முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே எதிர்க்கட்சி தலைவராக செயற்படுவார் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். சபாநாயகரின் இத்தீர்மானத்தை பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி அறிவித்துள்ளார். புத்தாண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு பிரதி சபாநாயகர் தலைமையில் இன்று கூடியது. இதன்போதே இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். எதிர்க்கட்சி தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சபாநாயகர் நியமித்திருந்தார். இந்நியமனம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் தோற்றம் பெற்றதையடுத்து இது குறித்து தெரிவுக்குழு அமைத்து […]
Tag: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்க கூடாது!
கிழக்கில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் பல்லின சமூகத்துக்குரிய தலைமைத்துவம் இல்லாமல், ஓரின சமூகத்துக்குரியவராக செயற்படும் பட்சத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மௌனம் காக்காது என அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கிரான் பிள்ளையார் ஆலய முன்றில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “ஜனாதிபதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அளுநர்களை நியமித்துள்ளார். […]
ஒன்றிணைத்த நாட்டை பிரித்து வேட்டையாட பலரும் முயற்சி
பல இன்னல்களுக்கு மத்தியில் ஒன்றிணைத்த நாட்டை பிரித்து வேட்டையாட பலரும் முயற்சிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். எதிரணி தலைவர்கள் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் அரசாங்கத்தில் இணைகின்றனர். எதிர்பார்ப்புகள் நிறைவேறா விட்டால் எங்கு செல்வார்கள். அவ்வாறு செல்பவர்களும் அரசாங்கத்திற்கு எதிராண நிலைப்பாட்டிலேயே உள்ளனர். ஆனால் அவ்வாறான ஒரு குறுகிய நோக்கம் மக்களிடம் இல்லை. எனவே அரசாங்கத்திற்கு எதிரானதும் ஆதராவனதுமான தெளிவான ஒரு பிளவு தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ளது. இந்த பிளவு […]
ராஜபக்ஷர்களுக்கு எதிரான விசாரணைகள் துரிதகதியில்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அவர் உட்பட அவரின் குடும்பம் மற்றும் ஆட்சியின் பங்குதாரர்களால் மேற்கொள்ளப்பட்ட ஊழல்மோசடிகளை அரசு துரித கதியில் முன்னெடுக்க சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அரசின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது. நல்லாட்சி அரசு அமைய பெற்று இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதிலும் இதுவரை முன்னாள் அரசின் காலத்தில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் குறித்த விசாரணைகளில் ஒன்ரேனும் முற்றுப்பறவில்லை. ஐ.தே.கவின் உறுப்பினர்கள் […]
அரசின் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை தகர்த்தெறிய மஹிந்த இராஜதந்திர வியூகம்!
புதிய அரசமைப்பை தேசிய அரசு கொண்டுவருவதைத் தடுக்கும்வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணியினர் இராஜதந்திர வியூகங்களை வகுத்து நாட்டில் ஸ்திரமற்ற நிலையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்றில் தேசிய அரசின் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை உடைத்தெறிவதே இவர்களின் தற்போதைய பிரதான இலக்காகவுள்ளது எனவும் அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. 2015ஆம் ஆண்டு பொது வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிட்டபோது புதிய அரசமைப்பொன்றைக் கொண்டுவருவதும், தேர்தல் முறைமையை மறுசீரமைப்பதுமே […]
குறைக்கப்பட்ட மஹிந்தவின் பாதுகாப்பு மீண்டும் அதிகரிப்பு!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு பிரிவிலிருந்து 50 பேர் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த தீர்மானம் இரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த வாரம் 42 பாதுகாப்பு அதிகாரிகளை மீளப் பெற்றுக்கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 பேரை குறைக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த 50 பேரை மஹிந்தவின் பாதுகாப்பு பிரிவிலிருந்து நீக்கும் நடவடிக்கை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதோடு, அதற்கான […]
மஹிந்த ஆட்சியாளர்கள் போன்று சர்வதேசத்திடம் மண்டியிடும் கொள்கை நல்லாட்சியில் இல்லை: முஜிபுர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இருந்த ஆட்சியாளர்களை போன்று, சர்வதேசத்திடம் மண்டியிடும் கொள்கை நல்லாட்சியிடம் இல்லை என கொழும்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற தூதரகங்களுக்கான சிறப்புரிமை குறித்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று வடக்கு- தெற்கு […]
‘வடக்கு மக்களுக்கு என்னிடமே விமோசனம் உண்டு’ – மஹிந்த ராஜபக்ஷ
வடக்கு – கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கான விமோசனம் தன்னிடமே உள்ளதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு காலி முகத்திடலில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஒன்றிணைந்த எதிரணியின் மே தினக் கூட்டத்தில் தமிழில் உரையாற்றிய மஹிந்த இவ்வாறு கூறியுள்ளார். இந்நிலையில், வடக்கு – கிழக்கு மக்கள் விமோசனம் பெற தன்னை நோக்கி வரவேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து உரையாற்றிய அவர், இந்த நாட்டில் அமைதியை ஏற்படுத்திய […]
விமலின் பிணை மனு நிராகரிப்பு
விமலின் பிணை மனு நிராகரிப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ஸவின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த மனு இன்றைய தினம் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி விகும் கலு ஆராச்சியினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சியின் போது, அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக சென்ற போது, நிதிக் […]
மஹிந்த நாளை ஊழல், மோசடி ஆணைக்குழுவுக்கு அழைப்பு!
மஹிந்த நாளை ஊழல், மோசடி ஆணைக்குழுவுக்கு அழைப்பு! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நாளை வியாழக்கிழமை ஊழல், மோசடி விசாரணை ஆணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருக்கின்றது என ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது தனது பிரசார வேலைகளுக்காக தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தைப் பயன்படுத்திய வகையில் அந்நிறுவனத்துக்குச் செலுத்தவேண்டிய 16 கோடி ரூபாவைச் செலுத்தத் தவறியுள்ளார் என்ற குற்றச்சாட்டின்கீழ் மஹிந்தவுக்கு எதிராக ஆணைக்குழுவில் செய்யப்பட்ட முறைப்பாடு […]





