இம்முறை கூட்டமைப்புக்கு 20 ஆசனங்கள் கிடைக்கும் – சம்பந்தன் உறுதி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இம்முறை வடக்கு, கிழக்கில் 20 ஆசனங்களைப் பெறும் என்று தமிழத் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (25) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ‘தமிழ் பேசும் மக்கள் வாக்குகளைப் பிரிக்காமல் ஒரு குடையின் கீழ் தங்களது வாக்குகளை அளித்து சர்வதேசத்துக்கு …
Read More »சம்பந்தனின் வீடினை ஈ.பி.ஆர்.எல்.எப் முற்றுகை
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வீட்டை முற்றுகையிட்டு ஈ.பி.ஆர்.எல்.எப். உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசாங்கத்திற்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரரணைக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் ஆதரவு வழங்குமாறு வலியுறுத்தியே திருகோணமலையில் உள்ள அவரது வீட்டின் முன்பாக குறித்த போராட்டம் இடம்பெற்று வருகின்றது. மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையில் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள் சிலவற்றின் உறுப்பினர்களினால் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனின் …
Read More »ரணிலுக்கு அழுத்தம் கொடுக்கும் கூட்டமைப்பு!
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு புலம்பெயர்ந்துள்ள விடுதலைப் புலிகள் மற்றும் சர்வதேச ஏகாதிபத்திய நாடுகளுடனும் அமைப்புகளுடனும் இணைந்து செயற்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலம்பெயர்ந்த விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்படுகிறது. அத்துடன் சர்வதேச ஏகாதிபத்திய நாடுகள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டு வருகிறது. நாட்டை பிரித்து சமஷ்டி …
Read More »தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசியல் ஆதாயம் பெறுவதை அனுமதிக்கக் கூடாது
மூன்று தசாப்தகால உள்நாட்டு யுத்தத்தினால் சாதிக்கமுடியாமல் போனதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துக்கு அளிக்கும் ஆதரவின் மூலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு சாதிப்பதற்கு அனுமதிக்கக்கூடாது என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வலியுறுத்தியிருக்கிறார். வடமத்திய மாகாணத்தில் நொச்சியாகம பகுதியில் நேற்று பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றிய தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரான ராஜபக்ச, அரசாங்கத்துக்கு அளிக்கின்ற ஆதரவு மூலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் ஆதாயம் அடையக்கூடும்.போரின் முரமாக அடையமுடியாததை அரசியலமைப்பின் ஊடாக அவர்கள் …
Read More »மகிந்தவுக்கு எதிராகச் செயற்பட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீர்மானம்!
மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவு வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இத்தகைய சந்தர்ப்பத்தில் நடுநிலைமை வகிப்பது அராஜகம் வெற்றியீட்டுவதற்கு வழிவகுக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து மகிந்த தரப்புக்கு மாறிய நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More »பண்டாரநாயக்க ஏற்றுக்கொண்ட சமஷ்டி முறையை மைத்திரி எதிர்ப்பது ஏன்
ஜெனிவா தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்றுவோம் என சர்வதேசத்திற்கு வாக்குறுதி வழங்கிய ஸ்ரீலங்கா அரசாங்கம், கால அவகாசம் வழங்கப்பட்ட பின்னர் யுத்த குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பை ஏற்க முடியாது என தெரிவிப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த நிலையில் யுத்தக் குற்றச்சாட்டு மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை தமிழ்த் …
Read More »தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐனாதிபதிக்கு இடையில் இன்று அவசர சந்திப்பு
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐனாதிபதிக்கு இடையில் இன்று அவசர சந்திப்பு முல்லைத்தீவு – கேப்பாபுலவு, புலவுக்குடியிருப்பு, பரவிப்பாஞ்சான் மக்களின் காணி பிரச்சனைகள் தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐனாதிபதியை சந்திக்கவுள்ளது. இந்த சந்திப்பு இன்றையதினம் இடம்பெறவுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அரச படையினரிடம் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவு – கேப்பாபுலுவு – புலவுக்குடியிருப்பு – பரவிப்பாஞ்சான் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். போராட்டங்களில் ஈடுபட்டுவரும் …
Read More »மஹிந்தவுடன் இணைந்து கருணாவும் தமிழர்களுக்கு துரோகம் இழைக்கிறார் – பிரசன்னா இந்திரகுமார்
மஹிந்தவுடன் இணைந்து கருணாவும் தமிழர்களுக்கு துரோகம் இழைக்கிறார் – பிரசன்னா இந்திரகுமார் தமிழ்த் தேசியத்திற்காக போராடிய முன்னாள் பிரதியமைச்சர் கருணாஅம்மான் தற்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் முகவராக செயற்படுவதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார். வடக்கு, கிழக்கு மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச செய்த துரோகத்தையே, கருணா அம்மானும் தமிழ் மக்களுக்கு செய்ததாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தினால், …
Read More »