இந்தியாவில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ நோய் வராமல் தடுப்பதற்கான சொட்டு மருந்து அளிக்கும் திட்டம் அனைத்து மாநிலங்களிலும், இந்திய ஆட்சிப்பகுதிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் சுமார் 17 கோடி குழந்தைகளுக்கு இலவசமாக போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கிய நிலையில், தமிழகத்தில் மொத்தம் 43 ஆயிரத்து 51 மையங்கள் அமைக்கப்பட்டு, 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து தருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியில் …
Read More »உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் மகிழ்ச்சியாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். ஆனால் மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்பிரசித்தி பெற்றவை. நேற்று அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டைத் தொடர்ந்து, மாட்டுப் பொங்கலான இன்று மதுரை பாலமேட்டில் கோலாகலமாக ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. மதுரை ஆட்சியர் வீரராகவ ராவ் …
Read More »அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் இணைப்பதற்கான முயற்சி வரும் திங்கட்கிழமை பேச்சு தொடக்கம்
அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் இணைப்பதற்கான முயற்சி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இரு அணியிலும் தலா 7 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரு அணி குழுவினரும் வருகிற 24-ந்தேதி பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளனர். அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் இணைப்பதற்கான முயற்சி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இரு அணியிலும் தலா 7 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஓ.பி.எஸ். அணியில் கே.பி. முனுசாமி …
Read More »