Sunday , December 22 2024
Home / Tag Archives: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

Tag Archives: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

பௌத்த தேரர்களை அரசியல் தலைவர்களே தீர்வுக்கு வழிப்படுத்த வேண்டும்!

“அரசியல் தீர்வுக்கு தமிழர் தரப்பில் இருந்து எந்த எதிர்ப்பும் இல்லை. மாறாக பௌத்த தேரர்களும் தென்னிலங்கை இனவாதிகளுமே தீர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். அவர்களை தெற்கு அரசியல் தலைவர்களே வழிப்படுத்த வேண்டும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் பேசி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதும் உங்களின் பொறுப்பு.” – இவ்வாறு பஸில் ராஜபக்ஷவிடம் நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் எடுத்துரைத்தார். இரண்டு நாள் பயணமாக வடக்குக்கு …

Read More »

யுத்த நிறைவே சம்பந்தனை சந்திக்க வைத்தது – மஹிந்த ராஜபக்ஷ

யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட காரணத்தினாலேயே தானும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனும் ஒரே மேடையில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற புத்தக வெளியீட்டு விழாவொன்றில், மஹிந்தவும் சம்பந்தனும் ஒரே மேடையில் சங்கமித்திருந்தனர். இந்நிகழ்வில் உரையாற்றிய போதே மஹிந்த மேற்குறித்தவாறு கூறியுள்ளார். அத்தோடு, யுத்தம் நிறைவடைந்தமையே நல்லிணக்கத்திற்கும் அடித்தளமிட்டதென குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அனைவருக்கும் சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்த தனக்கு, சுதந்திரம் பறிபோய்விட்டதெனவும் மஹிந்த …

Read More »

இராணுவத்தை சர்வதேசத்திடம் காட்டிக்கொடுக்கவே காணாமல்போனோர் சட்டமூலம்

இராணுவத்தையும், போர் வெற்றி வீரர்களையும் சர்வதேசத்திடம் காட்டிக்கொடுப்பதற்காகவே காணாமால்போனோர் அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். மல்வத்து பீடம் மற்றும் மாகாநாயகர்களுக்கு அவர் இன்று அனுப்பியுள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பமிட்டுள்ள காணாமல்போனர் சட்டமூலம் தொடர்பில் மல்வத்து பீடம் மற்றும் மாகாநாயக்க தேரர்களின் கவனம் செலுத்த வேண்டிய ஆறு காரணிகளாவது உள்ளன. சாட்சிகளைப் பெற்றுக்கொண்டு நீதிமன்றம் செல்ல முடியும், சர்வதேச ரீதயில்நிதியை பெற்றுக்கொள்ள …

Read More »