Sunday , May 19 2024
Home / Tag Archives: பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (page 4)

Tag Archives: பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

பிரதமர் எதிர்வரும் 10ம் திகதி யப்பான் விஜயம்

ஆணைக்குழு ரணில்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 10ம் திகதி யப்பானுக்கு விஜயம் செய்யவுள்ளார். அவரது பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்கவும் பிரதமருடன் இந்த விஜத்தில் பங்குகொள்ளவுள்ளார். 16ம்திகதி வரை யப்பானில் தங்கி இருக்கவுள்ள பிரதமர் இந்த விஜயத்தில் யப்பான் நாட்டு பிரதமர் சின்சோ அபே (Shinzo Abe) உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ளார். யப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதற்கு இந்த விஜயம் மேலும் உதவும் என்று யப்பான் அரசாங்கம் …

Read More »

அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த இறுதி உடன்பாடு செய்யப்படவில்லை

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துக்கும் சீன நிறுவனத்துக்கும் இடையில் இன்னமும் இறுதி உடன்பாடு ஏற்படவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறும் விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அம்பாந்தோட்டை துறைமுகத்தினால் அரசாங்கம் கடுமையான நிதி இழப்புகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்த இழப்புகள் ஈடு செய்யப்பட வேண்டும். சீன நிறுவனத்துடனான உடன்பாடு கையெழுத்திடப்படுவதற்கு முன்னர், இறுதி வரைவு …

Read More »

ஐ.தே.கவில் ரணிலுக்கு இணையாக சரத் பொன்சேகாவுக்கு முக்கியத்துவம்

கிரிபத்கொடவில் நேற்று நடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணியில் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இணையாக, அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. பேரணியைப் பார்வையிடும் மேடையில்,ஐதேகவின் ஏனைய தலைவர்களுடன், ரணில் விக்கிரமசிங்கவும், சரத் பொன்சேகாவும் அருகருகே அமர்ந்திருந்தனர். மேடையில் கட்டப்பட்டிருந்த பதாதையின் ஒரு பக்கத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் படமும், மற்றொரு பக்கத்தில் சரத் பொன்சேகாவின் படமும் பொறிக்கப்பட்டிருந்தது. அத்துடன், பேரணி நடத்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த …

Read More »

ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் உயர்மட்டக் குழு சிறிலங்கா வருகிறது

உலகின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான, ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் உயர்மட்டக் குழுவொன்று இந்த வாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் தெற்காசியப் பிரிவுக்கான உதவித் தலைவர் அன்ட்ரூ மக் டோவல் தலைமையிலான உயர்மட்டக் குழுவே கொழும்பு வரவுள்ளது. இந்தக் குழுவினர் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மூத்த அமைச்சர்கள், வர்த்தக பிரமுகர்கள், இராஜதந்திர சமூகத்தினர், உள்நாட்டு, வெளிநாட்டு நிதி அமைப்புகள் ஆகியவற்றைச் சந்தித்து, இப்போதைய செயற்பாடுகள் மற்றும் …

Read More »

உலகலாவிய கடல் பயங்கரவாதம் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல் : பிரதமர் தெரிவிப்பு

உலகலாவிய கடல் பயங்கரவாதம்

உலகலாவிய கடல் பயங்கரவாதம் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல் : பிரதமர் தெரிவிப்பு உலகலாவிய கடல் பயங்கரவாதம் பொருளாதார அனுகூலங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொள்கலன்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களில் பாதிக்கு மேற்பட்ட கடற்கலங்கள் இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணிக்கின்றன. இது ஆசிய, மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெரும் பொருளாதார அனுகூலத்தை ஏற்படுத்தும் விடயமாகும் என்றும் தெரிவித்துள்ளார். இந்திய தலைநகர் டெல்லியில் நேற்று ஆரம்பமான மாநாட்டில் ஸ்கைப் …

Read More »

இலங்கையில் முதலீடு செய்ய தென்கொரிய விருப்பம்

இலங்கையில் முதலீடு செய்ய தென்கொரிய விருப்பம்

இலங்கையில் முதலீடு செய்ய தென்கொரிய விருப்பம் ஆய்வு தொடர்பான அபிவிருத்தி, தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளில் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள தென்கொரியா தயாராக உள்ளதாக அந்நாட்டு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் யுன் பியுங் சே தெரிவித்துள்ளார்.’ பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் வலியுறுத்தியுள்ளதாவது, இலங்கை மெகா பொலிஸ் திட்டத்தில் முதலீடு மேற்கொள்வதற்கு தென்கொரியா …

Read More »

நேரடி வெளிநாட்டு முதலீடுகள் நாட்டுக்குள் உள்வாங்கப்பட வேண்டும்: பிரதமர் ரணில்

நேரடி வெளிநாட்டு முதலீடுகள்-பிரதமர் ரணில்

நேரடி வெளிநாட்டு முதலீடுகள் நாட்டுக்குள் உள்வாங்கப்பட வேண்டும்: பிரதமர் ரணில் கடும் கடன் நெருக்கடிக்குள்ளாகியுள்ள இலங்கை, நேரடி வெளிநாட்டு முதலீடுகளை உள்வாங்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இதனை தெரிவித்தார். 700 கோடி அமெரிக்க டொலர்களை அடுத்த வருடத்தில் கடனாக செலுத்த வேண்டிய நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளதாகவும், 3 ஆயிரத்து 600 கோடி அமெரிக்க டொலர் கடனை அடுத்துவரும் …

Read More »

பிணைமுறி மோசடி: பிரதமரிடம் விசாரணை நடத்த வலியுறுத்தும் வாசுதேவ

பிணைமுறி மோசடி : வாசுதேவ நாணயக்கார

பிணைமுறி மோசடி: பிரதமரிடம் விசாரணை நடத்த வலியுறுத்தும் வாசுதேவ மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் பிரதமருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ‘இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இதுவரை …

Read More »

திரும்பிவாருங்கள்; ஈழ அகதிகளுக்கு ரணில் அழைப்பு

அவுஸ்திரேலியாவில் சட்டவிரோத புகலிடம்கோரி படகுகளில் சென்று அந்நாட்டிலுள்ள அகதி முகாம்களில் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை நாடு திரும்புமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். அவுஸ்ரேலியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றைய தினம் அவுஸ்ரேலியப் பிரதமர் மல்கம் ரேன்புல்லை கன்பராவில் வைத்து சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பின் போதே அவுஸ்ரேலியப் பிரதமருக்கு அருகே நின்று, ஸ்ரீலங்கா பிரதமர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். …

Read More »

அரசாங்கம் விடுத்த அழைப்பு நிராகரிப்பு: 10ஆவது நாளாகவும் தொடர்கிறது போராட்டம்

அரசாங்கம் விடுத்த அழைப்பு நிராகரிப்பு

அரசாங்கம் விடுத்த அழைப்பு நிராகரிப்பு; 10ஆவது நாளாகவும் தொடர்கிறது போராட்டம் காணிப் பிரச்சினை தொடர்பாக அலரிமாளிகையில் நடைபெறும் கலந்துரையாடலுக்கு வருமாறு அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பை போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் நிராகரித்துள்ளனர். இந்த நிலையில் அவர்கள் தமது நிலமீட்பு போராட்டத்தை 10ஆவது நாளாக இன்றும் முன்னெடுத்து வருகின்றனர். பிலவுக்குடியிருப்பு பிரதேசத்தில் அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட காணி இதுவரை தங்களுக்கு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து பிலவுக்குடியிருப்பு மக்கள் இராப்பகலாக போராட்டத்தை முன்னெடுத்து …

Read More »