நீதிபதி இளஞ்செழியன் அதிரடி உத்தரவு! சிகிச்சைக்கு சென்ற பெண் நோயாளர் ஒருவரை பாலியல் வல்லுறவு புரிந்த வைத்தியர் ஒருவருக்கு எதிராக இன்றையதினம் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் நேற்று பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளார். திருகோணமலை கந்தளாயில் 2012ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆயுர் வேத சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைக்கு சென்ற பெண் நோயாளி ஒருவர் மீது பாலியல் வல்லுறவு புரிந்ததாக ஆயுர்வேத மருத்துவர் மொஹமட் அபுதாஸிஸ் மொஹமட் வாகித் என்ற […]
Tag: நீதிபதி இளஞ்செழியன்
நீதிபதி இளஞ்செழியன் மீது திட்டமிட்டே துப்பாக்கிச்சூடு! – வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் தெரிவிப்பு
“யாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனைக் கொலைசெய்யும் திட்டத்துடனேயே அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது” என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:- “நல்லூரில் கடந்த 22ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் நீதிபதி இளஞ்செழியனே இலக்குவைக்கப்பட்டிருக்கின்றார். அவரது மெய்ப்பாதுகாவலரான சிங்கள பொலிஸ் உத்தியோகத்தரே தனது உயிரைக் கொடுத்து நீதிபதியைக் காப்பாற்றியுள்ளார். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த தனது மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் உத்தியோகத்தரின் குடும்பத்தினரைக் கண்டதும் […]
நீதிபதி இளஞ்செழியன் மீதான படுகொலை முயற்சிக்கு த.வி.கூ. கண்டனம்
நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலை முயற்சியை தமிழர் விடுதலைக் கூட்டணி மிக வன்மையாக கண்டிப்பதாக, கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். நீதிபதி இளஞ்செழியனின் வாகனம் மீது கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ”குறித்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதுடன், தன்னுயிரை அர்ப்பணித்த பொலிஸ் அதிகாரியின் அகால மரணத்தால், துயருற்று இருக்கும் அன்னாரின் குடும்பத்துக்கு […]
யாழ். துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம் நீதித்துறை மீதான தாக்குதல்: சிவஞானம்
நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் முயற்சியானது யாழ்ப்பாண மாவட்டத்தினதும், நீதித்துறை மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகவே பார்க்கப்படவேண்டும் என வட.மாகாணசபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நல்லூர் கந்தசுவாமி ஆலய தென்மேற்கு வீதியில் வைத்து நேற்று (சனிக்கிழமை) மாலை யாழ்ப்பாண மாவட்ட மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் அவர்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட […]
இளஞ்செழியனுக்கு 17 வருடங்கள் நம்பிக்கைக்குரியவராக இருந்த மெய்ப்பாதுகாவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த அவரது மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவரான பொலிஸ் சார்ஜன்ட் சரத் ஹேமச்சந்திர (வயது – 51) இன்று அதிகாலை உயிரிழந்தார். அவர் ஆபத்தான கட்டத்தில் நேற்று மாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இவரது பிஸ்டலைப் பறித்தே தாக்குதல்தாரி துப்பாக்கிச்சூடு நடத்தியிருந்தார். வலது வயிற்றுப்பகுதியால் உட்புகுந்த துப்பாக்கிச் சன்னம் இடது வயிற்றுப் பக்கத்தால் வெளியேறியுள்ளது. […]





