Tag: மஹிந்த ராஜபக்ஷ

நேரத்தை அதிகரிக்க கோரும் மஹிந்த

எதிர்வரும் 07ம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வு நேரத்தை அதிகரிக்கும்படி, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அன்றைய தினம் மாலை 05.30 மணி முதல் இரவு 07.30 மணி வரை இடம்பெறுவுள்ள சபை ஒத்திவைப்பு பிரேரணை தொடர்பான விவாதத்தை 01.00 மணி முதல் 07.30 மணி வரை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற் கொண்டு இந்நடவடிக்கையை […]

மஹிந்தஷவின் தலையீடு தொடர்பில் சம்பந்தனே கூறியது

மஹிந்த ராஜபக்ஷவின் தலையீடு இன்றி இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது – சம்பந்தனே கூறியிருப்பதாக கூறுகிறார் பேராசிரியர் திஸ்ஸ விதாரண நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு பொது தேர்தலை நடத்துவதே சிறந்த தீர்வாகும். தேசிய அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வெளியேறியதையடுத்து ஐக்கிய தேசிய கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது. இதன் நிமித்தமாகவே கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி பிரதமராக நியமித்தார். எனவே பாராளுமன்றில் பெரும்பான்மை பலம் ஐக்கிய […]

பறிபோனது மஹிந்தவின் பிரதமர் பதவி

மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமராக பதவியினைத் தொடர்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. அத்துடன் அவர் தலைமையிலான அமைச்சரவை இயங்கமுடியாதெனவும் நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பளித்துள்ளது. ஐக்கிய தேசிய முன்னணி உள்ளடங்கலாக 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்த ரிட் மனுவை இன்றைய தினம் ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சரவை இயங்க இடைக்கால தடை விதித்தது. சம்மந்தப்பட்ட மனுவின் பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும் முடிவு […]

மகிந்தவிற்கு

மஹிந்த – ரணில் இன்று திடீர் சந்திப்பு?

மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இருவருக்குதிடையிலான சந்திப்பானது பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலை இலக்கு வைக்கிறார் மஹிந்த

2020ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு போட்டியிட முடியாததால், நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்தே அவ்வணியினர் காய்நகர்த்தி வருகின்றனரென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், ”இந்த நாட்டில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் மக்களிடம் நம்பிக்கையற்று போனவர்களே இன்று பிரதமருக்கு எதிராக […]

அமெரிக்கா செல்ல முற்பட்ட நாமலுக்கு நேர்ந்த கதி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவின் அமெரிக்க விஜயத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மொஸ்கோவிலிருந்து அமெரிக்காவிற்கு பயணிக்க முற்பட்ட நாமல் ராஜபக்ஷவை, எமிரேட்ஸ் எயர்லைன் விமான சேவை நிறுவன அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் நாமல் தற்போது நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமைய செல்லுபடியாகும் அமெரிக்க விசாவை கொண்டிருந்த போதிலும், நாமலின் விஜயம் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உறவினர் ஒருவரது இறுதி […]

புட்டினுக்கு மைத்திரியும் மஹிந்தவும் வாழ்த்து

ரஷ்யாவின் ஜனாதிபதியாக நான்காவது முறையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விளாடிமிர் புட்டினுக்கு, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். புட்டினின் தலைமைத்துவத்தின் கீழ் நாட்டின் வளர்ச்சிப் பாதையில் பாரிய முன்னேற்றம் ஏற்படும. அதன்மூலம் ரஷ்ய மக்கள் தமது இலக்கை அடைந்துகொள்வார்கள் என்றும் ஜனாதிபதி மைத்திரி குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்தும் வலுப்பெறுமென எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, […]

தேர்தலில் வரலாறு காணாத வெற்றி ; இரு பிரதான தலைவர்களும் படுதோல்வி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆறாயிரத்திற்கும் அதிகமான ஆசனங்களைப் பெற்றுள்ளது. இவ்வெற்றியானது வரலாறு காணாத வெற்றியாகும். இதன் மூலம் அரசாங்கத்திற்கான மக்கள் ஆதரவு இல்லாது போயுள்ளது. ஆகவே அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நாட்டு மக்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடனும் தாமரை மொட்டு சின்னத்துடனும் இணைந்திருக்கின்றனர். ஆகவே அரசாங்கத்தின் பிரதான தலைவர்கள் இருவரும் […]

மக்கள் மனங்களை வென்றவர் என்றும் மறையப்போவது கிடையாது

மக்களின் மனங்களை வென்றவர்கள் என்றும் மறையப்போவது கிடையாது. நல்லாட்சி அரசாங்கம் எம்மை பழிவாங்கினாலும். நாட்டு மக்கள் கைவிடவில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார் . நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள பற்று தற்போது வெளிப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்ற தேர்தலின் பெறுபேறுகள் தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த காலங்களில் நாட்டு மக்கள் பல்வேறு […]

ஜனவரியில் சர்வஜன வாக்கெடுப்பு: முறியடிக்க பொது எதிரணி வியூகம்! – தேசிய கூட்டணி அமைக்க மஹிந்த ஒப்புதல்

புதிய அரசமைப்பு தொடர்பில் அடுத்த ஆண்டு ஜனவரியில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதே அரசின் திட்டமாக இருப்பதால் அந்த முயற்சியை தோற்கடிப்பதற்காக தேசிய கூட்டணியொன்றை அமைக்கவேண்டும் என்ற தீர்மானம் கூட்டு எதிரணியின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பொது எதிரணி உறுப்பினர்கள் நேற்று முன்தினம் இரவு கொழும்பில் விசேட கூட்டமொன்றை ஏற்பாடுசெய்திருந்தனர். பங்காளிக்கட்சிகளின் தலைவர்களும் இதில் பங்கேற்றிருந்தனர். மாலை 5.30 மணிமுதல் இரவு 7.30 மணிவரை நடைபெற்ற […]