Tag: ஞானசார தேரர்

இன்னும் 40 நிமிடமே அரசாங்த்திற்குள்ளது! எச்சரிக்கிறார் ஞானசார தேரர்

வழங்கிய காலக்கேடு முடிவடைய இன்னும் 40 நிமிடங்களே அரசாங்கத்திற்குள்ளன என பொதுபலசேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். அமைச்சர் ரிஷாத், மேல் மாகாண ஆளுநர் அசாத்சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை உடன் பதவி நீக்கி குற்றப்புலனாய்வு பிரிவில் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். இல்லையேல் கடும் எதிர்வினைகளை சந்திக்க நேரிடும் என பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் ஞானசார தேரர் […]

மௌன புரட்சியை கலைத்துள்ளேன்! அதிரடி காட்டப் போறேன்!

நான் அரசியல்வாதிகளின் கைக்கூலி அல்லன். தியானம் செய்து எஞ்சியுள்ள காலத்தை கடப்பதற்கு எடுத்த முடிவை மாற்றிவிட்டேன் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட ஞானசார தேரர் இன்று தலதா மாளிகைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டார். அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ஞானசார தேரர், சிறையிலிருந்து வெளியேறிய பின்னர், எதிர்காலம் குறித்து அறிவிப்பொன்றை விடுத்திருந்தேன். […]

முல்லைத்தீவில் பிறந்திருந்தால் தமிழ் புலியாம் ஞானசார தேரர்

நான் சிங்கள பெளத்தனாக பிறந்திட்டதால், எனது இனத்திற்காக போராடி இப்போது சிறையில் இருக்கிறேன். நான் முல்லைத்தீவில் பிறந்திருந்தால் ஒரு தமிழனாக போராடி ஒரு தமிழ் புலியாக இதே சிறையில் இருந்திருப்பேன் என ஞானசார தேரர் தெரிவித்ததாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரரை அமைச்சர்களான மனோகணேசன், ரவி கருணாநாயக்க மற்றும் மேல்மாகாண ஆளுநர் அஸாத் சாலி ஆகியோர் நேற்று வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் […]

ஜனாதிபதி தேர்தலில் ஞானசார தேரர் போட்டியிட முயற்சி: வாசுதேவ

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஞானசார தேரரை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடச் செய்து ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு ஞானசார தேரர் தொடர்பாக கருத்து வெளியிடும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “இனவாத கலவரங்களை நாட்டில் ஏற்படுத்தும் சூழ்ச்சித் திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. நாட்டில் இன்று இனவாத கலவரங்களோ முரண்பாடுகளோ […]

ஞானசார தேரர் குறித்து தகவல் தாருங்கள்: பொலிஸார் வேண்டுகோள்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மறைந்திருப்பதற்கு உதவிபுரிபவர்கள் குறித்துத் தகவல் வழங்கினால் அவரைக் கைது செய்ய முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி அறிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில், “குறித்த தேரருக்கு பாதுகாப்பு வழங்குவது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுவோர் எந்தவித தராதரமும் […]

ஞானசாரருக்கு பிடியாணை!

பொது பல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இன முரண்பாடுகளை தோற்றுவிப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அவரை ஆஜராகுமாறு நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட அறிவித்தலை ஞானசாரர் தொடர்ந்தும் உதாசீனப்படுத்தி வந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக இன ரீதியான முரண்பாடுகளை […]

ஞானசார தேரருக்கு அமைச்சர் பாட்டலியே பாதுகாப்பு வழங்கி வருகிறார்! – திஸ்ஸ விதாரண குற்றச்சாட்டு

இலங்கையின் அமைதிக்கு எதிராக இனக் கலவரங்களைத் தூண்டிவிடும் பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இந்த அரசின் பிரபல அமைச்சர்களில் ஒருவரான பாட்டலி சம்பிக்க ரணவக்கவே பாதுகாப்பு வழங்கி வருகிறார் என லங்கா சமசமாஜ கட்சியின் பிரதம செயலாளரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண குற்றஞ்சாட்டியுள்ளார். ஞானசார தேரருக்கு அமைச்சரொருவர் பாதுகாப்பு வழங்கி வருகின்றார் என ஊடகங்கள் மறைமுகமாக செய்திகளை வெளியிட்டு வந்திருப்பதாகவும் பாட்டலி சம்பிக்க ரணவக்கவே அந்த அமைச்சர் […]

ஞானசார தேரரைத் தேடும் பணி தொடர்கின்றதாம்! – பொலிஸார் கூறுகின்றனர்

நாட்டில் இனவாதம், மதவாதத்தைத் தூண்டுவிட்டி குழப்பங்களை உருவாக்க முற்படுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அத்துடன், பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளரை கைதுசெய்வதற்குரிய சகல முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரியந்த ஜயக்கொடி தெரிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் […]