நாட்டில் எத்தகைய எதிர்ப்புக்கள் வந்தாலும் புதிய அரசமைப்பை உருவாக்கும் பணிகள் தொடரும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மன்னாரில் உலர் வலய நீர் வழங்கல் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “புதிய அரசமைப்புக் குறித்து யாருமே அச்சப்படத் தேவையில்லை. இதனை அமைப்பதற்கு மக்கள் அரசுக்கு ஆணை வழங்கியுள்ளதால் இந்த விடயத்தை அரசால் உதாசீனம் செய்ய முடியாது. புதிய அரசமைப்பில் பௌத்த […]
Tag: பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
பிரதமரின் தீர்மானங்களால் அதிர்ச்சியில் ஜனாதிபதி மைத்திரி
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எடுக்கும் தீர்மானங்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிருப்தியில் உள்ளதாக சமூக சேவைகள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். அண்மையில் நடத்தப்பட்ட அமைச்சரவை மாற்றத்தின்போது சில முக்கிய தீர்மானங்களை பிரதமரே எடுத்திருப்பதாகவும், அதனால் ஜனாதிபதி அதிருப்தியடைந்திருப்பார் என தாம் நினைப்பதாகவும் அவர் கூறினார். எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் […]
சீனாவின் முதலீடுகளை வரவேற்கிறார் சிறிலங்கா பிரதமர்
சிறிலங்காவில் பிரதான உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களில் சீனாவின் முதலீடுகளை வரவேற்பதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தெரிவித்துள்ளார். பீஜிங்கில் நேற்று சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்துப் பேச்சு நடத்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் என்று சீனாவின் அதிகாரபூர்வ செய்தி ஊடகமான சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது. அம்பாந்தோட்டை, கொழும்பு துறைமுகநகரத் திட்டங்களை வெற்றிகரமாக முன்நோக்கி நகர்த்துவதற்கு சீனாவுடன் இணைந்து பணியாற்ற சிறிலங்கா விரும்புகிறது என்றும் சிறிலங்கா பிரதமர் தெரிவித்துள்ளார். […]
அமைச்சரவைக் கூட்டங்களை நிறுத்தினார் சிறிலங்கா அதிபர் – அதிகார இழுபறியின் உச்சம்?
அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் வரையில் அமைச்சரவைக் கூட்டங்களை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிறுத்தி வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவை மாற்றம் தொடர்பாக அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளான ஐதேகவுக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் இழுபறி நிலவி வந்தது. எனினும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்குப் புறப்படுவதற்கு முன்னர் சிறிலங்கா அதிபருடன் நடத்திய பேச்சுக்களின் போது, பிரதமர் நாடு திரும்பியதும் அமைச்சரவை மாற்றத்தை மேற்கொள்வதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் […]
தேர்தல்களுக்குத் தயாராகுங்கள் – ஐதேகவினருக்கு ரணில் அழைப்பு
எதிர்காலத் தேர்தல்களுக்குத் தயாராகும்படி, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். சிறிகோத்தாவில் ஐதேகவின் செயற்குழுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், கூடுதல் பொறுப்புணர்வுடன் கூடிய கட்சியாக- இளைஞர்களின் பங்களிப்புடன் ஐதேகவை பரந்துபட்ட அளவில் நவீனமயப்படுத்த வேண்டும். அமைச்சர்கள் தமது தொகுதிகளில் அதிகளவு நேரத்தைச் செலவிட வேண்டும். மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து தொகுதிகளில் மேற்கொள்ளப்படக் கூடிய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து கலந்துரையாட வேண்டும். எந்த தேர்தலுக்கு […]
