Tuesday , October 14 2025
Home / Tag Archives: பஸில் ராஜபக்ஷ

Tag Archives: பஸில் ராஜபக்ஷ

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து மஹிந்த, பஸிலுடன் பேசவில்லை

2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து, மஹிந்த ராஜபக்ஷவுடனோ, பஸில் ராஜபக்ஷவுடனோ பேசவில்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இப்போது கலந்துரையாடுவது, மிகவும் முற்கூட்டிய நடவடிக்கையாக அமையும். அதற்கான நேரம்வரும் போது, மஹிந்த ராஜபக்ஷ ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வருவார். ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்தும் போது எந்தவொரு …

Read More »

பௌத்த தேரர்களை அரசியல் தலைவர்களே தீர்வுக்கு வழிப்படுத்த வேண்டும்!

“அரசியல் தீர்வுக்கு தமிழர் தரப்பில் இருந்து எந்த எதிர்ப்பும் இல்லை. மாறாக பௌத்த தேரர்களும் தென்னிலங்கை இனவாதிகளுமே தீர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். அவர்களை தெற்கு அரசியல் தலைவர்களே வழிப்படுத்த வேண்டும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் பேசி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதும் உங்களின் பொறுப்பு.” – இவ்வாறு பஸில் ராஜபக்ஷவிடம் நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் எடுத்துரைத்தார். இரண்டு நாள் பயணமாக வடக்குக்கு …

Read More »

கூட்டமைப்பின் கோட்டைக்குள் மலரத் துடிக்கிறது மஹிந்த அணி! – வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரமுகர்களுடன் பஸில் இரகசியப் பேச்சு

பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் கோட்டையாகக் கருதப்படுகின்ற வடக்கு மாகாணத்தில் கால்பதிப்பதற்குரிய முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ள மஹிந்த அணி, உள்ளூராட்சி சபைத் தேர்தலை குறிவைத்து அரசியல் வியூகங்களையும் வகுத்துவருகின்றது. இதன்படி வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் உட்பட வடக்கிலுள்ள சுமார் 30இற்கு மேற்பட்ட தமிழ் அரசியல்வாதிகள் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுடன் கொழும்பில் இரகசியப் பேச்சு நடத்தியுள்ளனர். இதன்போது மஹிந்தவுடன் இணைந்து அரசியல் பயணத்தை …

Read More »

அரசு மீது புதிய தாக்குதல்தொடுக்கத் தயாராகின்றனர் மஹிந்த அணியினர்! – பஸில் தலைமையில் களப்பணி தீவிரம்

அரசுக்கு எதிராக கடும் அழுத்தங்களைப் பிரயோகிக்கவும், அதன் செயற்பாடுகளை விமர்சித்து மக்கள் மத்தியில் பரப்புரைகளை முன்னெடுப்பதற்காகவும் பொதுஜன பெரமுனவின் சார்பில் சிவில் அமைப்பொன்று உருவாக்கப்படவுள்ளது. இதற்குரிய முயற்சியில் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தீவிரமாக இறங்கியுள்ளார். இது சம்பந்தமாக மஹிந்தவுக்கு சார்பான பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், சட்டத்தரணிகள், வைத்தியர்கள் உட்பட பல்துறையிலுள்ள நிபுணர்களுடனும் பஸில் ராஜபக்ஷ பேச்சு நடத்தி வருகின்றார். எதிரணி அரசியல்வாதிகள் அரசுமீது விமர்சனங்களை முன்வைத்தால் அது அரசியல் எதிர்ப்பு …

Read More »

அம்பாந்தோட்டை துறைமுகத்தை மஹிந்த ஆட்சியில் கைப்பற்றுவோம்

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் மேர்ச்சன்ட்ஸ் ஹோல்டிங் நிறுவனத்துக்குக் குத்தகைக்கு வழங்கும் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில், மஹிந்த ஆட்சியின்போது அது மீளப்பெறப்பட்டு மக்கள் மயப்படுத்தப்படும் என்று முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான பஸில் ராஜபக்ஷ தெரிவித்தார். அம்பாந்தோட்டை முறைமுகத்தை சீனாவுக்குக் குத்தகைக்கு வழங்கும் ஒப்பந்தம் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட நாளானது நாட்டுக்கு துக்கதினமாகும். குறித்த உடன்படிக்கை …

Read More »