Tag: நெடுந்தீவு

நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 23 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 23 பேரை, 5 படகுகளுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. நள்ளிரவில் மீன் பிடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படை மீனவர்களை கைது செய்து அழைத்துச்சென்றுள்ளது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறை கடற்படை முகாமில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நெடுந்தீவு கடற்பரப்பில் நான்கு மீனவர்கள் கைது

யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக, கடற்படையின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறைக்கு வடக்கே 18 கடல் மைல் தொலைவிற்கு அப்பால் இவர்கள் எல்லைத்தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் மீன்பிடிக்கு பயன்படுத்திய படகு மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் என்பவற்றையும் மீட்ட கடற்படையினர், மீனவர்களை யாழ். நீரியல் வள […]

நெடுந்தீவு சிறுமி கொலை சந்தேக நபருக்கு மரண தண்டனை

நெடுந்தீவு 10 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஜேசுதாஸ் லக்சாயினி என்ற சிறுமி பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய கந்தசாமி ஜெகதீஸ்வரன் என்ற சந்தேக நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதி நெடுந்தீவு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஜேசுதாஸ் லக்சாயினி எனும் 12 […]