Tag: மீனவர்கள்

ஆறு இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட ஆறு இந்திய மீனவர்களை கடற்படையினர் நேற்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர். தமிழகம் நாகை மாவட்டத்தை சேர்ந்த ஆறு மீனவர்கள் இழுவை மடி படகில் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டு இருந்த வேளை கடற்படையினர் அவர்களை கைது செய்ததுடன் , அவர்கள் பயணித்த படகையும் கைபற்றினார்கள். குறித்த மீனவர்களை இன்றைய தினம் காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு கொண்டு […]

ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேர் இலங்கை கடற்படையால் கைது

ராமேஸ்வரத்தினை சேர்ந்த மீனவர்கள் தங்களது படகுகளில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டு இருந்துள்ளனர். இந்த நிலையில் ரோந்து சுற்றி வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 100க்கும் மேற்பட்டோர் மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தினால் மீனவர்களின் மீன்பிடி சாதனங்கள் சேதமடைந்துள்ளன. இதனை தொடர்ந்து ராமேஸ்வர மீனவர்கள் 13 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தமிழக மீனவர்கள் நாடு திரும்புகின்றனர்

ஊர்காவல்துறை, பருத்தித்துறை மற்றும் தலைமன்னார் நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்ட அறுபத்தொன்பது மீனவர்கள் இன்று (31) நாடு திரும்புகின்றனர். விடுதலை செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அதன்பின், காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து கடற்படையின் கண்காணிப்புக் கப்பலில் இலங்கையை விட்டுப் புறப்பட்டனர். இவர்கள் அனைவரும் காலை 11.30 மணியளவில் சர்வதேச கடல் எல்லையில் வைத்து இந்திய கடலோர காவல் படையிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். அங்கிருந்து அவர்கள் இந்திய கடற்படைக்குச் சொந்தமான ‘அமாயா’ […]

கச்சத்தீவை - சுப்பிரமணியன் சுவாமி

கச்சத்தீவை தாரை வார்க்க இந்திரா காந்தியிடம் பணம் பெற்றவர் கருணாநிதி சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டு

கச்சத்தீவை தாரை வார்க்க இந்திரா காந்தியிடம் பணம் பெற்றவர் கருணாநிதி சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தன்னுடைய டுவிட்டர் பக்கத்திலும், செய்தியாளர் சந்திப்பிலும் கூறி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அண்மையில் ஜல்லிக்கட்டு போரட்டத்தில் ஈடுபட்டவர்களை பொறுக்கிகள் என சுப்பிரமணியன் சுவாமி கூறியது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கச்சத்தீவை […]

தங்கச்சிமடத்தில் மீனவர்கள் போராட்டம்

தங்கச்சிமடத்தில் 4-வது நாளாக தொடரும் மீனவர்கள் போராட்டம்

தங்கச்சிமடத்தில் 4-வது நாளாக தொடரும் மீனவர்கள் போராட்டம் இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி சூட்டில் பலியான தங்கச்சி மடம் மீனவர் பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுத்து தங்கச்சிமடத்தில் உள்ள தேவாலயத்தில் மீனவர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் 4-வது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக்காரர்களிடம் மாவட்ட கலெக்டர் நடராஜ், போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் மற்றும் அதிகாரிகள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பயனும் ஏற்படவில்லை. மீனவரை சுட்டுக்கொன்ற […]

தமிழக மீனவர்களை - டிடிவி தினகரன்

தமிழக மீனவர்களை காக்க தொடர்ந்து அ.தி.மு.க போராடும்- டிடிவி தினகரன்

தமிழக மீனவர்களை காக்க தொடர்ந்து அ.தி.மு.க போராடும்- டிடிவி தினகரன் இந்திய கடல் எல்லையில் ஆதம்பாலம் பகுதியில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பிரிட்ஜோ என்ற மீனவர் கழுத்தி குண்டு பாந்து சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். மேலும் சரோன் என்ற மீனவர் படுகாயமடைந்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் […]