Tag: தமிழ்

தமிழ் ஊடகவியலாளர்களிடம் தொண்டமான் பற்றிய உண்மை வெளியிட்ட மகிந்த

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை வேதனமாக 1000 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தம்முடன் பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் யாரும் முன்வைக்கவில்லை என்று எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு – விஜயராம மாவத்தையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை தமிழ் செய்தி ஆசிரியர்களுடனான விசேட சந்திப்பு ஒன்றை நடத்தினார். இதில் கருத்து கூறிய மகிந்த ராஜபக்ஷ, மொத்த சம்பளமாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்பட […]

மலையகம் சிந்தனையில் மாற்றம் காண வேண்டும்

மலையக தமிழ்ச் சமூகம் மேம்பட்டு வருவதை பாராட்டும் அதேவேளை, மேற்படி விவகாரத்தில் புதைந்து காணப்படுகின்ற உண்மைகளையும், இனிவரும் காலங்களிலும் மலையக தமிழ்ச் சமூகம் மேம்பட்டு வருகின்றபோது சில அரசியல் சக்திகளும் ஏனைய தரப்புகள் சிலவும், மலையக மக்கள் என்றும் தொழில் அடிமைகளாகத்தான் வாழவேண்டும் என்ற சிந்தனையில் இருக்கின்றவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள் என்பதும் அவ்வாறான எண்ணம் கொண்டவர்களில் பெருமளவிலானோர் தமிழர்கள்தான் என்பதும் கசப்பான உண்மையாகும். 200 வருடங்களுக்கு முன்னர் இந்த நாட்டில் […]

புதிய அர­ச­மைப்பு விடயத்தில்- தலை­வர்­க­ளுக்கு ஆர்­வ­மில்­லை- அமைச்சர் மனோ!!

புதிய அர­சமைப்­பு கொண்­டு­வ­ரப்­ப­டாது என்று தேசிய சக­வாழ்வு, கலந்­து­ரை­யா­டல், அரச கரும மொழி­கள் மற்­றும் நல்­லி­ணக்க அமைச்­சர் மனோ கனே­சன் தெரி­வித்­தார். ஐ. டப்­ளியூ.பி.ஆர். எனப்­ப­டும் போர் மற்­றும் சமா­தா­னம் தொடர்­பி­லான அறிக்­கை­யி­டல் கற்கை நிலை­யம் சார்­பாக, அமைச்­சர் மனோ கணே­சனை அமைச்­சில் நேற்றுச் சந்­தித்த புல­னாய்வு ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளி­டமே இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: புதிய அர­சமைப்­பைக் கொண்­டு­ வ­ரு­வ­தில் தலைமை அமைச்­ச­ருக்­கும், அரச தலை­வ­ருக்­கும் எந்த ஆர்­வ­மும் […]

தமிழர்களே உங்கள் ரத்தம் கொதிக்கவில்லையா

சின்னதாக ஏதாவது பிரச்சனை நடந்தாலே அதை அரசியல்வாதிகள் பெரிதாக்கி குளிர் காய்வார்கள். தற்போது வைரமுத்து மற்றும் சங்கராச்சாரியர் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் சும்மா இருப்பார்களா? திடீரென தமிழ்ப்பற்று பொங்கி எழுந்து வீராவேசமாக அறிக்கை விட்டு கொண்டிருக்கின்றனர். அரசியல்வாதிகள் மட்டுமின்றி தற்போது படம் இல்லாமல் சும்மா இருக்கும் திரையுலகினர்களும் தங்களுடைய தமிழ்ப்பாசத்தை காட்டி வருகின்றனர். இந்த நிலையில் இயக்குனர் இம்யம் பாரதிராஜா காஞ்சி விஜயேந்திரர் குறித்த சர்ச்சைக்கு ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் […]

முட்டாள்தனமாக பேசும் வைரமுத்துவுக்கு தமிழ் கூட தெரியாது

ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசிய கட்டுரையில் அவரை ஒரு ஆராய்ச்சியாளர் தேவதாசி என குறிப்பிட்டுள்ளதை மேற்கோள் காட்டினார். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வைரமுத்துவுக்கு எதிராக இந்து அமைப்புக்களை சேர்ந்தவர்களும், பாஜகவினரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும், வசை பாடியும், அவர் மீது வழக்கு தொடுத்தும் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகின்றனர். வைரமுத்து தனது கட்டுரை குறித்தும், சர்ச்சை குறித்தும் விளக்கம் அளித்து, அது […]

ரஜினியின் ஆன்மீக அரசியலும், தமிழ் இலக்கணமும்

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்துவிட்டார். கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்த ரஜினி, தான் ஆன்மீக அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறினார். ஆன்மீக அரசியல் என ரஜினி கூறியது பல்வேறு எதிர்ப்புகளை அவருக்கு உருவாகி வருகிறது. பலரும் அவரது ஆன்மீக அரசியலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ரஜினியின் அரசியல் கொள்கை என்ன என்பதும் குழப்பமாக உள்ளது. நிரூபர் ஒருவர் உங்கள் […]

ஜனாதிபதி

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம்: ஜனாதிபதியின் அழைப்புக்காக காத்திருக்கிறது சம்பந்தன் குழு!

அநுராதபுரம் சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியல் கைதிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், அவர்களின் கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரில் பேசுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் அனுமதி கேட்டுள்ளனர். எனினும், ஜனாதிபதி செயலகத்திலிருந்து சந்திப்புக்குரிய அழைப்பு இதுவரை வரவில்லை. உண்ணாவிரதக் கைதிகளுக்கு அரசு உடனடியாக உரிய பதிலை வழங்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் […]

தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு வலியுறுத்தி வடக்கில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள்!

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும், நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்கக் கோரியும் யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் இன்று மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. யாழ்ப்பாணத்தில் இன்று காலை 9 மணியளவில் யாழ். நகர் மத்திய பஸ் நிலையத்துக்கு முன்னால் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் போராட்டம் […]