மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் காணி அபகரிப்புக்கு எதிராக கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்று(28.08.2019) மட்டக்களப்பில் நடைபெற்றது. மேற்படி போராட்டமானது, தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக நடைபெற்றது. இப்போராட்டத்தில் செங்கலடி-பதுளை வீதியில் உள்ள மக்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பினை வெளியிட்டனர். மேலும், தமது பாரம்பரிய காணிகளை அபகரிக்கும் முயற்சிகள் தொடர்ச்சியான முன்னெடுக்கப்பட்டுவருவதாக, போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் இதன்போது குற்றஞ்சாட்டினர். குறிப்பாக அபிவிருத்தி …
Read More »எப்போதும் மக்களே உயிர் இழக்கிறார்கள் – கமல்ஹாசன் வேதனை
தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10க்கும் மேற்பட்டோர் பலியானதற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை நோக்கி இன்று காலை பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் தடுக்க முயன்றனர். அப்போது, பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, பொதுமக்களை நோக்கி போலீசார் துப்பாக்கி …
Read More »தமிழர்களின் போராட்டம் எதிரொலி: நெடுவாசல் திட்டத்தை கைவிடுகிறதா ஜெம் நிறுவனம்?
தமிழகத்தில் உள்ள விவசாய பகுதிகளில் ஒன்றான நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு அந்த பகுதி மக்கள் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்தனர். திரையுலகினர், அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கொடுத்த தொடர்ச்சியான எதிர்ப்பு காரணமாக நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை ஜெம் நிறுவனம் கைவிட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது ஜெம் நிறுவனம் சமீபத்தில் மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை …
Read More »ஸ்டெர்லைட் எதிர்ப்பா? மோடி எதிர்ப்பா? வைகோவுக்கு தமிழிசை கேள்வி
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 25 ஆண்டுகளாக சட்ட போராட்டமும் சமூக போராட்டமும் செய்து வருபவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. தற்போது ஸ்டெர்லைட் விவகாரம் வீரியமாகி அனைத்து கட்சிகளும், தூத்துக்குடி பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக வைகோ தற்போது வாகன பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் வைகோவின் இந்த வாகன பிரச்சாரம் தடை செய்யப்பட வேண்டும் என்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு பிரச்சாரம் என்ற பெயரில் …
Read More »சீமான் கைதா? சுற்றி வளைத்த அதிரடிப்படை
நேற்று முன் தினம் நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தின் இடையே திடீரென போலீசார் தடியடி நடத்தியதும், சீருடை அணிந்த போலீசார்களை நாம் தமிழர் கட்சியினர்கள் தாக்கிய சம்பவங்களும் நடைபெற்றது. இதனையடுத்து சீமான் மீது கொலை முயற்சி உள்பட 10 பிரிவுகளின்கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதனால் எந்த நேரமும் …
Read More »காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறித்தி திரைத்துறையினர் அறவழிப் போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், நடிகர் சங்கம் சார்பில் அறவழிப் போராட்டம் நடைபெற்று வருகிறது. உச்ச நீதிமன்றம், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என அறிவுறித்தியிருந்ததை, மத்திய அரசு மதிக்காமல் தமிழக மக்களை ஏமாற்றியிருக்கிறது. மேலும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க 3 மாத காலக் கெடு வேண்டும் என கால அவகாசம் கேட்டிருக்கிறது மத்திய அரசு. அதேபோல் தூத்துக்குடியில் …
Read More »லண்டனில் காவிரிக்காக போராடும் தமிழர்கள்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து லண்டனில் வரும் 14-ம் தேதி போராட்டம் நடத்த போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாததோடு, காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதில் வேறு குழுவை அமைக்க மத்திய அரசு முடிவெடுத்தது. அதற்கும் 3 மாத கால அவகாசம் வேண்டும் எனக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் தமிழகம் முழுவதும் …
Read More »தனி ஆளாக பேருந்தை தடுக்கும் திமுக பெண் தொண்டர்
காவிரி மேலான்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக திமுக தீவிர போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. இன்று திமுக சார்பாக தமிழகமெங்கும் கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகமெங்கும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. சென்னை அண்ணாசாலையில் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் வி.சி.க, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளும் இணைந்தன. அதன்பின் மெரினாவில் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அதேபோல், அதிமுக தொழிற்சங்கத்தை தவிர …
Read More »போராட்டம் 100 சதவீதம் வெற்றி: ஸ்டாலின் பேட்டி
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் 100 சதவீதம் வெற்றி பெற்றதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காவிரி மேலான்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக திமுக தீவிர போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. இன்று திமுக சார்பாக தமிழகமெங்கும் கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும், சென்னையில் 5ம் நாளாக இன்று திமுக போராட்டத்தை கையில் எடுத்தது. சென்னை …
Read More »மத்திய அரசைக் கண்டித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்
மத்திய அரசு நிரந்தர தொழிலாளர்கள் சட்டத்தில் மேற்கொண்ட திருத்தத்தை கண்டித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு நிரந்தர தொழிலாளர்கள் சட்டத்தில் மேற்கொண்ட திருத்தத்தில், தனியார் துறைகளில் வேலைபுரியும் தொழிலாளர்களை எப்போது வேண்டுமானாலும் நிர்வாகம் பணிநீக்கம் செய்ய முடியும் என்றும் தொழிலாளர்கள் நிரந்தரமாக வேலை செய்யமுடியாது என்றும் சட்டதிருத்தம் கொண்டு வந்தது. நாடு முழுவதும் இதற்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு …
Read More »