மூன்று நாள் பயணமாக வடக்குக்கு ரணில்! – 19ஆம் திகதி செல்கிறார்
வடக்கு மாகாணத்துக்கு மூன்று நாள் பயணமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 19ஆம் திகதி செல்லவுள்ளார். பல்வேறு சந்திப்புக்களையும், ஆராய்வுகளையும் மேற்கொள்ளும் நோக்குடனேயே அவரது இந்தப் பயணம் அமையவுள்ளது எனத் தெரியவருகின்றது. இந்த மாதம் 19 ஆம் திகதி மன்னார் மாவட்டத்துக்கு பிரதமர் செல்லவுள்ளார். அங்கு பல்வேறு தரப்புக்களையும் சந்தித்துக் கலந்துரையாடல் நடத்தவுள்ளார். 20 ஆம் மற்றும் 21 ஆம் திகதிகளில் யாழ்ப்பாண மாவட்டத்துக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செல்லவுள்ளார். […]
மீதொட்டமுல்ல அனர்த்தத்தின் எதிரொலி; நாடு திரும்புகிறார் ரணில்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது வெளிநாட்டுப் பயணத்தை சுருக்கிக்கொண்டு நாடு திரும்பத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜப்பான், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கான பயணத்தை ஆரம்பித்திருந்தார். ஜப்பானிய பயணத்தை முடித்துக் கொண்டு அவர் நேற்று வியட்நாமுக்கான பயணத்தை ஆரம்பித்தார். இந்த நிலையில் மீதொட்டமுல்லவில் குப்பை மேடு சரிந்த விபத்தில், 26 பேருக்கு மேல் உயிரிழந்த நிலையில், பிரதமர் தமது பயணத்தை சுருக்கிக்கொண்டு […]
ஜப்பானில் ஸ்ரீலங்கா பிரதமர் இன்று பேச்சுக்களை ஆரம்பிக்கிறார்
ஜப்பானுக்கு ஒரு வாரகால உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று அதிகாரபூர்வ பேச்சுக்களை ஆரம்பிக்கவுள்ளார். 2015 ஆம் ஆண்டு ஸ்ரீலங்காவின் பிரதமராகப் பதவியேற்ற பின்னர், ரணில் விக்கிரமசிங்க இரண்டாவது தடவையாக நேற்றைய தினம் ஜப்பான் விஜயம் மேற்கொண்டுள்ளார். நரிடா அனைத்துலக விமான நிலையத்தை சென்றடைந்த ஸ்ரீலங்கா பிரதமரை, ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயின் சிறப்பு ஆலோசகர் ஹிரோரோ இசுமி, ஸ்ரீலங்காவுக்கான ஜப்பானிய தூதுவர் கெனிச்சி சுகனுமா […]
எட்கா உடன்படிக்கை: இறுதி தீர்மானம் எடுக்க பிரதமர் இந்தியா பயணம்
இந்தியா – இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையில் இடம்பெறவுள்ள தொழில்நுட்ப ஒப்பந்தம் (எட்கா) தொடர்பில் இறுதித் தீர்மானங்களை முன்னெடுக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமரின் ஜப்பானுக்கான விஜயம் நிறைவடைந்த பின்னர் இந்தியா செல்லவுள்ளார். இவ்விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் பிரதமர் ரணில் சந்திக்கவுள்ளார். இதேவேளை, இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச வெசாக் தின நிகழ்வுகளில் இந்திய பிரதமர் மோடி கலந்துகொள்ளவுள்ளமைக்கு பிரதமர் இதன் பொது அழைப்பு […]
நாளை ஜப்பான் செல்கிறார் பிரதமர்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை தொடக்கம் ஏப்ரல் 16ஆம் திகதி வரை பிரதமர் ஜப்பானில் தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின்போது ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயைச் சந்தித்து பிரதமர் கலந்துரையாடவுள்ளதுடன், பல முக்கிய பேச்சுக்களிலும் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன், அமைச்சர்கள் கலாநிதி சரத் அமுனுகம, மலிக் சமரவிக்கிரம, நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் அஷு மாரசிங்க, மற்றும் அதிகாரிகளும் இந்தப் […]





