முல்லைத்தீவில் நடந்த விபத்து- ஒருவர் உயிரிழப்பு சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகிய கூலர் வாகனம் தொலைத்தொடர்பு கம்பம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. அதின் வாகனத்தின் சாரதி உயிரிழந்துள்ளார். மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்து கொக்குளாய் முல்லைத்தீவு வீதியில் சிலாவத்தை பகுதியில் இன்று காலை நடந்துள்ளது. புத்தளம் அசோகபுரம் பகுதியைச் சேர்ந்த நபர் விபத்தில் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Tag: முல்லைத்தீவில்
முல்லைத்தீவில் ஊடகவியலாளர் கைது
முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோத்தபாய கடற்படை முகாம் கடற்படை அதிகாரி ஒருவர் திட்டமிட்டு செய்த முறைப்பாட்டின் அடிப்படியில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட ஊடகவியலாளர் சற்றுமுன்னர் முல்லைத்தீவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார் . முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் பிரச்சனையினை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்களை திட்டமிட்டு அச்சுறுத்தும் நடவடிக்கையில் பொலீசார் மற்றும் படையினர்,படைபுலனாய்வாளர்கள் ஈடுபட்டுவருகின்றார்கள். இது தொடர்பில் ஊடக அமைப்புக்கள் பல தெரியப்படுத்தியும் எதுவித முன்னேற்றமான நடவடிக்கையும் இல்லாத நிலை […]
முல்லைத்தீவில் பெரும் சோகம்
முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் அதிக வெப்பமான வானிலை காரணமாக உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் 51 வயதானவர் என்று காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆடுகளை மேய்க்கும் அவர், ஓய்வுக்காக கூடாரம் ஒன்றில் உறங்கிய வேளையில் அவர் மரணித்திருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முல்லைத்தீவில் மூன்று பிள்ளைகளின் தாய் வெட்டிக்கொலை!!
பெண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவருடைய கவனைத் தேடிப் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். உடையார்கட்டு மூங்கிலாறு வடக்கு பகுதியில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு பெண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தார். சம்பவத்தில் வெட்டிக் கொல்லப்பட்டவர் மூன்று பிள்ளைகளின் தாய் எனத் தெரிவிக்கப்படுகிறது. கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் கணவன் மனைவியை கத்தியால் கழுத்தில் வெட்டிக்கொன்றார் என்று விசாரணைனளில் தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
முல்லைத்தீவில் பிறந்திருந்தால் தமிழ் புலியாம் ஞானசார தேரர்
நான் சிங்கள பெளத்தனாக பிறந்திட்டதால், எனது இனத்திற்காக போராடி இப்போது சிறையில் இருக்கிறேன். நான் முல்லைத்தீவில் பிறந்திருந்தால் ஒரு தமிழனாக போராடி ஒரு தமிழ் புலியாக இதே சிறையில் இருந்திருப்பேன் என ஞானசார தேரர் தெரிவித்ததாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரரை அமைச்சர்களான மனோகணேசன், ரவி கருணாநாயக்க மற்றும் மேல்மாகாண ஆளுநர் அஸாத் சாலி ஆகியோர் நேற்று வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் […]
முல்லைத்தீவில் பொலிஸாரிற்கு எதிராக மக்கள் போராட்டம்
விபத்தை ஏற்படுத்தியவர்களுக்கு பக்கச்சார்பாகப் பொலிஸார் நடந்து கொண்டனர் எனக் குற்றஞ்சாட்டி ஒட்டுசுட்டான் மக்கள் இன்று வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முல்லைத்தீவு முத்துஜயன் கட்டுப்பகுதியில் வலதுகரை பிராதன வீதியில் 18.02.19 அன்று மதுபோதையில் உந்துருளியில் பயணித்த மூவர், மிதிவண்டியில் வீதியில் செல்லமுற்பட்ட தாயார் ஒருவரை மோதித் தள்ளினர். படுகாயமடைந்த பெண் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்கா வவுனியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். […]
முல்லைத்தீவில் அதிகாலை முதல் பலத்த மழை
முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று அதிகாலை தொடக்கம் மழை பெய்து வருகின்றது. இதனால், பல பகுதிகளிலும் வான்பரப்பை மழைமேகம் சூழ்ந்துள்ளதுடன், கரையோரங்களில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதாக தெரியவருகின்றது. இதனால் கரையோரப்பகுதி மீனவர்களின் பல வாடிகள் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், மீனவர்களின் மீன்பிடித் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவில் வெளிச்ச வீடு அமைக்க பிரேரணை நிறைவேற்றம்
மாவட்ட மீனவர்களுக்கான வெளிச்ச வீட்டை உடன் அமைக்குமாறு கோரும் பிரேரணை, வடக்கு மாகாண சபையில் இன்று (வியாழக்கிழமை) நிறைவேற்றப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 100ஆவது அமர்வு இன்று (வியாழக்கிழமை) நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், மேற்படி வெளிச்ச வீட்டை அமைக்குமாறு கோரி கடந்த 8 வருடங்களாக கோரிக்கை விடுக்கப்பட்டபோதும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எவையும் எடுக்கப்படாத நிலையில் இன்றைய தினம் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனால் முன்வைக்கப்பட்ட குறித்த […]
முல்லைத்தீவில் அழிவடையும் நிலையில் நெற்செய்கை
முல்லைத்தீவில் அழிவடையும் நிலையில் நெற்செய்கை முல்லைத்தீவு மாவட்டத்தில் வரட்சி காரணமாக பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற் செய்கை அழிவடையும் இறுதி நிலையை எட்டியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளர் செ, புனிதகுமார் தெரிவித்துள்ளார்.





