ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு வழங்கிய இணை அணுசரனையிலிருந்து விலகிக்கொள்வது குறித்து இலங்கை ஆராய்ந்துவருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை உறுதி செய்துள்ளார். நாங்கள் இதிலிருந்து விலகிக்கொள்ளலாம் என எதிர்பார்க்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெறுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள அமர்வுகளிற்கு நாங்கள் தயாராகிவருகின்றோம்,நாங்கள் சில முன்னேற்றங்களை காண்பித்துள்ளோம், என தெரிவித்துள்ள சிறிசேன எங்கள் படையினர் யுத்த குற்றங்களில் …
Read More »பழிவாங்கும் எண்ணத்துடன் மூண்டுள்ள பனிப்போர்
ஐக்கிய நாடுகள் அவையின் பொது செயலாளர் ஆன்றணியோ குட்டர்ஸ் பழிவாங்கும் எண்ணத்தோடு பனிப்போர் மனப்பான்மை திரும்பி வந்துள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். சிரியா தொடர்பாக பதற்றம் அதிகரிப்பது உலகம் முழுவதும் ராணுவ தளவாடங்களின் அதிகரிப்புக்கு இட்டுச்செல்லும் என்று குட்ரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிரியாவின் டூமா நகரில் நடைபெற்றதாக சந்தேகிக்கப்படும் ரசாயன தாக்குதலால் உருவாகியுள்ள மோசமான நிலைமையில் கூடிய ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை கூட்டத்தின் தொடக்கத்தில் குட்ரஸ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். …
Read More »போர் பதற்றத்தில் ரஷ்யா
சிரியாவில் கிளர்ச்சிப் படைகளுக்கும் அரசு தரப்பிற்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடைபெறுகிறது. இதில் மக்கள் பலர் கொல்லப்பட்டு வருகினறனர். சமீபத்தில் நடந்த ரசாயன தாக்குதலில் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகின. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்யா மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு ஆலோசனை நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதற்கு ஒரு முடிவு எடுக்கபடும் என்று ஆவேசமாக கூறியிருந்தார். ஆனால், ரசாயன் தாக்குதலை …
Read More »உதவி பொருட்களுக்கு பதில் உடலுறவு
சிரியாவில் அரசுக்கு எதிராக போராடும் போராட்டக்காரர்களை சிரியா அரசும், ரஷ்ய படையும் கடுமையான தாக்கி வரும் நிலையில் கடந்த ஒரு வாரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாகவும், இதில் பெண்களும் குழந்தைகளும் அதிகளவில் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் சிரியாவில் பாதிக்கபட்டவர்களுக்காக ஐநா உதவிக்குழு ஏராளமான நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. ஆனால் அந்த உதவி பொருட்களை கொண்டு சென்ற குழுவினர் பாதிக்கப்பட்ட பெண்களிடம் உடலுறவு …
Read More »பதறவைக்கும் சிரியா சிறுமியின் கண்ணீர் வீடியோ
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக கடந்த 9 நாட்களில் மட்டும் இதுவரை 700 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். இந்நிலையில் இந்தியா முழுவதும் நடிகை ஸ்ரீதேவியின் மரணம்தான் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. …
Read More »சிரியா மக்களின் உயிர்களை காப்பாற்றுமா ஐநா சபை?
சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு போர் நிறுத்தம் தொடர்பாக ஐநா பாதுகாப்புக் கவுன்சில் விவாதித்துள்ளது. சிரியா அரசு, கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள கவுட்டா நகரை மீட்பதற்காக ரஷ்யா படைகளின் ஆதரவுடன் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் 400 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள். பலியானவர்களில் 95-க்கும் மேற்பட்டோர் சின்னஞ்சிறு குழந்தைகள் என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டாலும், பயங்கரவாதிகளிடம் இருந்து கவுட்டா நகரை …
Read More »கொரிய போருக்கு கட்டம் கட்டும் அமெரிக்கா
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையான எச்சரிக்கை விடுத்தும் ஏவுகணை சோதனை விஷயத்தில் வட கொரியா தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. இதனால், வட கொரியா மீது பல பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டது. இந்நிலையில், வடகொரியா அமெரிக்கா மீது பகிரங்க குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளது. வடகொரியா வெளியுறவு அமைச்சக அதிகாரி பேசியதை சீனாவின் ஜின்ஹுவா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு… வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்காவின் அணியில் இணைந்த 20 நாடுகளின் வெளியுறவு …
Read More »பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக ஆக்கவேண்டும்
பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் போர் தொடுத்து, அந்த நாட்டை நான்கு துண்டுகளாக ஆக்கவேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார். இந்திய கடற்படையின் முன்னாள் வீரர் குல்புஷன் ஜாதவை பாகிஸ்தான் அரசு உளவு வேலை பார்த்ததாக இஸ்லாமாபாத் சிறையில் அடைத்துள்ளது. அவரை அவரது தாயும், மனைவியும் கிறித்துமஸ் தினத்தன்று சிறையில் சென்று சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது அவர்களின் தாலி, வளையல்கள் மற்றும் பொட்டையும் சிறை …
Read More »