நல்லாட்சி அரசு உருவாக்கப்பட்டமையால்தான் சர்வதேச குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை பெற்று சர்வதேசம் ஏற்றுக்கொள்ளும் நாடாக இலங்கையை மாற்றினோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கண்டி-கெட்டம்பே மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அத்தோடு, எத்தகைய சூழ்ச்சிகள் மற்றும் சவால்கள் வந்தாலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வளர்ச்சியை தடுக்க முடியாது எனவும், சுதந்திரக் கட்சி வெளிப்படையான …
Read More »மாயக்கல்லி விவகாரத்திற்கு விரைவில் தீர்வு – சிறுபான்மை தலைவர்களிடம் ஜனாதிபதி உறுதி
நல்லிணக்கத்தை குழப்பும் வகையில் மாயக்கல்லி மலையில் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகள் குறித்த உண்மைத் தன்மைகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கும் ஜனாதிபதிக்கும் இடையே நேற்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சிறுபான்மை சமூகத்தினர் ஒற்றுமையாக வாழ்ந்துவரும் …
Read More »2017 ஆம் ஆண்டிற்கான அகில இலங்கை தமிழ்மொழிதின விழா வடக்கில்
கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் அகில இலங்கை தமிழ் மொழித்தின விருது வழங்கல் விழா 2017 ஆம் ஆண்டிற்கான நிகழ்வு இம்முறை வட மாகாணத்தில் ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி நடாத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் வட மாகாண கல்விப்பணிமனையில் நடைபெற்றது. கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், மாகாண மேலதிக …
Read More »லங்கா சதொச விற்பனை நிலையங்கள் : ஜனாதிபதி திறந்து வைப்பு
அனைத்து பிரதேசங்களிலும் லங்கா சதொச விற்பனை நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயர்தரத்திலான உணவுப் பொருட்களை குறைந்த விலையில் பாவனையாளர்களுக்கு வழங்குவது இதன் நோக்கமாகும். இதற்கமைய, முதலாவது விற்பனை நிலையம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று மாலை கொஹவல நகரில் திறந்து வைக்கப்பட்டது. இதற்கிணைவாக இன்று நாடு பூராகவும் 52 விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தற்பொது நாடு பூராகவும் 380 லங்கா சதொச நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்தவருடத்தில் …
Read More »இரண்டு வாரங்களுக்குள் அரசியல், பொருளாதார ரீதியான முக்கிய தீர்மானங்கள்
இரண்டு வாரங்களுக்குள் அரசியல், பொருளாதார ரீதியான முக்கிய தீர்மானங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அரசியல், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய தீர்மானங்களை மேற்கொள்வார் என்று இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். அரசாங்கத்தினதும், அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தி எதிர்வரும் 4 ஆண்டுகளுக்குள் நாட்டை வலுவான முறையில் முன்னெடுத்துச் …
Read More »ஆற்ற வேண்டிய பணிகள் நிறையவே இருக்கின்றன: ஐ.நாவில் ஏற்றுக்கொண்டது ஸ்ரீலங்கா
ஆற்ற வேண்டிய பணிகள் நிறையவே இருக்கின்றன: ஐ.நாவில் ஏற்றுக்கொண்டது ஸ்ரீலங்கா மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து பணியாற்றி மக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஆக்கபூர்வ நடவடிக்கைகளில் ஈடுபட ஸ்ரீலங்கா உறுதி பூண்டுள்ளதாக வெளிவிவகார பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளதாகவும், எந்த நாட்டிலும் மனித உரிமைகள் தொடர்பான ஆவணமும் முழுமையானது இல்லை என பேரவை அறியும் எனவும் …
Read More »கிராமிய சக்தி வறுமை ஒழிப்புக்கு அமைச்சரவை அனுமதி
கிராமிய சக்தி வறுமை ஒழிப்புக்கு அமைச்சரவை அனுமதி அரசாங்கங்களின் பல்வேறு நடவடிக்கைகளினால் 1990ஆம் ஆண்டு 26.1வீதமாக ஆக இருந்த வறுமை மட்டமானது 2011ஆம் ஆண்டளவில் 6.7வீதமாக ஆக குறைந்தது. 2017ஆம் ஆண்டினை இலங்கையினை வறுமையிலிருந்து மீட்டெடுக்கும் ஆண்டாக பிரகடனப்படுத்தி பிரதேச மட்டத்தில் மேலும் வறுமை ஒழிப்புக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், செயற்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள கிராமிய சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் 2017ஆம் ஆண்டில் பிரதேச செயலக மட்டத்தில் வறுமை கோட்டிற்கு …
Read More »பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் திட்டங்களை வகுக்க வேண்டும்: ஜனாதிபதி மகளிர் தின வாழ்த்து செய்தி
பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் திட்டங்களை வகுக்க வேண்டும்: ஜனாதிபதி மகளிர் தின வாழ்த்து செய்தி நாட்டின் நிலையான அபிவிருத்தி முயற்சியில் பெண்களின் தனித்துவமும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும் வகையில் அரசாங்கம் திட்டங்களை வகுக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உலகலாவிய ரீதியில் இன்று (புதன்கிழமை) அனுஷ்டிக்கப்படும் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். அத்தோடு, முகாமைத்துவம் மற்றும் அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ளும் பொறிமுறையில் …
Read More »நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதே எமது இலக்கு: ஜனாதிபதி
நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதே எமது இலக்கு: ஜனாதிபதி நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தி மீண்டுமொரு யுத்தம் ஏற்படாத வகையில் அனைத்து மக்கள் மத்தியிலும் ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதே இந்த அரசின் நோக்கம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயமாக இந்தோனேஷியா சென்றுள்ள ஜனாதிபதி இந்தோனேஷியா வாழ் இலங்கையர்களை அங்குள்ள இலங்கை தூதுவர் அலுவலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் சந்தித்து உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். நல்லாட்சி அரசாங்கம் …
Read More »சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க போவதில்லை: ஜனாதிபதி மீண்டும் உறுதி
சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க போவதில்லை: ஜனாதிபதி மீண்டும் உறுதி இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் உறுதியாக தெரிவித்துள்ளார். கொழும்பு மன்றக் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்று சபை மற்றும் அகில இலங்கை செயற்குழு கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு …
Read More »