Tag: ஜெயலலிதா

இதெல்லாம் கவனிக்க வேண்டாமா?

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாளை தமிழகமெங்கும் உள்ள அதிமுகவினர் இன்று கொண்டாடி வருகின்றனர். ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி தமிழகமெங்கும், அதிமுக சார்பில் விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஜெ.வின் உருவ சிலையும் திறக்கப்பட்டது. மேலும், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘நமது புரட்சி தலைவி அம்மா ’ வும் வெளியிடப்பட்டுள்ளது. அதோடு, தமிழக அரசு சார்பில் மானிய ஸ்கூட்டி வழங்கும் திட்டமும் இன்று தொடங்கப்படுகிறது. […]

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது

நான் சசிகலாவை சமாளித்தேன்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு விசுவாசமாக இருந்ததால், சசிகலா குடும்பத்தினர் தனக்கு துரோகி பட்டத்தை கொடுத்தனர் என துணை முதல்வர் ஓ.பி.எஸ் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாள் விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் தேனியில் நடைபெற்றது. அதில், கலந்து கொண்டு ஓ.பி.எஸ் பேசியதாவது: நான் ஜெ.விற்கு விசுவாசமாக இருந்தேன். அதனால்தான் அவர் என்னை இரண்டு முறை முதல்வர் பதவியில் அமர வைத்தார். எனக்கு அது போதும். பிரதமர் மோடி கூறியதால்தான் […]

போயஸ் கார்டனை சிபிஐ கைப்பற்ற வேண்டும்

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அவ்வப்போது அரசியல் பரபரப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் நேற்று சேலம் பகுதியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர்.அம்மா தீபா பேரவை கூட்டத்தில் கலந்து கொண்டு ஆவேசமாக பேசினார். இந்த கூட்டத்தில் தீபா பேசியதாவது: அண்ணா, எம்.ஜி.ஆரை கண்டெடுத்தார். எம்.ஜி.ஆர், அம்மாவைக் கண்டெடுத்தார். நீங்கள் என்னைக் கண்டெடுத்திருக்கிறீர்கள். நானாக அரசியலுக்கு வரவில்லை. நீங்கள் அழைத்ததால் வந்தேன். அம்மாவுக்கென்று பதவி ஆசை இல்லை, தனி வாழ்க்கை இல்லை. அவரின் புகழுக்குக் […]

அதிமுக பொதுச் செயலாளர்

ஜெயலலிதா பிறந்த நாளில் சிறை கைதிகளை விடுவிக்க தமிழக அரசு முடிவு!

இறந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதி சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ளவர்களை அவர்களது வழக்கிற்கு ஏற்ப விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கடந்த தேர்தலின் போது ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளில் ஒன்று சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள கைதிகளை விடுதலை செய்வது. இதனை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நிறைவேற்ற உள்ளது. சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் […]

அப்பல்லோவை எச்சரிக்கும் விசாரணை ஆணையம்!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது மரணத்தில் பல்வேறு தரப்பினர் சந்தேகத்தை எழுப்பி வந்தனர். இதனையடுத்து ஜெயலலிதா மரணம் குறித்த நீதி விசாரணை நடத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டார். அதன்படி விசாரணை ஆணைய தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஜெயலலிதா மரணம் குறித்து புகார் அளித்தவர்களையும், புகாருக்கு உள்ளானவர்களையும் விசாரித்து […]

சசிகலா அடித்த அடியில் ஜெ. கன்னத்தில் ஏற்பட்ட அந்த புள்ளிகள்

சசிலா ஜெயலலிதாவை ஆணிக்கட்டையால் அடித்ததே அவர் கன்னத்தில் ஏற்பட்ட புள்ளிகளுக்கு காரணம் என அதிமுக முதன்மை செய்தித் தொடர்பாளர் பொன்னையன் பீதியை கிளப்பியுள்ளார். ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆறுமுகசாமி தலைமையில் நடந்து வருகிறது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பொன்னையன் கூறியுள்ளது புதிய கண்டுபிடிப்பாக உள்ளது. அவர் கூறியதாவது:- ஜெ.கன்னத்தில் உள்ள புள்ளிகள் என்பார்மிங்கிற்கு அப்பாற்பட்ட புள்ளிகள் என்று அரசு மருத்துவர் சுதா சேஷையன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். […]

ஜெயலலிதாவின் மரணம் குறித்து ராகுல்காந்தியிடம் விசாரணை

உடல்நிலை சரியில்லாமல் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது, அவரை சந்தித்த அரசியல் தலைவர்களை விசாரணைக்கு உட்படுத்த விசாரணை கமிஷன் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் அடைந்ததாக கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையிலான விசாரணை ஆணையம் கடந்த செப்டம்பர் 25ம் தேதி தமிழக அரசால் அமைக்கப்பட்ட நிலையில் இந்த ஆணையம் தற்போது விறுவிறுப்பாக […]

சசிகலாவை சந்திக்காமல் பீலா விட்டாரா தினகரன்?

ஆர்கே நகர் தொகுதியில் வெற்றி பெற்ற டிடிவி தினகரன் தனது சித்தி சசிகலாவை பெங்களூர் சிறைக்கு சென்று இன்று சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியும் அளித்தார் அவர். தினகரன் தனது பேட்டியில் சசிகலா தன்னிடம் எதுவும் பேசவில்லை எனவும், ஜெயலலிதாவின் நினைவு தினத்துக்கு பின்னர் மௌன விரதம் இருந்து வரும் அவர், நான் கூறியதை மட்டும் கேட்டுவிட்டு சரி என தலையை ஆட்டியதாக கூறினார். ஆனால் சசிகலாவை […]

முதல்வர் சசிகலா

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான ஆவணங்களை சமர்பிக்க சசிகலாவுக்கு 15 நாள் ‘கெடு’

விசாரணை ஆணையம் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான ஆவணங்களை 15 நாட்களுக்குள் சமர்பிக்க வேண்டுமென சசிகலாவுக்கு ‘கெடு’ விதித்து சம்மன் அனுப்பியுள்ளது. தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் 75 சிகிச்சைப் பெற்று, கடந்த வருடம் டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் கிளம்பியதால், அவரது மருத்துவமனையின் சிகிச்சை குறித்து விசாரிக்க வேண்டும் என எதிர்கட்சிகளும், அதிமுக தொண்டர்களும் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து […]

ஜெ மரணம் குறித்த விசாரணை ஆணையத்தின் பதவிக் காலம் 6 மாதம் நீட்டிப்பு

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் அடைந்ததாக கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து விசாரணை செய்ய அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையிலான விசாரணை ஆணையம் கடந்த செப்டம்பர் 25ம் தேதி தமிழக அரசால் அமைக்கப்பட்ட நிலையில் இந்த ஆணையம் தற்போது விறுவிறுப்பாக விசாரணையை நடத்தி வருகிறது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவரது அண்ணன் மகன் […]