நல்லூர் முருகன் கோவில் மூடல் நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் இரும்பு கம்பியினாலான கதவால், வாயில் பூட்டப்பட்டுள்ளது. கொரோனோ பாதிப்பிலிருந்து பக்தர்களைப் பாதுகாக்கும் முகமாகவே, இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் இத்தாலியில் கொரோனா தீவிரம்! ஒரே நாளில் 368பேர் உயிரிழப்பு கனடாவில் கொரோனா – 24 மணி நேரத்தில் 24 பேர் …
Read More »பலத்த பாதுகாப்புடன் – நல்லூர் கந்தனுக்கு கொடியேற்றம்!
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா கடும் பாதுகாப்புடன் கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமானது. எதிர்வரும் 29ஆம் திகதி தேர்த்திருவிழாவும், 30ஆம் திகதி தீர்த்ததிருவிழாவும் இடம்பெறும்.
Read More »நல்லூர் கந்தனிற்கு வந்த சோதனை! அதிரடிப் படையினர் குவிப்பு…
யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஆலயம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆலயத்தை சூழவுள்ள சுற்று வீதிகளின் போக்குவரத்து தடை செய்யப்பட்டும், அங்கு அதிகளவான இராணுவம், விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பான நிலை காணப்படுகின்றது. ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் ஆலய சூழலுக்கு கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பக்தர்கள் உடற் …
Read More »யாழ் பல்கலைகழகத்தில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீடத்தை அழகு படுத்தும் செயற்திட்டம் நல்லூர் பிரதேச சபையினரால் நேற்று முன்னெடுக்கப்பட்டது. சபையின் தவிசாளர் தலைமையில் 50 பயன்தரு மரங்கள் பல்கலைக் கழக சூழலில் நடப்பட்டன.மரங்களைப் பாதுகாக்கும் வகையில் நெற்றினால் அமைக்கப்பட்ட வேலிகளும் போடப்பட்டன. அமைக்கப்பட்ட சுற்று வேலிகளில் மரம் வளர்ப்பது தொடர்பான விழிப்புணர்வு வாசகங்களும் தொங்க விடப்பட்டுள்ளன.
Read More »வீதிகளின் ஆரம்பத்திலும் முடிவிலும்- நல்லூர் பிரதேச சபையின் வரவேற்பு வளைவு!!
நல்லூர்ப் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகளின் ஆரம்பத்திலும் முடிவிலும் சபையின் வாசகம் அடங்கிய வரவேற்பு வளைவு அமைப்பது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நல்லூர்ப் பிரதேச சபையின் அமர்வு சபை மண்டபத்தில் தவிசாளர் தியாகமூர்த்தி தலைமையில் நேற்று இடம்பெற்றது. இந்த அமர்வில் குறித்த பிரேரணையை தவிசாளர் முன்மொழிந்தார். பிரேரணையில் தெரிவித்தாவது: சபையின் எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகளில் வரவேற்பு வளைவுகளை நிறுவத் தீர்மானித்துள்ளோம். அதைப் பிரேரணையாக இந்தச் சபையில் முன்மொழிகின்றேன். இதை …
Read More »நல்லூர் சம்பவத்திற்கு நீதி விசாரணை வேண்டும்
யாழ். நல்லூர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் நீதியான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, உண்மை கண்டறியப்பட வேண்டுமென காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காணாமல் போன தமது உறவுகளின் உண்மை நிலையை வெளிப்படுத்துமாறு கோரி, கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டம் இன்று 158 நாட்களை எட்டியுள்ளது. இந்நிலையில், நல்லூர் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (வியாழக்கிழமை) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்த காணாமல் …
Read More »