தடுமாற்றமடைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு..! நிபந்தனைகளுடன் , எழுத்துமூலமான உத்தரவாதத்தை எதிர்பார்த்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பிரதான இரண்டு கட்சி வேட்பாளர்களும் இதுவரை எவ்வித உத்தரவாதங்களையும் வழங்கவில்லை. அந்தவகையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருடன் இதுவரையிலும் எவ்விதமான பேச்சுவார்த்தையும் முன்னெடுக்கப்படவில்லை. அத்துடன் , ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ, எவ்விதமான நிபந்தனைகளையும் ஏற்கபோவதில்லை என திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். இந்த நிலையில் எஞ்சியிருப்பது, ஜே.வி.பியின் […]
Tag: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
சஜித்க்கு பதவி வழங்குவது குறித்து கருத்து தெரிவித்த ரணில்!
சஜித்க்கு பதவி வழங்குவது குறித்து கருத்து தெரிவித்த ரணில்! ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் பதவி தனக்கு வழங்கப்பட்டால் கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் ரணில் விக்கிரமசிங்க கடமையாற்றுவதில் தனக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலை அடுத்தே சஜித் பிரேமதாச இதனை தெரிவித்தார். பிரதமருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமைந்தாகவும், பிரதமரிடம் வெளிப்படையான முன்மொழிவுகளை முன்வைக்கவில்லை என சஜித் […]
ஹிஸ்புல்லாவைச் சந்தித்த கூட்டமைப்பின் மூன்று பிரபலங்கள்!
கிழக்கு மாகாண ஆளுநரின் அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையாக நிராகரிப்பதாக தமழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான கி.துரைராசசிங்கம் அன்மையில் தெரிவித்திருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் இன்னாள் கிழக்கு மாகாணத்தில் இருக்கக்கூடிய பிரதேச சபை, நகர சபை, மாநகர சபையின் தவிசாளர்கள் நகர முதல்வர்கள், மாநகர மேயர்கள் அனைவரும் ஹிஸ்புல்லாவின் அழைப்பினை புறக்கணிப்பதென மட்டக்களப்பில் இடம்பெற்ற […]
யாழ்ப்பாணத்தில் வைத்து கூட்டமைப்புக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க கோரிக்கை
பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு மற்றும் வரவு – செலவுத் திட்டம் ஆகியவற்றை எம்முடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிர்க்கவேண்டும் என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க யாழ்ப்பாணத்தில் வைத்து கோரிக்கை விடுத்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போது கூட்டமைப்பைத் தந்திரமாக ஏமாற்றி வருகின்றார் என்றும் அவர் சாடினார். யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். […]
சுமந்திரனின் முட்டாள்தனத்தை அம்பலப்படுத்திய கருணா!
அண்மையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றம் தமிழ் மக்களுக்கு பாரிய பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதாகவும், அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கிய காரணம் என்றும் கருணா என அழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் வி.முரளிதரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, வாகனேரி நீர்ப்பாசன திட்டத்தினை உறுகாம நீர்ப்பாசன திட்டத்திலிருந்து பிரிப்பதற்கு எடுத்துவரும் முயற்சியைக் கைவிடுமாறு கோரி விவசாயிகளால் செங்கலடி நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் […]
தமிழர்களின் ஒத்துழைப்பை எதிர்நோக்கி இருக்கும் பசில்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்காவிட்டாலும், தமிழர்கள் தமக்கான ஒத்துழைப்புக்களை வழங்குவார்களென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கொழும்பில் நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “கிளிநொச்சியில் ஏற்பட்ட மழை வெள்ளத்திற்கு நிவாரணங்கள் வழங்க பல்வேறு தரப்பினரும் முன்வந்துள்ளனர். நாமும் பொதுஜன பெரமுன சார்பில் உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள முன்வந்துள்ளோம். மக்களுக்கு பயனுள்ள ஏதேனும் செயற்பாட்டை […]
உலகில் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த மஹிந்த!
இனவாதமின்றி ஒன்றிணைந்த அரசாங்கத்தை அமைப்பதற்கே தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். காலி முகத் திடலில் நேற்றைய தினம் நடைபெற்று வரும் மாபெரும் கூட்டத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எமக்கு ஆதரவு வழங்கியதற்காக அவர்களை பிரிவினைவாதிகள் என விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். சதித்திட்டத்தின் மூலம் மஹிந்தவும் அவரது சகாக்களும் ஆட்சியை கைப்பற்றி நன்மையடைய […]
கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு பறந்து சென்ற கடிதம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உதவியுடன் ஆட்சிக்குழப்பநிலை முடிவுக்கு வந்துள்ள சூழ்நிலையில் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அரசுக்கு காத்திரமான அழுத்தத்தினைக் கொடுப்பதுடனூடாக திட்டமிடப்பட்ட பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளை தடுத்து நிறுத்த முன்வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழர் மரபுரிமை பேரவையினர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். இக் கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ஆட்சிக் குழப்ப நிலையில் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் அவசரமாக நிர்மாணிக்கப்படும் புத்தர் சிலை தொடர்பில் பொது மக்கள் கவலையும் அதிருப்தியும் […]
சர்வதேச தூதுவர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து சர்வதேச தூதுவர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். நேற்றையதினம் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதிகளுடன அமெரிக்கா, பிரித்தானியா, நோர்வே, சுவிட்ஸர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளின் தூதுவர்களும் கலந்து கொண்டுள்ளனர். நாட்டின் தற்போதைய அரசியல் நிலை தொடர்பில் சர்வதேச சமூகத்திற்கு இதன் போது விளக்கம் […]
கருணாவால் திக்கு… முக்காடும் கூட்டமைப்பு…
இலங்கையில் தற்போதைய அரசியல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில், மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் பிரதி அமைச்சராக பதவி வகித்த கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதாவது “நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னையும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவையும் சந்திக்க சம்மதம் தெரிவித்துள்ளனர்” என கருணா தனது டுவிட்டர் தளத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார். குறித்த செய்தியை “மகிழ்ச்சியான செய்தி” […]





