துளசி மாலையும் வெற்றிலை சுருள் மாலையும் ஆஞ்சநேயருக்கு விஷேசமானவை. பூஜையை ஆரம்பிக்கும்போது ஸ்ரீ ராமஜெயம் அல்லது ஸ்ரீராம ஜெயராம ஜய ஜய ராம என்ற மந்திரத்தை 54 அல்லது 108 முறை தியானிக்க வேண்டும். அதன் பிறகு தமது பிரார்த்தனையைச் சொல்லி நாமாவளி மற்றும் மலர் வழிபாட்டின் அர்ச்சனை செய்ய வேண்டும். கவசம் மற்றும் ஸ்தோத்திரங்களைப் பாராயணம் வேண்டும். மார்கழி மாதத்தில் மூல நட்சத்திரத்தோடு கூடிய அமாவாசை (இதுதான் ஆஞ்சநேயர் […]
Tag: பூஜை
விநாயகரின் ஐந்து கரங்கள் உணர்த்தும் தத்துவம்!
விநாயகரின் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய பஞ்ச கிருத்தியங்களையும் அவர் தனது ஐந்து கரங்களால் இயற்றுகின்றார் எனப்படுகின்றது. ஐந்து கருமங்கட்கும் அவரே அதிபதி என்பதனால் அவருக்கு “ஐங்கரன்” என்ற நாமம் விளங்குகின்றது. அவரை “பஞ்சகிருத்திகள்” என்றும் கூறுவர். அவரது முற்றறிந்த ஞானத்தை முறம் (சுளகு) போன்று பரந்து விரிந்த இருசெவிகளும் விளக்குகின்றன. வலது பக்கமுள்ள ஒடிந்த கொம்பு “பாசஞானத்தையும்” இடது பக்கமுள்ள கொம்பு “பதிஞானத்தையும்” உணர்த்துவதாக உள்ளன. […]





