல்குவாரி , நீதிபுரம் போன்ற இடங்கள் நீரில் மூழ்கின. ஆகையால் மக்கள் இதில் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர்.மேலும் கடைகள் வீடுகளுக்குள் நீர்த்தேக்கம் கால்நடைகளும் இறப்பு மக்கள் பெரும் பாதிப்பை அடையவைத்துள்ளது.
Read More »கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு பறந்து சென்ற கடிதம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உதவியுடன் ஆட்சிக்குழப்பநிலை முடிவுக்கு வந்துள்ள சூழ்நிலையில் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அரசுக்கு காத்திரமான அழுத்தத்தினைக் கொடுப்பதுடனூடாக திட்டமிடப்பட்ட பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளை தடுத்து நிறுத்த முன்வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழர் மரபுரிமை பேரவையினர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். இக் கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ஆட்சிக் குழப்ப நிலையில் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் அவசரமாக நிர்மாணிக்கப்படும் புத்தர் சிலை தொடர்பில் பொது மக்கள் கவலையும் அதிருப்தியும் …
Read More »வற்றாப்பளை கண்ணகி அம்மனின் மற்றுமொரு அற்புதம்: படையெடுக்கும் பக்தர்கள்
முல்லைத்தீவு மாவட்டம் வற்றாப்பளைக் கிராமத்தில் எழுந்தருளி அருட்கடாட்சம் வழங்கிக் கொண்டிருக்கின்ற கண்ணகி அம்மன் பல அற்புதங்களையும், வியப்புக்கள் பலவற்றையும் தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். எண்ணற்ற அதிசயங்களை நிகழ்த்தியுள்ள கண்ணகை அம்மன் தற்போதும் கூட ஒரு அற்புதத்தை நிகழ்த்தியுள்ளார். வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு சொந்தமான மிகவும் பெறுமதி வாய்ந்த அம்மனுடைய வரலாற்றைக் கூறுகின்ற மிகவும் பெறுமதி வாய்ந்த இரண்டு புத்தகங்களை ஒரு திருடன் களவாடி தப்பிச் சென்றுள்ளான். அந்தவேளையில் …
Read More »நாளை மற்றும் நாளை மறுநாள் வடமாகாணம் முழுவதும் மின் வெட்டு
அனுராதபுரம், வவுனியா ஊடான பிரதான மின் விநியோக மார்க்கங்களில் அவசர திருத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் வடமாகாணம் முழுவதிலும் எதிர்வரும் (14.07.2018, 15.07.2018 சனி, ஞாயிறு) ஆகிய இரு தினங்களிலும் காலை 8 மணி தொடக்கம் மாலை 05 மணி வரை மின் விநியோகம் முற்றாக துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. வட மாகாணத்திலுள்ள முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி, மற்றும் யாழ்ப்பாணம், ஆகிய மாவட்டங்களிலேயே மின் …
Read More »சிங்களமயமாகும் கிளிநொச்சி வைத்தியசாலை : தமிழர்கள் அதிர்ச்சி
கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் உயிர்காக்கும் மருத்துவ சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் தமிழ் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கிவருவதாக மக்கள் தமது ஆதங்கத்தை தெரிவித்தனர். கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு நாளாந்தம் ஆயிரக்கணக்கான பொது மக்கள் மருத்துவச் சேவையை நாடிவருகின்றனர். ஆனால், இந்த வைத்தியசாலையின் அண்மைக்கால போக்குகள் மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முல்லைத்தீவுக்கு அடுத்தபடியாக கிளிநொச்சி மாவட்டமே காணப்படுகிறது. யுத்தம் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டு 9 ஆண்டுகள் கடந்துவிட்டன. …
Read More »மணல் கடத்தல்
போலியான அனுமதிப் பத்திரத்தைத் தயாரித்து டிப்பர் வாகத்தில் மணல் கடத்தினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்ட நபரை விளக்கமறிய லில் வைகுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்று உத்தரவிட் டது. முல்லைத்தீவு, புதுக் குடியிருப்புப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மணல் எற்றிச்சென்ற டிப்பர் வாகனங்கள் மறித்து சோதனையிடப் பட்டன. கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட் டங்களின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஸ் வெலிக்கன்ன வின் உடனடி முறிய டிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி …
Read More »கடலுக்குச் சென்ற மீனவர்கள் கரை திரும்பவில்லை!
முல்லைத்தீவு பெருங்கடலுக்கு நள்ளிரவில் தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் இதுவரையில் கரை திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
Read More »முல்லைத்தீவு கடற்கரை மயான அமைதியில்
முல்லைத்தீவு கடற்கரையில் இருந்து மீனவர்கள் வெளியேறிப் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர். இலங்கையில் ஏற்படவுள்ள காலநிலை மாற்றம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையை அடுத்தே அவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர் என்று தெரியவருகின்றது. கடல்மட்டம் உயர்ந்துள்ளது என்றும், மீனவர்கள் அச்சத்தால் தமது மீன்பிடிப் படகுகளை கடற்கரையில் இருந்து சுமார் 100 மீற்றர்களுக்கு அப்பால் பாதுகாப்பாக கட்டி வைத்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. கடற்கரைப் பகுதிகள் ஆளரவமற்று அமைதியாகக் காட்சியளிக்கின்றது என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More »