ஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி உத்தரவு! இன்றையதினம் புதிய பாராளுமன்ற சபை அமர்வு ஆரம்பிக்கும் நிகழ்வுக்கு இராணுவ கௌரவ அணிவகுப்பு நிகழ்வுகளை நிகழ்த்த வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் உத்தரவிடப்பட்டுள்ளது. சாதாரண சம்பிரதாயத்திற்கு அமைய ஜனாதிபதி குதிரைப்படை வீரர்களுடன் பாராளுமன்றத்திற்கு சமூகமளிக்க இருந்த நிலையில் , கோட்டாபய ராஜபக்ஷ அதனையும் ரத்து செய்துள்ளார். இதேவேளை , புதிய பாராளுமன்ற சபையின் தொடக்க விழாவை எளிமையான முறையில் நடத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாகவும் […]
Tag: ஜனாதிபதி
இன்று ஒரே மேடையில் கூடவுள்ள ஜனாதிபதி வேட்பாளர்கள்
இன்று ஒரே மேடையில் கூடவுள்ள ஜனாதிபதி வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் ஒரே மேடையில் உறுதிமொழி பெறும் நிகழ்ச்சி ஒன்று இன்று நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை மார்ச் 12 இயக்கம் மற்றும் எப்ரியல் இளைஞர் வலையமைப்பு இணைந்து ஏற்பாடு செயதுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னணி வேட்பாளர்களை தெரிவு செய்து சுகததாச மைதானத்திற்கு அழைத்து மக்களைப் […]
ஆசிரியர்களிடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை
வகுப்பறையில் ஆசிரியர்களுக்கு, கலாசார ரீதியிலான சிறுவர்களையன்றி, தொழில்நுட்ப ரீதியிலான பிள்ளைகளை தற்போது சந்திக்க நேரிடுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 557 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். கொழும்பில் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் இந்த நிகழ்வு இன்று நடைபெற்றது.
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை ஓரிரு தினத்தில் நியமிப்போம் – கபீர் ஹாசிம்
ஐக்கிய தேசிய கட்சி ஜனநாயக ரீதியில் செயற்படும் ஒரு கட்சி ஆகும். அந்த வகையில் குடும்ப ஆட்சியை கொண்டு நடத்தாத ஐக்கிய தேசிய கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் விரும்ப கூடிய அல்லது மக்கள் ஆதரிக்க கூடிய ஒரு வேட்பாளரை நிறுத்தும். அதற்கான சுப நேரம் ஓரிரு தினங்களில் வரும். அதன்போது வேட்பாளரை நாம் நியமிப்போம் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும், நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் […]
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க பின்வழியில் முயற்சிக்க கூடாது
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்குவதாக இருந்தால் அதுதொடர்பில் அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடியே மேற்கொள்ளவேண்டும். மாறாக பின்வழியால் அதனை மேற்கொள்ள இடமளிக்கமாட்டோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்குவது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையில் இடம்பெற்றுள்ள பேச்சுவார்த்தை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கோத்தா ஜனாதிபதியாக வருவதை விரும்பவில்லை
கோத்தபாய ராஜபக் ஜனாதிபதியாக வருவதை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் உண்மையில் விரும்பவில்லை. எமது உறவுகள் தற்போதுவரை வீதியில் அலைந்து திரிவதற்கும் அவரே காரணம் என அம்பாறை, மட்டக்களப்பு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர். கல்முனையில் நேற்று ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பு ஒன்றில் எதிர்கால ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் நியமனம் குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர். மேலும் கருத்து தெரிவிக்கையில், எங்களது […]
கம்போடியாவுக்கு பயணித்தார் ஜனாதிபதி!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கம்போடியாவுக்கு நான்கு நாள் அரசமுறைப் பயணமாக இன்று புறப்பட்டுள்ளார். ஜனாதிபதியை கம்போடியா நாட்டின் பிரதிப் பிரதமர் மற்றும் அந்நாட்டின் தகவல்துறை அமைச்சர் உள்ளிட்ட நாட்டின் உயர்மட்டப் பிரதிநிதிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச நிறுத்தப்படுவது உறுதியாகிவிட்டது என தனியார் ஊடகம் ஒன்று தகவலை தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 11 ம் திகதி இடம்பெறவுள்ள கட்சியின் மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கட்சியின் தலைமைப்பொறுப்பை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்வார் எனவும் அதன் பின்னர் அவர் அனேகமாக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பார் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் தெரிவித்துள்ளதாவது. இந்த சந்திப்பிற்கு முதல்நாள் பொதுஜன பெரமுனவின் […]
2020 இலும் ஜனாதிபதி யார்?
கடந்த 2005 ஆம் ஆண்டும் 2010 ஆம் ஆண்டும் 2015 ஆம் ஆண்டும் இந்த நாட்டில் ஜனாதிபதி யார் என்பதைத் தீர்மானித்தது ஜாதிக ஹெல உறுமய எனவும் 2020 ஆம் ஆண்டிலும் தாமே அதனைத் தீர்மானிப்பதாகவும் அக்கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். ஜாதிக ஹெல உறுமய கட்சியினால் நேற்று நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறினார். கடந்த காலத்தில் […]
ஜனாதிபதி யார்? கருஜெயசூரியவின் அறிவிப்பு வெளியானது…
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தான் தயார் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார். அதோடு, சிறுவயதில் தான் இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவை சென்று பார்ப்பதுண்டு என்றும், அவர் பதவி ஆசைகளிற்கு அடிபணியாமல் நாட்டிற்கு அவசியமான விடயங்களை நிறைவேற்றுவதற்கு தனக்கு பயிற்சியளித்ததாகவும் கூறியுள்ளார். சுத்தமான கரங்களுடனேயே தான் தனது அரசியலை ஆரம்பித்ததாகவும், அதேபோன்று கறைபடியாத கரங்களுடனேயே அரசியலில் இருந்து […]





