பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தனது எதிர்கட்சி பதவிக்கு எதிராக செயற்பட்டு பதவி துஸ்பிரயோகம் செய்துள்ளார். நாட்டில் கூட்டு எதிரணியினரின் கொள்கைகள் நிலைநாட்டப்பட வேண்டுமாயின் முதலில் எதிர்கட்சி தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கூட்டு எதிரணியினர் சமர்ப்பித்து நிறைவேற்றப்பட வேண்டும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். நம்பிக்கையில்லா பிரேரணையில் இருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்காலிகமாகவே தப்பித்துள்ளார். பாராளுமன்றத்தில் ஜனநாயகம் …
Read More »நம்பிக்கையில்லா பிரேரணை: திறந்த வாக்கெடுப்பு நடத்த தீர்மானம்!
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீது திறந்த முறையில் வாக்கெடுப்பு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை) முற்பகல் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இலத்திரனியல் வாக்கெடுப்பு முறையால் அண்மையில் நாடாளுமன்றில் ஏற்பட்ட குழப்பநிலையைக் கருத்திற்கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 55 உறுப்பினர்களுடைய கையெழுத்துக்களுடன் பிரதமர் ரணிலுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணியினர் நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை சமர்ப்பித்துள்ளனர். குறித்த பிரேரணை மீது, எதிர்வரும் ஏப்ரல் மாதம் …
Read More »நம்பிக்கையில்லா பிரேரணை ஒருபோதும் வெற்றியளிக்காது – சந்திரிகா
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெறாதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். நல்லாட்சி அரசின் ஐந்து வருட காலங்கள் பூர்த்தியடையும் வரை எவராலும் ஆட்சியை கலைக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக, 55 உறுப்பினர்களின் கையெழுத்துக்களுடன் கடந்த வாரம் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் நம்பிக்கையில்லா …
Read More »பிரதமருக்கு எதிரான பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (புதன்கிழமை) சபாநாயகர் கரு ஜெயசூர்யவிடம் ஒன்றிணைந்த எதிரணியினரால் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரேரணையில் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட நிலையில் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் இந்த பிரேரணையில் 4 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர். நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் போதிய உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காத நிலையில் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்படவில்லை. இந்நிலையிலேயே இன்று இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.
Read More »பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படுவது உறுதி
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்கட்சி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு கைச்சாத்தினைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன. மகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்த தகவலை வழங்கியுள்ளார். அத்துடன் இந்த பிரேரணைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்காக குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பிரேரணை எதிர்வரும் 20ஆம்இ 21ஆம் அல்லது 22ஆம் திகதிகளில் ஏதாவதொரு தினத்தில் சபாநாயகரிடம் கையளிக்கப்படும் …
Read More »ரணிலுக்கு எதிரான பிரேரணை – எதிரணி நாளை தீர்மானம்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து முடிவு செய்வதற்காக கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு நாளை கூடவுள்ளது. எதிர்வரும் 6ஆம் நாளுக்குள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்று கூட்டு எதிரணைியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கூறியிருந்தார். இந்த நிலையிலேயே நாளை கூட்டு எதிரணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை நாடாளுமன்றக் கட்டடத்தில் நாங்கள் ஒன்று …
Read More »