பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் தொடர்பாக மூண்டிருக்கும் தகராறைத் தீர்த்துவைப்பதற்கு நீதித்துறை தலையிடவேண்டியது அவசியமாகும் என்று தேசிய சமாதானப் பேரவை வலியுறுத்திக் கேட்டிருக்கிறது. இது தொடர்பில் இலங்கையின் முன்னணி சிவில் சமூகத் தலைவர்களில் ஒருவரான கலாநிதி ஜெகான் பெரேராவை நிறைவேற்றுப் பணிப்பாளராகக்கொண்ட தேசிய சமாதானப் பேரவை அறிக்கையொன்றை விடுத்திருக்கிறது. அந்த அறிக்கையின் விபரம் வருமாறு ; ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி / ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி […]





